10000 ஆண்டுகளுக்கு ஒரு முறை நிகழும் பிரகாசமான காமா வெடிப்பு - விஞ்ஞானிகள் பகிர்வு

விண்வெளியில், கடந்த அக்டோபர் மாதம், மிகப்பெரிய மற்றும் பிரகாசமான காமா வெடிப்பு நேர்ந்தது பதிவாகியுள்ளது. இந்நிலையில், இதுபோன்ற பிரகாசமான காமா வெடிப்பு 10000 ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே நிகழும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளன. மேலும், இதுவரை பதிவாகியுள்ள காமா வெடிப்புகளை விட இது 70 மடங்கு பிரகாசமாக இருந்ததாக கூறியுள்ளனர். நாசா விஞ்ஞானிகள், அக்டோபர் மாதத்தில் பதிவான காமா வெடிப்பை, பிரைட்டெஸ்ட் ஆப் ஆல் டைம் (BOAT) என்று குறிப்பிட்டுள்ளனர். இது பூமியிலிருந்து 2 பில்லியன் […]

விண்வெளியில், கடந்த அக்டோபர் மாதம், மிகப்பெரிய மற்றும் பிரகாசமான காமா வெடிப்பு நேர்ந்தது பதிவாகியுள்ளது. இந்நிலையில், இதுபோன்ற பிரகாசமான காமா வெடிப்பு 10000 ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே நிகழும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளன. மேலும், இதுவரை பதிவாகியுள்ள காமா வெடிப்புகளை விட இது 70 மடங்கு பிரகாசமாக இருந்ததாக கூறியுள்ளனர்.

நாசா விஞ்ஞானிகள், அக்டோபர் மாதத்தில் பதிவான காமா வெடிப்பை, பிரைட்டெஸ்ட் ஆப் ஆல் டைம் (BOAT) என்று குறிப்பிட்டுள்ளனர். இது பூமியிலிருந்து 2 பில்லியன் ஒளி ஆண்டுகள் தொலைவில் நிகழ்ந்ததாகவும், விண்வெளியில் உள்ள பல கேலக்ஸிகளை இது ஒளியால் நிரப்பியதாகவும் தெரிவித்துள்ளனர். மேலும், 700 மற்றும் 61000 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள தூசிகளில் இருந்து கிடைத்த எதிரொலி மூலம், இது கண்டுபிடிக்கப்பட்டதாக விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். மேலும். மனித நாகரீகம் தொடங்கிய காலத்தில் இருந்து, பூமியைத் தாக்கிய காமா வெடிப்புகளில் இதுவே பிரகாசமானது என்று தெரிவித்துள்ளனர். இதற்கு GRB 221009A என்று பெயரிடப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu