ஓலா எலக்ட்ரிக் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பாவிஷ் அகர்வால், ஓஎன்டிசி நெட்வொர்க்கில் ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் அறிமுகமானதைத் தொடர்ந்து, கடை வைத்திருக்கும் அனைவரும் ஓலா எலக்ட்ரிக் தயாரிப்புகளை விற்பனை செய்யலாம் என்று அறிவித்துள்ளார்.
ஓலா எலக்ட்ரிக் சார்பில் இந்தியா முழுவதும் 800 க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. ஓஎன்டிசி மூலம் எதிர்கால வணிகத்தை முன்னிலைப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ள. அதே வேளையில், கடை வைத்திருக்கும் அனைவருமே ஓலா எலக்ட்ரிக் வாகனங்களை விற்பனை செய்யலாம் என்று அகர்வால் தெரிவித்துள்ளார். தொடர்ச்சியாக, ஓலா நிறுவனத்தின் புதுவித மின்சார வாகனங்கள் வெளியிடப்பட்டு வருவதாகவும் கூறினார்.