வெளிநாடுகளில் சேவையை நிறுத்தும் ஓலா நிறுவனம்

April 10, 2024

டாக்ஸி சேவையை வழங்கி வரும் ஓலா நிறுவனம், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளில் சேவைகளை நிறுத்த உள்ளதாக அறிவித்துள்ளது. ஓலா நிறுவனத்தின் இந்திய விரிவாக்கத்தில் அதிக கவனம் செலுத்தப்பட உள்ளதால், வெளிநாட்டு வணிகத்தில் இருந்து விலகுவதாக கூறப்பட்டுள்ளது. “உலக அளவில் மின்சார வாகன சந்தை அதிகரித்து வருகிறது. இந்தியாவை பொறுத்தவரை, இந்த துறையில் அதிக வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளன. அத்துடன், பயணச் சேவைகள் வழங்கும் துறையில் இந்தியாவில் அதிக லாபம் கிடைக்கிறது. வெளிநாடுகளில் மின்சார வாகன […]

டாக்ஸி சேவையை வழங்கி வரும் ஓலா நிறுவனம், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளில் சேவைகளை நிறுத்த உள்ளதாக அறிவித்துள்ளது. ஓலா நிறுவனத்தின் இந்திய விரிவாக்கத்தில் அதிக கவனம் செலுத்தப்பட உள்ளதால், வெளிநாட்டு வணிகத்தில் இருந்து விலகுவதாக கூறப்பட்டுள்ளது.

“உலக அளவில் மின்சார வாகன சந்தை அதிகரித்து வருகிறது. இந்தியாவை பொறுத்தவரை, இந்த துறையில் அதிக வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளன. அத்துடன், பயணச் சேவைகள் வழங்கும் துறையில் இந்தியாவில் அதிக லாபம் கிடைக்கிறது. வெளிநாடுகளில் மின்சார வாகன பயன்பாட்டு விதிகளில் அதிக நெருக்கடிகள் நிலவுகின்றன. மேலும், அங்கு சந்தை போட்டி அதிகரித்து வருகிறது. எனவே, வெளிநாட்டு வணிகத்திலிருந்து வெளியேறுகிறோம். குறிப்பாக, ஆஸ்திரேலியாவில் ஏப்ரல் 12 முதல் ஓலா சேவை நிறுத்தப்படுகிறது” - இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu