ககன்யான் விண்வெளி வீரர் ஆகஸ்டில் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு பயணம்

மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் இந்தியாவின் ககன்யான் விண்வெளி திட்டத்தில் 4 விண்வெளி வீரர்கள் பயணப்பட உள்ளனர். அவர்களில் ஒருவரை சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு (ISS) பயிற்சி மற்றும் அறிவியல் சோதனைகளுக்காக அனுப்ப நாசா மற்றும் இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. வரும் ஆகஸ்ட் மாதத்தில் இது நிகழும் என்று மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார். இது இந்தியாவின் மனித விண்வெளிப் பயணத்தில் ஒரு முக்கிய மைல்கல்லாகும். இந்த ககன்யான் திட்டக்குழு உறுப்பினர், சர்வதேச விண்வெளி மையத்தில் ஒரு வாரம் […]

மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் இந்தியாவின் ககன்யான் விண்வெளி திட்டத்தில் 4 விண்வெளி வீரர்கள் பயணப்பட உள்ளனர். அவர்களில் ஒருவரை சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு (ISS) பயிற்சி மற்றும் அறிவியல் சோதனைகளுக்காக அனுப்ப நாசா மற்றும் இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. வரும் ஆகஸ்ட் மாதத்தில் இது நிகழும் என்று மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார். இது இந்தியாவின் மனித விண்வெளிப் பயணத்தில் ஒரு முக்கிய மைல்கல்லாகும். இந்த ககன்யான் திட்டக்குழு உறுப்பினர், சர்வதேச விண்வெளி மையத்தில் ஒரு வாரம் தங்கி, பல முக்கியமான அனுபவங்களைப் பெறுவதுடன், பல்வேறு ஆராய்ச்சிகளையும் மேற்கொள்வார். இந்தியா மற்றும் சர்வதேச வெண்வெளி மையம் இடையேயான இந்த ஒத்துழைப்பு, இந்தியா தனக்கென ஒரு விண்வெளி நிலையத்தை உருவாக்கும் திட்டத்திற்கு பெரிதும் உதவும் என்று கூறப்படுகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu