மெட்ரோ ரயில் நிலையங்களில் அலுவலகங்கள், வணிக வளாகம் அமைக்கலாம்

சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் தொழில் தொடங்க, வணிக வளாகம் மற்றும் அலுவலகங்கள் அமைக்கலாம் என மெட்ரோ ரயில் நிதி இயக்குநர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவன நிதி இயக்குநர் பிரசன்ன குமார் ஆச்சார்யா கூறுகையில், சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களிலும் அதனை சார்ந்த காலி இடங்களிலும் தொழில் தொடங்க, வணிக வளாகம் மற்றும் அலுவலகங்கள் அமைப்பதற்கு தேவையான இடவசதி உள்ளது. அதற்காக சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்ட முகவர்கள் உள்ளனர். நேரு […]

சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் தொழில் தொடங்க, வணிக வளாகம் மற்றும் அலுவலகங்கள் அமைக்கலாம் என மெட்ரோ ரயில் நிதி இயக்குநர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவன நிதி இயக்குநர் பிரசன்ன குமார் ஆச்சார்யா கூறுகையில், சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களிலும் அதனை சார்ந்த காலி இடங்களிலும் தொழில் தொடங்க, வணிக வளாகம் மற்றும் அலுவலகங்கள் அமைப்பதற்கு தேவையான இடவசதி உள்ளது. அதற்காக சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்ட முகவர்கள் உள்ளனர். நேரு பூங்கா, சைதாப்பேட்டை, அரும்பாக்கம், பச்சையப்பன் கல்லூரி, மத்திய சதுக்கம், மண்ணடி, விம்கோ நகர், கோயம்பேடு ஆகிய பகுதிகளில் மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு சொந்தமான இடங்களில் 3000 சதுர மீட்டர் முதல் 10,000 சதுர மீட்டர் வரை இடவசதி உள்ளது. இதுபோன்ற இடங்களில் அடுக்குமாடி வணிக வளாகங்கள், அலுவலக வளாகங்கள் அமைக்கலாம்.

இந்த இட வசதி பெற விருப்பம் உள்ளவர்கள், அங்கீகரிக்கப்பட்ட முகவர்களின் விவரங்களுக்கு சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் https://chennaimetrorail.org/wp-content/uploads/2023/05/List-of-Empanelled-Consultants.pdf இணையத்தள முகவரியை தொடர்பு கொள்ளலாம் என்று அவர் தெரிவித்துள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu