ஓலா எலக்ட்ரிக்கின் 5500 கோடி ரூபாய் ஐபிஓவுக்கு செபி ஒப்புதல்

June 20, 2024

இந்தியாவைப் பொறுத்தவரை மிகப் பெரிய மின்சார இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனம் ஓலா எலக்ட்ரிக் ஆகும். இந்த நிறுவனம், ஐபிஓ வெளியீட்டை திட்டமிட்டுள்ளது. இந்த நிலையில், ஐபிஓ வெளியீட்டில் 5500 கோடி ரூபாய் மதிப்பிலான புதிய பொது பங்குகளை வெளியிடுவதற்கு பங்குச் சந்தை ஒழுங்காற்று ஆணையமான செபி அனுமதி வழங்கியுள்ளது. இது தவிர, 9.52 கோடி பொது பங்குகள் சலுகை விலையில் ஐபிஓவின் போது விற்பனை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2023 டிசம்பரில், ஐபிஓ ஆவணங்களை […]

இந்தியாவைப் பொறுத்தவரை மிகப் பெரிய மின்சார இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனம் ஓலா எலக்ட்ரிக் ஆகும். இந்த நிறுவனம், ஐபிஓ வெளியீட்டை திட்டமிட்டுள்ளது. இந்த நிலையில், ஐபிஓ வெளியீட்டில் 5500 கோடி ரூபாய் மதிப்பிலான புதிய பொது பங்குகளை வெளியிடுவதற்கு பங்குச் சந்தை ஒழுங்காற்று ஆணையமான செபி அனுமதி வழங்கியுள்ளது. இது தவிர, 9.52 கோடி பொது பங்குகள் சலுகை விலையில் ஐபிஓவின் போது விற்பனை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2023 டிசம்பரில், ஐபிஓ ஆவணங்களை ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் சமர்ப்பித்தது. அதன் பிறகு, தொடர்ந்து பல்வேறு ஒப்புதல்கள் பெறப்பட்டு வருகிறது. தற்போது, புதிய பங்குகள் வெளியீடு மற்றும் சலுகை விலை பங்குகள் வெளியீடு ஆகியவற்றுக்கு செபியின் ஒப்புதல் கிடைத்துள்ளதாக ஓலா எலக்ட்ரிக் தெரிவித்துள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu