பிலிப்பைன்சில் கடலில் மூழ்கிய எண்ணெய் கப்பலில் இருந்து 16 பேர் மீட்கப்பட்டனர்.
பிலிப்பைன்சில் பாடாண் மாகாணத்தில் இருந்து இலோய்கா என்ற நகருக்கு டயக்ராம் நோவா என்ற எண்ணெய் கப்பல் சென்று கொண்டிருந்தது. அப்பொழுது தலைநகர் மணிலா அருகே சென்றபோது ராட்சத அலை ஒன்று அக்கப்பலை தாக்கியது. இதையடுத்து அங்கு மீட்பு படையினர் விரைந்தனர். அவர்கள் சேதமடைந்த கப்பலை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அந்த வகையில் கப்பலில் இருந்த 16 பணியாளர்களை அவர்கள் மீட்டனர். ஒருவர் மாயமாகியுள்ளார். அவரை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அந்தக் கப்பலை கடலுக்கு கொண்டுவர முயன்றனர். ஆனால் அவருடைய முயற்சி தோல்வியில் முடிந்தது.
அந்த கப்பல் கடலில் மூழ்கிக் கொண்டிருக்கிறது. அதிலிருந்து சுமார் 14 லட்சம் லிட்டர் எண்ணெய் கடலில் கலந்தது. எனவே அப்பகுதி முழுவதும் எண்ணெய் படலமாக காட்சி அளிக்கிறது. இதனால் கடல் வாழ் உயிரினங்களுக்கு பாதிப்பு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே கடலில் மிதக்கும் இந்த எண்ணெய் படலத்தை அகற்றும் முயற்சியில் மீட்பு படையினர் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர்.