ஒகேனக்கலில் நீர்வரத்து 55 ஆயிரம் கன அடியாக குறித்துள்ளது.
கர்நாடகா மற்றும் கேரள மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. இந்த நிலையில் கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ண சாகர் அணைகளில் இருந்து 38,315 கன அடி உபரி நீர் வெளியேற்றப்பட்டது. இதனால் ஒகேனக்கலில் நீர்வரத்து 75 ஆயிரம் கனஅடியாக அதிகரித்து இருந்த நிலையில் தற்போது நீரின் வரத்து 55 ஆயிரம் கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது. இருப்பினும் மெயின் அருவி, சினி ஃபால்ஸ், ஐந்தருவி ஆகியவற்றில் நீர்வரத்து ஐம்பதாயிரம் கன அடிக்கு மேல் இருப்பதால் சுற்றுலா பயணிகள் குளிக்கவும் பரிசல் இயக்கவும் 22 வது நாளாக தடை நீடித்து வருகிறது.