ஒலிம்பஸ் மலையை விட உயரமான கடலடி மலை - விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு

September 5, 2024

ஷ்மிட் ஓஷன் இன்ஸ்டிட்யூட்டை சேர்ந்த கடல் ஆய்வாளர்கள், கடலுக்கடியில் 3,109 மீட்டர் உயரமுள்ள ஒரு பெரிய கடல் மலையைக் கண்டுபிடித்துள்ளனர். சிலி கடற்கரையிலிருந்து 1,448 கிலோமீட்டர் தொலைவில், பசிபிக் பெருங்கடலில் இந்த கடலடி மலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. புர்ஜ் கலிஃபா கட்டிடத்தை விட 4 மடங்கு உயரமுள்ள இந்த கடலடி மலை, ஒலிம்பஸ் மலையை விட உயரமானது. புதிய வகை ஸ்க்விட் இனங்கள் மற்றும் "காஸ்பர்" ஆக்டோபஸ் போன்ற பல்வேறு கடல் வாழ் உயிரினங்களின் வாழிடமாக உள்ளது. இந்தப் […]

ஷ்மிட் ஓஷன் இன்ஸ்டிட்யூட்டை சேர்ந்த கடல் ஆய்வாளர்கள், கடலுக்கடியில் 3,109 மீட்டர் உயரமுள்ள ஒரு பெரிய கடல் மலையைக் கண்டுபிடித்துள்ளனர். சிலி கடற்கரையிலிருந்து 1,448 கிலோமீட்டர் தொலைவில், பசிபிக் பெருங்கடலில் இந்த கடலடி மலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

புர்ஜ் கலிஃபா கட்டிடத்தை விட 4 மடங்கு உயரமுள்ள இந்த கடலடி மலை, ஒலிம்பஸ் மலையை விட உயரமானது. புதிய வகை ஸ்க்விட் இனங்கள் மற்றும் "காஸ்பர்" ஆக்டோபஸ் போன்ற பல்வேறு கடல் வாழ் உயிரினங்களின் வாழிடமாக உள்ளது. இந்தப் பகுதி, நாஸ்கா ரிட்ஜ் என்று அழைக்கப்படுகிறது. கடந்த 2023 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட ஐ நா உடன்படிக்கையின்படி, இந்தப் பகுதி உலகின் முதல் கடல்சார் பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட உள்ளது. ஆராய்ச்சியாளர்கள், சோனார் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இந்த கடலடி மலையை விரிவாக ஆய்வு செய்து வருகின்றனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu