இணைய வர்த்தகத்தில் பிரபல நிறுவனமாக உள்ள ஓஎல்எக்ஸ், உலக அளவில் 800 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது. முன்னதாக, குறிப்பிட்ட சில இடங்களில் தனது வாகன வர்த்தகத்தை நிறுத்திய ஓ எல் எக்ஸ் குழுமம், தற்போது பணி நீக்கத்தை அறிவித்துள்ளது, ஊழியர்கள் இடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 6 மாதத்திற்கு முன்னர், 2023 ஆம் ஆண்டில், ஓஎல்எக்ஸ் நிறுவனத்தின் மறுசீரமைப்பு நடவடிக்கையின் பகுதியாக, கிட்டத்தட்ட 1500 பேர் நீக்கப்படலாம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன் பகுதியாக, தற்போதைய பணி நீக்க அறிவிப்பு வெளிவந்துள்ளது. மேலும், அர்ஜென்டினா, கொலம்பியா, மெக்சிகோ நாடுகளில் ஓஎல்எக்ஸ் வாகன வர்த்தகம் நிறுத்தப்படுவதாகவும், ஜூன் 14ஆம் தேதிக்குப் பிறகான புதிய விற்பனை ஒப்பந்தங்கள் செயல்படுத்தப்படாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.