ஒடிசா மாநிலத்தில், சட்டமன்ற தேர்தல் நாடாளுமன்ற தேர்தலுடன் இணைந்து நடைபெற்றது. அந்த வகையில், இந்த தேர்தலில், ஒடிசாவில் ஆட்சியை கைப்பற்றும் நிலையில் பாஜக உள்ளது.
ஒடிசா மாநிலத்தில் மொத்தம் 147 தொகுதிகள் உள்ளன. அதன்படி, ஆட்சி அமைப்பதற்கு 74 தொகுதிகளில் வெற்றி பெற்றாக வேண்டும். வாக்கு எண்ணிக்கை நிறைவடையும் நேரத்தில், கிட்டத்தட்ட 78 இடங்களில் பாஜக முன்னிலையில் உள்ளது. பெரும்பான்மையான இடங்களில் வெற்றி உறுதி செய்யப்பட்டுள்ளதால், ஒடிசா மாநிலத்தில் பாஜக புதிதாக ஆட்சி அமைக்க உள்ளது. கடந்த 24 ஆண்டுகளாக பிஜு ஜனதா தளம் கட்சி ஒடிசாவை ஆண்டு வந்தது. முதலமைச்சர் பதவியில் நவீன் பட்நாயக் இருந்து வந்தார். இப்போது, முதல் முறையாக, ஒடிசாவில் பாஜக ஆட்சி அமைகிறது.