ஓலா எலக்ட்ரிக் மொபிலிட்டி நிறுவனம் இந்தியாவின் முன்னணி மின் வாகன உற்பத்தி நிறுவனமாகும். இந்த நிறுவனம், தனது இயங்கும் பங்குகளை பொதுமக்களிடம் முதன்முறையாக விற்பனை செய்யும் ஐபிஓவில் களமிறங்குகிறது. ஓலா எலக்ட்ரிக்கின் ஐபிஓ ஆகஸ்ட் 2ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 5ஆம் தேதி நிறைவடைகிறது. இந்த ஐபிஓ மூலம் நிறுவனம் ரூ.2,000 கோடி நிதியை திரட்ட இலக்கு நிர்ணயித்துள்ளது. ஒரு பங்கின் விலை ரூ.74 முதல் ரூ.76 வரை இருக்கும் என அறிவித்துள்ளது. இந்த ஐபிஓ மூலம் திரட்டப்படும் நிதி, நிறுவனத்தின் விரிவாக்கம் மற்றும் வளர்ச்சிக்காக பயன்படுத்தப்படும். முதலீட்டாளர்கள் குறைந்தபட்சம் 195 பங்குகளுக்கு ஏலம் எடுக்கலாம் என கூறப்பட்டுள்ளது.