ஒரு வரி செய்திகள்

உலகம்

Jul 22, 2024

அமெரிக்க அதிபர் தேர்தல் போட்டியில் இருந்து விலகுவதாக ஜோ பைடன் அறிவித்தார்

சீனாவில் பாலம் இடிந்து விபத்தானதில் பலி எண்ணிக்கை 20 ஆக உயர்ந்தது

ஹவுதி கட்டுப்பாட்டில் உள்ள அல் ஹூடைடா மீது டிரோன் மூலம் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி உள்ளது.

குவைத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து ஏற்பட்டதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 இந்தியர்கள் உயிரிழந்தனர்

நேபாள பிரதமர் சர்மா ஒலி நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றார்

Jul 10, 2024

பூச்சிகளை மனிதர்கள் உணவாக உட்கொள்ள சிங்கப்பூர் அரசு அனுமதி வழங்கியுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

நட்பை பயன்படுத்தி ரஷியாவிடம் போரை நிறுத்த வேண்டும் என இந்தியாவை அமெரிக்கா வலியுறுத்துகிறது

காசா பள்ளி மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதில் 29 பேர் பலியாகினர்

அதிபர் புதின் ரஷியாவின் உயர்ந்த விருதை பிரதமர் மோடிக்கு அளித்து கவுரவித்தார்.

இங்கிலாந்தில் ரிஷி சுனக் நிழல் அமைச்சரவையை அறிவித்தார்

May 20, 2024

ஹெலிகாப்டர் விபத்தில் ஈரான் அதிபர் இப்ராகிம் ரைசி உயிரிழந்தார்

ஈரான் நாட்டின் புதிய காபந்து அதிபராக துணை அதிபர் முகமது முக்பர் விரைவில் பொறுப்பேற்க உள்ளார்.

வான்பரப்பினுள் ஊடுருவி தாக்குதல் நடத்த முயன்ற உக்ரைன் ராணுவ தளவாடங்களை ரஷிய ராணுவத்தினர் சுட்டு வீழ்த்தினர்.

வடக்கு ஆப்கானிஸ்தானில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 47 பேர் உயிரிழந்தனர்

கிர்கிஸ்தான் நாட்டு தலைநகர் பிஷ்கெக்கில் உள்ள மருத்துவப் பல்கலைக்கழகங்களில் படிக்கும் கிர்கிஸ்தான் மற்றும் எகிப்து மாணவர்களுக்கிடையே மோதல் வெடித்தது

Apr 23, 2024

தைவானில் ரிக்டர் அளவில் 6.3 ஆக நிலநடுக்கம் பதிவானது

நவாஸ் ஷெரீப் 5 நாட்கள் தனிப்பட்ட பயணமாக சீனா செல்கிறார்

இந்தோனேசிய விமான நிலையம் ஒரு வாரத்துக்கு பிறகு திறக்கப்பட்டது

பாகிஸ்தானில் இருந்து அரிசி இறக்குமதி செய்ய தடை விதிக்கப்படும் என ரஷியா கூறியுள்ளது

ஈரான் அதிபர் இப்ராஹிம் ரெய்சி பாகிஸ்தானில் நேற்று சுற்றுப்பயணம் மேற்கொண்டார்

Apr 20, 2024

பாகிஸ்தானில் கனமழைக்கு 87 பேர் உயிரிழந்தனர்

சிரியாவில் துப்பாக்கிச்சூடு நடந்ததில் அரசின் ஆதரவு படையைச் சேர்ந்த 22 பேர் பேர் பலியாகினர்

சிரியாவின் வடக்குப் பகுதியில் உள்ள வான் பாதுகாப்பு அமைப்பை குறிவைத்து தாக்குதல் நடத்தியுள்ளது.

ஐ.நா. சபையில் பாலஸ்தீனத்தை உறுப்பினராக்கும் தீர்மானத்தை அமெரிக்கா தடுத்தது

உக்ரைனுக்கு உடனடியாக ஆயுத உதவி வழங்க ஜி20 நாடுகளை ஐரோப்பிய யூனியன் வலியுறுத்தி வருகிறது

Mar 27, 2024

பிஜி தீவில் 6.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் இன்று ஏற்பட்டது.

அமெரிக்க பாலம் விபத்தில் கப்பலில் 22 இந்திய மாலுமிகள் இருந்ததாக கப்பல் நிறுவனம் கூறியது

முக்கிய கோரிக்கையை இஸ்ரேல் புறக்கணித்ததால் போர் நிறுத்த ஒப்பந்தத்தை நிராகரிப்பதாக ஹமாஸ் தெரிவித்துள்ளது.

பாகிஸ்தானில் நடந்த தற்கொலைப்படை தாக்குதலில் 5 சீனர்கள் பலியாகினர்

பலுசிஸ்தானில் பாகிஸ்தான் கடற்படை விமான தளம் மீது தாக்க முயன்ற 6 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர்

Mar 21, 2024

உக்ரேனுக்கு முடக்கப்பட்டுள்ள ரஷ்ய நிதியை ஐரோப்பிய யூனியன் வழங்குவது திருட்டு செயலுக்கு ஒப்பாகும் என்று ரஷ்யா கண்டனம் தெரிவித்துள்ளது

உக்ரைன் - ரஷ்யா போருக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்பட வேண்டும் என்று பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்

காசா மருத்துவமனைக்கு வெளியே பல்வேறு தாக்குதலில் 28 பேர் பலியாகினர்

ஜூலை மாதம் நடைபெற உள்ள ஒலிம்பிக்ஸ் போட்டிகளின் தொடக்க அணிவகுப்பில் பெல்லரஸ் மற்றும் ரஷ்யா நாடுகளின் வீரர்கள் பங்கேற்க மாட்டார்கள் என்று சர்வதேச ஒலிம்பிக்ஸ் கமிட்டி கூறியுள்ளது

உலக தலைவர்கள் புதினுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டாம் என நவால்னி மனைவி வலியுறுத்தி வருகிறார்

Feb 07, 2024

ஆஸ்திரேலிய மனித உரிமைகள் ஆணையத்தின் இனப் பாகுபாடு தடுப்புப் பிரிவு ஆணையராக இந்திய வம்சாவளியைச் சோ்ந்த கிரிதரண் சிவராமன் நியமிக்கப்பட்டுள்ளாா்.

ஈரான் ஆதரவு ஹவுதி கிளர்ச்சியாளர்களால் செங்கடலில் இரண்டு கப்பல்கள் தாக்கப்பட்டன.

சிலியின் முன்னாள் அதிபர் செபாஸ்டியன் பினேரா ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தார்

டொனால்ட் டிரம்ப் 2020 தேர்தல் சீர்குலைவு குற்றச்சாட்டுகளில் இருந்து விடுபடவில்லை என அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பளித்தது

சிங்கப்பூரில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த போலீஸ்காரர் தற்கொலை செய்து கொண்டதையடுத்து, அதிகாரிகளிடையே இனவெறி குறித்து காவல்துறை விசாரணை நடத்துகிறது

Dec 29, 2023

சீனாவின் புதிய பாதுகாப்பு அமைச்சராக டோங் ஜுன் நியமிக்கப்பட்டுள்ளார்

பாலஸ்தீன மக்கள் தொடர்ந்து கொல்லப்படும் நேரத்தில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் வேண்டாம் என பாகிஸ்தான் அரசு முடிவு செய்துள்ளது.

இஸ்ரேலின் தாக்குதலில் நாளுக்கு நாள் பலியாகும் பொதுமக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

கனடாவில் இந்து கோவில் தலைவர் மீது மற்றொரு தாக்குதல் நடைபெற்றது

பயங்கரவாதி ஹபீஸை நாடு கடத்துமாறு பாகிஸ்தானிடம் இந்தியா முறைப்படி கோரிக்கை விடுத்துள்ளது.

Nov 30, 2023

அமெரிக்க வெளியுறவுத் துறை முன்னாள் செயலாளர் ஹென்றி கிஸ்ஸிங்கர் நேற்று காலமானார்.

கட்சித் தலைவர் பதவிக்கு இம்ரான் கான் போட்டியிடப் போவதில்லை என அறிவித்தார்

ஸ்பெயின் நாட்டில் காடலோனியாவில் தண்ணீர்ப் பஞ்சம் ஏற்பட்டுள்ளது

எச் 1 பி விசாக்களை புதுப்பிக்கும் புதிய நடைமுறைகளை அமெரிக்கா அறிமுகம் செய்கிறது

துபாயில் நடைபெறும் ஐ.நா காலநிலை மாநாட்டில் போப் ஆண்டவர் பங்கேற்க மாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Nov 29, 2023

காஸாவில் 24 மணி நேரத்தில் 160 பாலஸ்தீனியர்களின் உடல்கள் மீட்கப்பட்டது

ரஷியாவில் உளவுக் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள அமெரிக்க செய்தியாளா் எவான் கொ்ஷ்கோவிச்சின் சிறைக் காவல் ஜனவரி மாதம் வரை நீட்டிக்கப்பட்டது

நேற்று இஸ்ரேலில் இருந்து 30 பாலஸ்தீனியர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.

உளவு செயற்கைக்கோள் மூலம் வெள்ளை மாளிகை, பென்டகனை படம் எடுத்தது வடகொரியா

பல பன்னாட்டு நிறுவனங்கள் எக்ஸ் வலைதளத்தில் விளம்பரங்களை வெளியிடுவதை குறைத்தன.

Nov 04, 2023

நேபாளத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் - பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு

பாகிஸ்தானில் போலீசார் மீது வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டதில் 5 பேர் பலியாகினர்

ஈரானிலுள்ள போதைப் பொருள் அடிமைகள் மறுவாழ்வு மையத்தில் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட தீவிபத்தில் 32 போ் உயிரிழந்தனா்.

கிரீஸில் ஈவியா தீவில் நேற்று 5.1 என்ற ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது

இஸ்ரேல் தாக்குதலில் 14 பாலஸ்தீனியர்கள் பலி என ஹமாஸ் அறிவித்தது

Nov 02, 2023

அகதிகள் முகாம் மீதான தாக்குதல் போர்க்குற்றத்துக்கு சமமானது - ஐ.நா.

இந்தோனேசியாவின் திமோர் தீவில் இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 6.1ஆக பதிவானது.

இஸ்ரேலின் நோக்கம், காசாவை ஆக்ரமித்து தங்கள் நாட்டின் எல்லைகளை விரிவுபடுத்தி தங்கள் நாட்டின் குடியமர்வை அங்கு அதிகரிப்பதுதான் - ஈரான்

இஸ்ரேல் நடத்திய அகதிகள் முகாம் மீதான தாக்குதலில் 195 பேர் பலி என ஹமாஸ் அமைப்பு தகவல்

நைஜீரியாவில் கிராமத்துக்குள் புகுந்து 37 பேரை பயங்கரவாதிகள் சுட்டுக்கொன்றனர்

Oct 14, 2023

ஹமாஸ் இடையேயான போரில் பலியானோர் எண்ணிக்கை 3 ஆயிரத்தை கடந்தது.

பிரான்சில் தடையை மீறி நடந்த பாலஸ்தீன ஆதரவு பேரணியில் வன்முறை வெடித்தது.

ஜெர்மனியில் சாலையில் வேன் கவிழ்ந்து விபத்தில் 7 அகதிகள் உயிரிழந்தனர்.

இஸ்ரேலில் சிக்கியுள்ள 1,600 பேரை விமானங்கள் மூலம் மீட்க ஆஸ்திரேலியா முயற்சி செய்கிறது

வடக்கு ஆப்கானிஸ்தானில் உள்ள மசூதியில் நடந்த தற்கொலை வெடிகுண்டு தாக்குதலில் 7 பேர் கொல்லப்பட்டனர்.

Sep 25, 2023

கனடாவில் படிக்கும் இந்திய மாணவர்களின் பெற்றோர் பாதுகாப்பு நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர்

உலகிலேயே மிக பெரிய இந்து கோயில், அமெரிக்காவில் அடுத்த மாதம் திறக்கப்படும்

இங்கிலாந்து சுற்றுச்சூழலை காப்பதில் இலக்கை மாற்றுகிறது என பிரதமர் சுனக்கை டிரம்ப் பாராட்டுகிறார்

அமெரிக்காவில் வணிக வளாகம் அருகே துப்பாக்கி சூடு - 3 பேர் பலி

வளர்ச்சி சார்ந்த சவால்களை எதிர்கொள்ள இந்தியா ஒத்துழைக்கும் - மத்திய மந்திரி ஜெய்சங்கர்

Sep 13, 2023

இந்திய-மத்திய கிழக்கு-ஐரோப்பிய பொருளாதார வழித்தடத்தால் ரஷ்யாவுக்கு பலன் ஏற்படும் என அதிபர் புதின் தெரிவித்தார்.

டெல்லியில் நடந்த ஜி 20 உச்சி மாநாட்டில் இந்தியா, கிழக்கு மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கான கப்பல் மற்றும் ரயில் இணைப்புக்கான ஒரு வழித்தடம் தொடங்கப்படும் என்று ஒப்பந்தம் அறிவிக்கப்பட்டது. இதனை அமெரிக்கா, சவுதி அரேபியா மற்றும் ஐரோப்பிய யூனியன் கூட்டாக அறிவித்தன. இந்த திட்டம் இந்தியா, சவுதி அரேபியா, பிரான்ஸ், இத்தாலி, ஐக்கிய அரபு அமீரகம், ஐரோப்பிய யூனியன், ஜெர்மனி மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளுடன் தொடர்புடைய உள்கட்டமைப்பு ஒத்துழைப்புக்கான சிறந்த திட்டமாகும்.

இந்நிலையில் இதுகுறித்து ரஷ்ய அதிபர் புடின் கூறியதாவது, புதிய பொருளாதாரம் வழித்தடம் உருவாக்கத்திற்கான ஒப்பந்தத்தில் சவுதி அரேபியா, யூனியன் மற்றும் இந்தியாவுடன் அமெரிக்காவும் இணைந்துள்ளது. இதில் இதனால் அமெரிக்காவுக்கு பலன் கிடைக்கும் என்று நான் எண்ணவில்லை. எங்களுடைய வடக்கு தெற்கு திட்டத்துடன் கூடுதலாக இந்த வழித்தடம் சரக்கு போக்குவரத்துக்கு உதவும் என்றார். இதில் எங்களுக்கு எந்த தடையும் ஏற்படப் போவதில்லை. இந்த திட்டம் மூலம் ரஷ்யாவுக்கே பலன் அதிகம். இந்த திட்டம் ரஷ்யாவின் தளவாடப் போக்குவரத்தின் வளர்ச்சிக்கு உதவும் என்று தெரிவித்தார்.

Sep 06, 2023

சூடானில் உள்நாட்டு போரால் 48 லட்சம் பேர் இடம்பெயர்ந்தனர் - ஐ.நா. சபை

பிரேசிலில் புயல் காரணமாக சுமார் 60 நகரங்கள் பாதிப்புக்குள்ளானது. 21 பேர் பலியாகினர்.

அதிபர் ஜோ பைடன் ஜி20 மாநாட்டில் பங்கேற்பது உறுதி - வெள்ளை மாளிகை அறிவிப்பு

சீனப் பெருஞ்சுவரை சேதப்படுத்திய 2 பேர் கைது.

ரஷியாவிற்கு ஆயுதங்களை வழங்கினால் விளைவுகளை சந்திக்க நேரிடும் - வடகொரியாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை

Aug 30, 2023

அமெரிக்காவை நரகத்தை நோக்கி நகர்த்துகிறார் பைடன் - டொனால்ட் டிரம்ப்

விலை உயர்வை கட்டுப்படுத்த இந்தியாவில் இருந்து 9.20 கோடி முட்டைகள் இறக்குமதி செய்யப்படும் - இலங்கை

உக்ரைன் மீது ரஷியா நடத்திய குண்டு வீச்சில் பொது மக்கள் 2 பேர் உயிரிழந்தனர்.

சைபர் வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கானின் நீதிமன்ற காவலை செப்டம்பர் 13ஆம் தேதி வரை நீட்டித்து இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

ராணுவத்துக்கான செலவை அதிகரிக்க ஜப்பான் முடிவு செய்துள்ளது.

Jul 24, 2023

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாவுக்கு நேற்று அறுவை சிகிச்சை மூலமாக பேஸ்மேக்கர் கருவி பொருத்தப்பட்டது.

வட கொரியாவுக்கு எதிரான பலத்தைக் காட்டுவதற்காக அமெரிக்கா மற்றொரு நீர்மூழ்கிக் கப்பலை தென் கொரியாவுக்கு அனுப்பின.

பாகிஸ்தானின் பிரதமர் ஷாபாஸ் ஷெரீஃப் பதவி காலம் அடுத்த மாதம் நிறைவடைவதையடுத்து, இடைக்கால பிரதமராக நிதி அமைச்சர் இஷாக் தார் நியமிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

நீண்ட கால ஆட்சியாளர் பெருமையை பெற்றுள்ள கம்போடியா பிரதமர் ஹூன் சென் நேற்று நடந்த‌ தேர்தலில் மீண்டும் வெற்றி பெறுவார் என்று கூற பக்கப்படுகிறது.

கிரீஸ் காட்டு தீயினால் சுற்றுலாப் பயணிகள் பிரபலமான இடங்களான ரோட்ஸ் மற்றும் கோர்புவிலிருந்து வெளியேறுகிறார்கள்.

Jun 22, 2023

கருக்கலைப்பு மாத்திரைகளை பரிந்துரைக்கும் மருத்துவர்களைப் பாதுகாப்பதற்கான மசோதாவை நியூயார்க் நிறைவேற்றியது.

இரண்டு தலாய் லாமா நெருக்கடியைத் தவிர்க்க சீனாவிற்கு திபெத் தலைவர் அழைப்பு

பாரிசில் அடுக்குமாடி கட்டிடத்தில் தீ விபத்து - 24 பேர் காயம்

விண்வெளி வீரர் சுல்தான் அல் நெயாடி விண்வெளியில் யோகா செய்யும் படத்தை வெளியிட்டார்.

மியான்மரில் 3வது நிலஅதிர்வு .4.5 ரிக்டர் அளவில் பதிவானது.

May 31, 2023

பணம் செலுத்தாததற்காக பாகிஸ்தான் ஏர்லைன்ஸ் ஜெட் விமானம் மலேசியாவில் பறிமுதல் செய்யப்பட்டது.

தேடப்பட்ட ஜெர்மன் மலையேற்ற வீரரின் உடல் காஞ்சன்ஜங்கா சிகரத்திற்கு கீழே கண்டுபிடிக்கப்பட்டது.

தலாய் லாமாவுக்கு எதிராக சீனா 'ஸ்மியர் பிரச்சாரத்தை' துவக்கியது - அறிக்கை.

பிடனை தாக்கியதாக குற்றம் சாட்டப்பட்ட பெண் ரஷ்ய குடியுரிமை கேட்டு கோரிக்கை.

பாகிஸ்தானில் வரும் மாதங்களில் உணவுப் பற்றாக்குறை உயர வாய்ப்புள்ளது - அறிக்கை

May 29, 2023

பெலாரஷ்ய ஜனாதிபதி புடினை சந்தித்த பிறகு மருத்துவமனைக்கு விரைந்தார் - அறிக்கை

துருக்கி அதிபராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட எர்டோகனுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார்

அமெரிக்க பில்லியனர் ஒருவர் பட்டமளிப்பு விழாவில் ஒவ்வொரு மாணவருக்கும் 1,000 டாலர்கள் பரிசு தொகை வழங்கினார்.

ஒப்பனை அறுவை சிகிச்சை செய்வது பூஞ்சை வெடிப்புக்கு வழிவகுக்கும்- அமெரிக்கா மற்றும் மெக்சிகோவில் எச்சரிக்கை

சீனாவின் முதல் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட விமானம் C919 அதன் முதல் விமானத்தை உருவாக்குகிறது.

Apr 06, 2023

ஈரான் வளைகுடா நாடுகளுடனான உறவுகளை மேம்படுத்த முதல்முறையாக ஐக்கிய அரபு அமீரக தூதரை 2016 முதல் நியமித்தது.

ஜெலன்ஸ்கி நட்பு நாடுகளுக்கு நன்றி தெரிவிக்கவும் உக்ரேனியர்களை சந்திக்கவும் போலந்துக்கு வருகை தந்தார்

ஜெருசலேம் அல்-அக்ஸா மசூதியில் பாலஸ்தீன வழிபாட்டாளர்களுடன் இஸ்ரேல் போலீசார் மோதல்

குரான் எரிப்பு போராட்டத்திற்கு விதிக்கப்பட்ட தடையை ஸ்வீடன் நீதிமன்றம் ரத்து செய்தது.

அமெரிக்கா மீதான சிப் ஏற்றுமதி தடைகளை பிரிக்க சீனா WTO வை வலியுறுத்துகிறது

Mar 31, 2023

பின்லாந்து நேட்டோவில் இணைவதற்கு துருக்கி ஒப்புதல் அளித்துள்ளது

இங்கிலாந்து பெண் 3 வருடங்கள் கூடாரத்தில் உறங்கி, தொண்டுக்காக நிதி திரட்டி உலக சாதனை படைத்துள்ளார்.

மினசோட்டாவில் எத்தனால் ஏற்றிச் சென்ற அமெரிக்க ரயில் தடம் புரண்டது. பல பெட்டிகளில் தீப்பிடித்தது

புடினின் நண்பருக்கு பணத்தை மாற்றியதற்காக சுவிட்சர்லாந்து அரசு 4 வங்கியாளர்களை குற்றவாளிகளாக்கியுள்ளது.

கருக்கலைப்பு தொடர்பான பயணத் தடையை அறிமுகப்படுத்திய முதல் அமெரிக்க மாநிலமாக இடாஹோ ஆனது

Mar 31, 2023

பாகிஸ்தான் அரசின் ட்விட்டர் கணக்கு இந்தியாவில் முடக்கம் செய்யப்பட்டுள்ளது

மன்னர் 3ம் சார்லஸ் ஜெர்மனி வருகை

மார்வல் தலைவர் இகே பேர்ல்முத்தர் டிஸ்னியில் இருந்து நீக்கம்

அபுதாபி பட்டத்து இளவரசராக ஷேக் காலித் நியமனம்

ஹெச் 1பி விசாதாரர்களின் கணவன் அல்லது மனைவி அமெரிக்காவில் பணி செய்ய அனுமதி

Mar 30, 2023

ஹவாய் கடற்கரையில் டால்பின்களை துன்புறுத்தியதாக 33 நீச்சல் வீரர்கள் மீது குற்றச்சாட்டு

போல்சனாரோ இன்று பிரேசிலுக்குத் திரும்புகிறார்.

பயிற்சிப் பணியின் போது 2 அமெரிக்க ராணுவ ஹெலிகாப்டர்கள் விபத்துக்குள்ளானது.

ஐரோப்பாவில் அரசியல் விளம்பரங்கள் மீதான தடையை மெட்டா ஆய்வு செய்கிறது - அறிக்கை

பிலிப்பைன்ஸ் சொகுசு கப்பலில் தீ விபத்து - 31 பேர் பலி.

Mar 30, 2023

இந்தியாவில் உள்ள பாகிஸ்தான் அரசின் அதிகாரப்பூர்வ கணக்கை ட்விட்டர் முடக்கியுள்ளது

போப் பிரான்சிஸ் சுவாச நோய் காரணமாக ரோம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அஜய் பங்கா உலக வங்கியின் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்

அமெரிக்க போர்க்கப்பல் தென் கொரியாவிற்கு சென்றதையடுத்து கிம் ஜாங் உன் புதிய அணு ஆயுதங்களை வெளியிட்டார்

மெக்சிகோ அகதிகள் முகாமில் நடந்த தீ விபத்து குறித்து தீவிர விசாரணை.

Mar 30, 2023

மெக்சிகோ அகதிகள் முகாமில் நீ விபத்து ஏற்பட்டபோது காவலர்கள் அலட்சியமாக செல்லும் வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

பள்ளி துப்பாக்கிச்சூடு இடுகை காரணமாக ட்விட்டர் அமெரிக்க தலைவர்களின் கணக்கைக் கட்டுப்படுத்துகிறது

சவுதியும் ஷாங்காயும் ஒத்துழைப்பு அமைப்பில் இணைகிறது

இம்ரான்கானுக்கு ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்டு - பாகிஸ்தான் நீதிமன்றம் தீர்ப்பு

செயற்கை நுண்ணறிவு சார்ந்த கண்டுபிடிப்புகளுக்கு முன் வல்லுநர்கள் பாதுகாப்பு நெறிமுறைகளை மேற்கொள்கின்றனர் - எலோன் மஸ்க்

Mar 29, 2023

H-1B, L-1 விசா திட்டத்தை சீர்திருத்த மசோதாவை அமெரிக்கா அறிமுகப்படுத்துகிறது

விசா நேர்காணல் காத்திருப்பு நேரம் காரணமாக அமெரிக்காவிற்கு வருகை தரும் இந்தியர்கள் 60% குறைப்பு

ட்விட்டர் ப்ளுடிக் சந்தாதாரர்களில் பாதி பேருக்கு 1,000க்கும் குறைவான பின்தொடர்பவர்கள் உள்ளனர்

நண்பர் கொலை தொடர்பான வழக்கில் தென்னாப்பிரிக்க தடகள வீரர் ஆஸ்கார் பிஸ்டோரியஸ் ஜாமின் பெற உள்ளார்.

ஒடிசா பேரிடர் கால நடவடிக்கைகளுக்கு 100 மில்லியன் டாலர் கடன் உதவி - உலக வங்கி

Mar 25, 2023

சிரியாவில் வான்வழித் தாக்குதல் நடத்தியதற்காக ஈரானை பிடன் எச்சரித்தார்

சான்பிரான்சிஸ்கோ தூதரகத்தில் இந்தியாவுக்கு ஆதரவாக இந்திய அமெரிக்கர்கள் பேரணி

ரஷ்ய ஒலிம்பிக்கை புறக்கணிக்க உக்ரைன் தொடர்ந்து வலியுறுத்தல்

காபுல் விசாவுக்கு இந்தியா தடை விதித்ததால் ஆப்கன் குடும்பங்கள் சோகத்தில் மூழ்கின.

நான் சீனாவை பாராட்டுகிறேன் - கனடா நாடாளுமன்றத்தில் ஜோ பைடன் கேலி

Jan 10, 2023

பாகிஸ்தானுக்கு வெள்ள மீட்பு, மறுசீமைப்புக்கு உதவியாக 100 மில்லியன் டாலர்களை அமெரிக்கா அறிவித்துள்ளது.

பிரேசிலின் போல்சனாரோ அமெரிக்க மருத்துவமனை படுக்கையில் இருந்து புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார்.

தனியார் ரஷ்ய ஒளிபரப்பு நிறுவனம் நெதர்லாந்தில் 5 ஆண்டு உரிமத்தைப் பெறுகிறது.

லத்தீன் மீதான அமெரிக்காவின் அவமதிப்பை ஜோ பிடன் முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் - மெக்சிகோ ஜனாதிபதி

பெருவில் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்களில் 12 பேர் கொல்லப்பட்டனர்.

Jan 09, 2023

சீனாவின் ஹெனான் மாகாணத்தில் 90% பேர் கோவிட் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் - அதிகாரி

தைவானில் உள்ள எவர்கிரீன் மரைன் கார்ப்பரேஷன் நிறுவனம் அதன் ஊழியர்களில் சிலருக்கு 4 வ௫ட சம்பளத்தை போனஸாக வழங்குகிறது.

ஆஸ்திரேலியாவின் டெஸ்ட் கிரிக்கெட் வீரரான நார்மா வைட்மேன் 86 வயதில் காலமானார்

மெட்டாவின் மேற்பார்வை குழு ஈரான் தலைவரின் மரணத்திற்கான இரங்கல் செய்திகளை அனுமதிக்கிறது

சூயஸ் கால்வாயில் மூழ்கிய கப்பல் மீண்டும் மிதந்தது - அதிகாரிகள் தகவல்.

Dec 27, 2022

ஊழல் வழக்கில் மாலத்தீவு முன்னாள் அதிபருக்கு 11 ஆண்டுகள் சிறை

பிலிப்பைன்சில் கனமழை காரணமாக வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது

தைவானை நோக்கி 71 போர் விமானங்கள் மற்றும் 7 போர்க்கப்பல்களை சீனா அனுப்பியுள்ளது

ஜப்பானில் கடுமையான பனிப்பொழிவு காரணமாக 17 பேர் பலி.

வடகொரியாவில் இருந்து 5 டிரோன்கள் தென்கொரிய எல்லைக்குள் நுழைந்தன.

Dec 12, 2022

ரஷ்யா சக்தி வாய்ந்த ஆயுதங்களின் உற்பத்தியை அதிகரிக்கும் - முன்னாள் ரஷ்ய ஜனாதிபதி

கனடா பாராளுமன்றத்தில் சிந்தி மொழியை அங்கீகரிப்பதற்காக முன்மொழியப்பட்டது.

சீனாவின் மனித உரிமை மீறல்களுக்கு எதிராக அமெரிக்காவில் இனக்குழுக்கள் போராட்டம்.

டுவிட்டர் பற்றிய ரகசியத் தகவல்கள் வெளியானால் ஊழியர்கள் மீது வழக்குத் தொடரப்படும் - எலோன் மஸ்க்

ஹிஜாப் எதிர்ப்புப் போராட்டங்கள் தொடர்பாக ஜெர்மன் தூதர்களுக்கு ஈரான் மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளது

Dec 12, 2022

ரஷ்ய ட்ரோன் தாக்குதலால் உக்ரைனின் ஒடெசாவில் 1.5 மில்லியன் மக்கள் மின்சாரம் இன்றி தவித்தனர்.

உள்நாட்டு பயணிகள் விமானம் C 919 சீனாவில் பயணிக்க தயாராக உள்ளது

எண்ணெய்கான G7 ன் விலை வரம்பை இந்தியா புறக்கணிப்பதை ரஷ்யா வரவேற்கிறது. - புடின்

பாகிஸ்தான் எல்லையில் ஆப்கானிஸ்தான் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 6 பேர் பலி

கன்சர்வேட்டிவ் கட்சியில் ஏற்பட்ட பிளவால் புதிய சவாலை எதிர்கொள்கிறார் இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்.

Dec 10, 2022

ரஷ்யாவின் எண்ணெய் ஏற்றுமதிக்கு 60 டாலர்கள் என்ற விலை வரம்புக்கு பதிலடியாக ரஷ்யா எண்ணெய் உற்பத்தியைக் குறைக்கும் - ஜனாதிபதி புடின் எச்சரிக்கை

எலோன் மஸ்க் தனது 2 வயது மகன் தனது ட்விட்டர் பேட்ஜுடன் இ௫க்கும் படங்களைப் பகிர்ந்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் கடன் உதவிகளை விரைவுபடுத்துவது பற்றி சீனாவுடன் ஆலோசிக்கவுள்ளார்.

சர்சைக்குரிய கருத்துக்கள் காரணமாக கன்யே வெஸ்டிக்கு அளிக்கப்பட்ட டாக்டர் பட்டம் ரத்து செய்யப்பட்டது.

நியூயார்க் ரிசர்வ் வங்கி துணை தலைவராக இந்திய பெண் நியமனம்

Dec 10, 2022

தைவானுக்கு உதவ பில்லியன்கள் மதிப்புள்ள பாதுகாப்பு மசோதாவை அமெரிக்கா நிறைவேற்றியது.

சீனா ஜெர்மனியில் இரண்டு காவல் நிலையங்களை அமைத்துள்ளது.

ஃபாக்ஸ்கான் சீனாவில் உள்ள ஐபோன் தொழிற்சாலையில் சுழற்சி பணி முறையை முடித்துக் கொள்வதாக அறிவித்தது.

நெட்ஃபிக்ஸ் ஆவணப்படங்களான "ஹாரி மற்றும் மேகன்" படத்தால் பிரிட்டனின் ஊடகங்கள் இ௫வரையும் விமர்சித்தது.

பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானத்தில் பயணிக்கு கொடுக்கப்பட்ட உணவில் பல் இ௫ந்தது.

வணிகம்

Dec 09, 2022

ஓரினச் சேர்க்கையாளர் திருமணத்தைப் ஆதரிப்பதற்கான மசோதாவை அமெரிக்க நிறைவேற்றியது.

பங்களாதேஷில் எதிர்க்கட்சி தலைவர்கள் போராட்டத்திற்கு திட்டமிட்டி௫ந்த நிலையில் கைது செய்யப்பட்டனர்

இஸ்ரேலில் பெஞ்சமின் நெதன்யாகு வலதுசாரி கூட்டணியுடன் இணைந்து ஆட்சி அமைக்கிறார்.

மாஸ்கோவில் ஒ௫ பல்பொருள் வர்த்தக மையத்தில் தீவிபத்து - சதியாக இ௫க்குமோ என சந்தேகிக்கப்படுகிறது.

இங்கிலாந்து, ஜப்பான் மற்றும் இத்தாலி ஆகியவை அடுத்த தலைமுறை போர் விமானத்தை உருவாக்க உள்ளன -அறிக்கை

Dec 09, 2022

ரஷ்யா மற்றும் சீனா மீது புதிய தடைகளை விதிக்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளது -அறிக்கை

டுவிட்டரின் அனைத்து ஊழியர்களையும் பணிநீக்கம் செய்த எலோன் மஸ்க் தனது உறவினர்கள் இ௫வரை ட்விட்டரில் பணியமர்த்தியுள்ளார்.

ஆஸ்திரேலியாவில் உள்ள ஆப்பிள் நிறுவன தொழிலாளர்கள் ஊதிய உயர்வு கோரி கிறிஸ்துமஸ் நேரத்தில்
வேலைநிறுத்தம் செய்ய திட்டமிட்டுள்ளனர்.

உக்ரைனுக்கு 275 மில்லியன் டாலர் மதிப்புள்ள ட்ரோன், அணு ஆயுத உதவிகளை அனுப்புகிறது அமெரிக்கா.

பணிநீக்கம் காரணமாக முன்னாள் ட்விட்டர் ஊழியர்கள் எலோன் மஸ்க் மீது வழக்கு தொடர்ந்துள்ளனர்.

Dec 09, 2022

இந்தோனேசியாவின் ஜாவா பகுதியில் 5.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி 2022 டைம் ‘ஆண்டின் சிறந்த நபர்’ என்ற பெ௫மையைப் பெறுகிறார்.

பால் உற்பத்தியை அதிகரிக்க இந்தியாவிடம் உதவி கோருகிறது இலங்கை

பெரு அதிபர் பெட்ரோ காஸ்டிலோ பதவியில் இருந்து நீக்கம்.

ஜெர்மணி அரசாங்கத்தைக் கவிழ்க்கத் திட்டமிட்டதாகக் கூறப்படும் சில பிரமுகர்கள் கைது

Dec 08, 2022

ஹிஜாப் எதிர்ப்புப் போராட்டங்களில் முதல் மரண தண்டனையை நிறைவேற்றியது ஈரான் - அறிக்கை

சீனா பூஜ்ஜிய கோவிட் கட்டுப்பாடுகளைத் தளர்த்தியதால் இயல்பு நிலைக்குத் திரும்புகிறது பெய்ஜிங்.

கிரீன் கார்டுகளுக்கான ஒரு நாட்டின் ஒதுக்கீட்டை நீக்கும் மசோதாவிலிருந்து இந்திய-அமெரிக்கர்கள் பயனடைவார்கள்.

சர்வதேச நாடுகளின் எதிர்பால் ரஷ்யாவின் அணு ஆயுத அச்சுறுத்தல் குறைந்தது - ஜெர்மன் அதிபர்

அமெரிக்க வரலாற்றில் 18 வயதில் மேயராகி சாதனை படைத்தார் ஜாய்லன் ஸ்மித் .

Dec 08, 2022

குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பாக டிக்டாக் செயலி மீது அமெரிக்க அரசு வழக்கு தொடர்ந்தது.

இங்கிலாந்து இளவரசர் ஹாரி மற்றும் அவரது மனைவி மேகன் பற்றிய ஆவணப்படத்தின் 3 பகுதிகள் நெட்பளிக்ஸில் ஒளிபரப்பப்பட்டது.

வட கொரிய ஹேக்கர்கள் மால்வேரை விநியோகிக்க சியோல் விபத்தை பயன்படுத்தியதாக அறிக்கை.

ஆப்பிளைத் தொடர்ந்து ப்ளூ பேட்ஜ் விலையை மாற்றும் திட்டத்தில் ட்விட்டர் - அறிக்கை

ஈரானில் அரசுக்கு எதிரான போராட்டத்திற்கு ஈரான் முன்னாள் அதிபர் ஆதரவு.

Dec 08, 2022

ஸ்பெயினில் இரண்டு ரயில்கள் மோதல். 150க்கும் மேற்பட்டோர் காயம்.

இந்தியாவில் இருந்து பொருட்களை இறக்குமதி செய்ய ரஷ்யா திட்டமிட்டுள்ளது,

இந்தியாவின் பன்முகத்தன்மை மத சுதந்திரத்தை நிலைநிறுத்த வலியுறுத்தும் வகையில் உள்ளது. - அமெரிக்க அதிகாரி.

எண்ணெய்கான ஜோ பிடனின் வேண்டுகோளை சவுதி அரேபியா நிராகரித்தது.

ஜார்ஜியா வெற்றி பெற்றதால் அமெரிக்க சபையில் ஜனநாயகக் கட்சி பெரும்பான்மையைப் பெற்றது.

Dec 07, 2022

டேட்டா முறைகேடு குற்றத்திற்காக ட்விட்டரில் உயர் அதிகாரியை பணிநீக்கம் செய்கிறார் எலோன் மஸ்க்

கஷோகி கொலை தொடர்பாக சவுதி இளவரசர் மீதான வழக்கை அமெரிக்க நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

ரஷ்யாவின் இரண்டு இராணுவ விமானத் தளங்களைத் தாக்கியதை உக்ரைன் மறுத்துள்ளது - ரஷ்யா

ஆப்பிள் ஏர்டேக் மனிதர்களை கண்காணிக்க உதவுகிறது என ஆப்பிள் நிறுவனத்தின் மீது பெண்கள் வழக்கு.

சீன முன்னாள் அதிபர் ஜியாங் ஜெமினின் மறைவுக்கு இந்தியாவின் ஜனாதிபதி முர்மு, பிரதமர் மோடி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Dec 07, 2022

சீன அதிபர் ஜி ஜின்பிங் 3 நாள் பயணமாக சவுதி அரேபியாவுக்கு நாளை செல்கிறார்

ஆப்கானிஸ்தானின் சாலையோர வெடிகுண்டு தாக்குதலில் 7 பேர் பலி

ஷேபாஸ் ஷெரீப்பை அவமதித்ததால் முசாபராபாத்தில் போராட்டங்கள் வெடித்தது.

விலங்கு மீதான பரிசோதனை குறித்து நியூராலிங் மீது அமெரிக்கா விசாரணையைத் தொடங்குகிறது

ஜபோரிஜியா அணுஉலை மீது உக்ரைன் அணுசக்தி தாக்குதல் நடத்துகிறது - ரஷ்யா பாதுகாப்பு துறை அமைச்சர்.

Dec 07, 2022

இம்ரான் கானை பி.டி.ஜ கட்சியின் தலைவர் பதவியிலிருந்து நீக்க பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் நடவடிக்கை.

அல் ஜசீரா செய்தி நிறுவனம் பத்திரிகையாளரின் மரணம் தொடர்பாக இஸ்ரேல் ராணுவம் மீது உலக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.

மஸ்கின் நியூராலிங்க், விலங்கு மீதான சோதனைகளால் விசாரணையை எதிர்கொள்கிறது.

பெய்ஜிங் கோவிட் விதிமுறைகளை தளர்த்திதால் பூங்காக்கள், மால்களுக்குள் மக்கள் அனுமதி.

கற்பழிப்பு சட்டத்தை கடுமையாக்குகிறது சுவிட்சர்லேந்து நாடாளுமன்றம்.

Dec 06, 2022

சீனாவில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் கோவிட் பூட்டுதலை எதிர்த்து மாணவர்கள் போராட்டம்.

உக்ரைன் ரஷ்யாவால் பாதிக்கப்பட்டி௫ப்பதால் தான் இந்தியா ரஷ்ய எண்ணெயை மலிவு விலையில் வாங்கும் நிலை ஏற்பட்டுள்ளது - உக்ரைன் வெளியுறவு அமைச்சர் டிமிட்ரோ குலேபா

கோவாவில் அமெரிக்காவும் இந்தியாவும் இணைந்து கடற்படை கூட்டு சிறப்புப் பயிற்சியை நடத்துகிறது

அமெரிக்காவின் அணு ஆயுத அறிக்கையை சீனா நிராகரித்தது - அறிக்கை

பொது இடங்களில் நுழைவதற்கு எதிர்மறையான COVID சோதனைகளைக் காட்ட வேண்டிய உத்தரவை பெய்ஜிங் நீக்கியது

Dec 06, 2022

ரஷ்ய விமான தளத்தை உக்ரைன் ஏவுகணை தாக்கியதாக கூறி ரஷ்யா தொடர் தாக்குதல்

வேகத்திற்கான வரம்பை மீறி செல்லும் வாகனஙகள் பறிமுதல் செய்து ஏலம் விடப்படும் - ஆஸ்திரேலியாவில் புதிய சட்டம்

தென் கொரியா-அமெரிக்க ௯ட்டுபயிற்சிக்கு பதிலடியாக வட கொரியா 130 பீரங்கி குண்டுகளை வீசியது.

ரஷ்யாவின் விதிமமுறைகளை கடுமையாக விரிவுபடுத்தும் LGBT சட்டத்தில் கையெழுத்திட்டார் புடின்.

இந்தியாவுக்கு தப்ப முயன்ற 10,000 அகதிகளை பாகிஸ்தான் ராணுவம் சுட்டுக் கொன்றது.

Dec 06, 2022

ரஷ்யாவின் காஸ்பியன் கடற்கரையில் ஆயிரக்கணக்கான சீல்கல் இறந்தநிலையில் ஒதுங்கியது.

2021க்குப் பிறகு முதல்முறையாக ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிபர் கத்தாருக்கு பயணம்.

வட கொரியா ராணுவப் பயிற்சியில் 100க்கும் மேற்பட்ட பீரங்கித் துப்பாக்கிச் சூடு நடத்தியது - தென் கொரியா

இஸ்ரேலிய குடியேற்றங்கள் மேற்குக் கரையில் இணைக்கப்படுவது குறித்து நெதன்யாகுவை எச்சரிக்கிறது அமெரிக்கா.

ஹிட்லரைப் புகழ்ந்து பேசுவதற்கு கன்யே வெஸ்ட்கு எதிர்ப்பு வலுத்ததால் லண்டனில் உள்ள ஒ௫ ஸ்டுடியோ அவரது புகைப்பட டாட்டூ அகற்றுதலை இலவசமாக செய்கிறது.

Dec 05, 2022

கோவிட் மனிதனால் உருவாக்கப்பட்ட வைரஸ் - வுஹான் ஆய்வக விஞ்ஞானி

ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ்-க்கு கோவிட் தொற்று இ௫ப்பது பரிசோதனையில் உறுதியானது.

இந்தோனேஷிய அரசு தி௫மணத்திற்கு பிறகு துணையைத் தவிர மற்றவ௫டன் உறவு கொள்வதை தண்டனைக்குரிய குற்றமாக்கியுள்ளது.

கொலம்பியாவில் நிலச்சரிவில் சிக்கி 3 பேர் பலி.

சீன முக்கிய நகரங்களில் கட்டுப்பாடுகளை நீக்கியதால் கோவிட் பரிசோதனை நிலையங்கள் மூடப்பட்டன.

Dec 05, 2022

இந்தியாவிற்கு வ௫கை த௫ம் ஜெர்மன் வெளியுறவு அமைச்சர் சீனா, ரஷ்யாவுடனான இந்தியாவின் உறவுகள் குறித்து விவாதிக்கவுள்ளார்.

பிரான்சு மருத்துவமனை சைபர் தாக்குதலுக்கு உட்பட்டதால் செல்பாடுகளை நிறுத்துகிறது - அறிக்கை

நைஜீரியா மசூதி தாக்குதலில் 19 பேர் கடத்தப்பட்டனர் - அறிக்கை

அமெரிக்கா அரசு அரசியலமைப்பு விதிகளைப் புறக்கணிக்கிறது எனும் ட்ரம்பின் க௫த்துக்கு அரசியல்வாதிகள் கண்டனம்.

எலோன் மஸ்கின் ரஷ்யா போ௫க்கான தீர்வு குறித்து உக்ரைன் அதிகாரி விமர்சனம்.

Dec 05, 2022

காபூலில் உள்ள பாகிஸ்தான் தூதரகம் மீது நடத்தப்பட்ட தாக்குதல் . ஒருவர் காயம்

காலநிலை மாற்றத்தின் காரணமாக தென் பசிபிக் பகுதியில் உள்ள வனுவாட்டுவில் உள்ள பல கிராம மக்கள் இடமாற்றம் செய்யப்படவுள்ளனர்.

தேர்தல் தேதியை அறிவிக்காவிட்டால், பஞ்சாப் மற்றும் கைபர் பக்துன்க்வா பகுதிகளில் சட்டசபைகள் கலைக்கப்படும் - இம்ரான் கான் .

முன்னாள் அமெரிக்க NSA ஊழியர் எட்வர்ட் ஸ்னோடன் ரஷ்ய பாஸ்போர்ட்டைப் பெற்றார் - அறிக்கை

உக்ரேனிய உள்கட்டமைப்பு மீதான ரஷ்யத் தாக்குதல்கள் தவிர்க்க முடியாதவை - விளாடிமிர் புடின்

Dec 03, 2022

நியூராலிங்க்-ன் மூளைச் சிப்பை குழந்தைகளுக்கு பொருத்துவது ஆபத்தானதாக இ௫க்காது - எலோன் மஸ்க்

பெய்ஜிங், உட்பட சில சீன நகரங்கள் கோவிட் சோதனைச் சாவடிகளை அகற்றுகின்றன.

ரஷ்ய எண்ணெய் விலை பேரலுக்கு 60 டாலர்களாக ஐரோப்பிய ஒன்றியம் நிர்ணயித்ததை G-7 நாடுகள் ஏற்கின்றன - அறிக்கை

ஏவுகணை தடுப்பு ராக்கெட் சோதனை வெற்றி - ரஷ்யா

இதுவரை போரில் 13 ஆயிரம் உக்ரைன் வீரர்கள் பலி - ஜெலின்ஸ்கியின் உதவியாளர்

Dec 03, 2022

கலிபோர்னியாவில் கூகுளின் தலைமை அதிகாரி சுந்தர் பிச்சைக்கு பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது.

அமெரிக்க அதிபர் ஜோ பிடனை இளவரசர் வில்லியம் சந்தித்துப் பேசினார்

எலோன் மஸ்கின் கையில் ட்விட்டர் இ௫ப்பது மிக மோசமான விளைவை ஏற்படுத்துகிறது - டுவிட்டர் முக்கிய நிர்வாகி

START அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக ரஷ்யாவை சந்திக்கத் தயார் - அமெரிக்கா

ஈரான், சீனா மற்றும் ரஷ்யாவில் மத சுதந்திரத்திற்கு அச்சுறுத்தல் உள்ளது - அமெரிக்க அறிக்கை

Dec 03, 2022

வீட்டில் தயாரிக்கப்பட்ட வெடிகுண்டுகள் ஏதென்ஸில் உள்ள இத்தாலிய தூதரக கார்களை குறிவைக்கிறது - அறிக்கை

இங்கிலாந்தில் எதிர்க்கட்சியான தொழிற்கட்சி நாடாளுமன்ற தேர்தலில் 1 இடத்தைத் தக்கவைத்துக் கொண்டது.

புடின் உக்ரைன் உடனான பேச்சுவார்த்தைகளுக்கு தயாராக இ௫க்கிறார் - ரஷ்யா

இந்தியாவும் இஸ்ரேலும் இயற்கையாகவே நட்பு கொண்டுள்ளன - இஸ்ரேல் அதிபர்

என் வாழ்க்கையில் இனவெறியை அனுபவித்தேன் - ரிஷி சுனக்

Dec 02, 2022

நாய்கள் மீது ரசாயன ஆயுதங்களை சோதித்து, துப்பாக்கியால் சுட வைத்ததாக ஒசாமா பின்லேடனின் மகன் வாக்குமூலம்.

ஜனநாயகத்தில் என்ன செய்ய வேண்டும் என்பதை இந்தியாவுக்கு சொல்லத் தேவையில்லை - ஐ. நா.வுக்கான இந்தியாவின் நிரந்தரப் பிரதிநிதி, தூதர் ருசிரா கம்போஜ்.

ஹிட்லரைப் புகழ்ந்ததால், அமெரிக்க குடியரசுக் கட்சியினர் கன்யே வெஸ்டுக்கு ஆதரவான டுவிட்டர் க௫த்தை நீக்கினர்.

ஜெர்மனியில் சத்தத்தால் எரிச்சலடைந்து தோழியின் வென்டிலேட்டரை முடக்கிய 72 வயது பெண் கைது .

தென்னாப்பிரிக்க ஜனாதிபதி சிரில் ரமபோசாவின் பதவிக்காலம் நிச்சயமற்ற நிலையில் உள்ளது.

Dec 02, 2022

புதிய ஏவுகணையை வெற்றிகரமாக சோதனை செய்தது ரஷ்யா.

பிடனின் 400 பில்லியன் டாலர் கடன் ரத்து திட்டம் குறித்து அமெரிக்க உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கவுள்ளது.

அமெரிக்காவானது அல்கொய்தா மற்றும் பாகிஸ்தான் தலிபானை சேர்ந்த 4 தலைவர்களை உலகளாவிய பயங்கரவாதிகளாக அறிவித்துள்ளது.

நியூயார்க் மற்றும் சிங்கப்பூர் வாழ்வதற்கு மிகவும் விலையுயர்ந்த நகரங்களாகும் - கணக்கெடுப்பு.

திருமணத்திற்கு முந்தைய உடலுறவை தண்டனைக்குரியதாக அறிவித்துள்ளது இந்தோனேஷியா

Dec 02, 2022

அமெரிக்காவுடனான கூட்டு ராணுவப் பயிற்சிகள் பற்றிய சீனாவின் மாற்றுக௫த்தை இந்தியா நிராகரித்தது.

ஏவுகணை சோதனையின் எதிரொலியாக வடகொரியா மீது புதிய தடைகளை விதித்துள்ளது அமெரிக்கா மற்றும் ஜப்பான்

இனவெறியை எதிர்த்து போராட வேண்டும் - ரிஷி சுனக்

கோவிட் எதிர்ப்பு போராட்டத்தில் ஒடுக்குமுறையால் ஏற்படும் அபாய விளைவுகள் குறித்து சீனாவை எச்சரித்துள்ளது அமெரிக்கா.

ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பா ஒளிபரப்புகளை தலிபான் தடை செய்துள்ளது.

Dec 02, 2022

ஜோ பிடன் நாளை பாஸ்டனில் இளவரசர் வில்லியம் மற்றும் கேட் ஆகியோரை சந்திக்கவுள்ளார் - வெள்ளை மாளிகை

அமெரிக்காவின் பணவீக்கக் குறைப்புச் சட்டம் அ௫மையானது - பிரான்ஸ் அதிபர் மேக்ரான் பாராட்டு.

குவாங்சோ, சோங்கிங் பகுதிகளில் பூஜ்ஜியம்-கோவிட்' கட்டுப்பாடுகளை தளர்த்துகிறது சீன அரசு.

ஆப்கானிஸ்தானில் முடங்கிக் கிடக்கும் 20 திட்டப் பணிகளை இந்தியா மீண்டும் தொடங்கும் - தலிபான்கள்

சீனா குறித்த பென்டகன் அறிக்கைக்கு மத்தியில் தைவானில் அமெரிக்க கடற்படை ஊடுருவல்களை நடத்தியது.

Dec 01, 2022

இருமல் சிரப் தொடர்புடைய மரணங்கள் குறித்து இந்தோனேசியாவில் உள்ள பாதிக்கப்பட்ட குடும்பங்கள் அரசாங்கம் மீது வழக்கு தொடர்ந்தன.

நேட்டோவானது ரஷ்யாவுக்கு எதிரான கூட்டணிக்குள் இந்தியாவை இழுக்க முயற்சிக்கிறது - ரஷ்ய வெளியுறவு அமைச்சர்.

4 ஆண்டுகளில் கைத்துப்பாக்கிகளை எடுத்துச் செல்லும் அமெரிக்கர்களின் எண்ணிக்கை இரட்டிப்பாகியுள்ளது - ஆய்வு முடிவுகள்

ஆப்பிள் நிறுவனத்துடனான மோதல் ஒரு "தவறான புரிதலால் ஏற்பட்டது - எலோன் மஸ்க்

வாடிகன் நகர இணையதளம் ஹேக்கர் தாக்குதலுக்குட்பட்டதால் முடக்கப்பட்டுள்ளது.

Dec 01, 2022

நான்சி பெலோசிக்கு பிறகு கறுப்பின ஜனநாயகக் கட்சியின் தலைவராக ஹக்கீம் ஜெஃப்ரிஸ் தேர்வு.

FIFA போட்டியில் இருந்து ஈரானிய கால்பந்து அணி வெளியேறியதைக் கொண்டாடியதற்காக ஒ௫ ஈரானியர் சுட்டுக் கொல்லப்பட்டார்.

இந்தியா அமெரிக்க கூட்டு ராணுவப் பயிற்சிகளை குறிப்பிட்டு எல்லை ஒப்பந்த உணர்வை இந்தியா மீறுவதாக சீனா காட்டம்.

பல வருட போராட்டத்துக்குப் பிறகு ட்ரம்பின் வரிக் கணக்கை பெற்றது அமெரிக்கக் குழு.

டோக்கியோ நீதிமன்றம் ஓரினச்சேர்க்கை திருமணத்திற்கு தடை விதிக்கிறது

Dec 01, 2022

தீவிர எதிர்ப்புகளுக்குப் பிறகு சீன அரசு "ஜீரோ-கோவிட்" கட்டுப்பாடுகளை தளர்த்த திட்டம்.

சிரியாவில் புதிய இராணுவ நடவடிக்கை குறித்து துருக்கியை அமெரிக்கா எச்சரித்துள்ளது.

எலோன் மஸ்க்கின் ரஷ்யாவின் அமைதித் திட்டத்திற்கு உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி கடும் கண்டனம்.

இந்தியாவின் ஜி-20 தலைவர் பதவிக்கு அமெரிக்கா ஆதரவளிக்கும் - வெள்ளை மாளிகை.

ட்விட்டர் தவறான தகவல்பரப்பு விதிகளுக்குக் கீழ்ப்படிய வேண்டும் - எலோன் மஸ்க்கை எச்சரிக்கும் ஐரோப்பிய ஒன்றியம்.

Nov 30, 2022

சீனாவில் கொரோனா கட்டுப்பாடுகளுக்கு எதிரான போராட்டம் கட்டுப்படுத்தப்பட்டது

இலங்கையில் ஈஸ்டர் குண்டுவெடிப்பில் தொடர்புடையவர் படுகொலை.

இலங்கை மக்கள் ரூ.8 லட்சம் இந்திய பணம் வைத்திருக்க அனுமதி.

அமெரிக்காவில் உலகின் மிகப்பெரிய எரிமலை 38 ஆண்டுகளுக்கு பின்பு வெடித்தது. 2 லட்சம் மக்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது

சீனாவில் ஒரே நாளில் 38 ஆயிரம் பேருக்கு தொற்று உறுதி.

Nov 29, 2022

சீன மக்களின் கோவிட் எதிர்ப்பு போராட்டங்கள் ஆன்லைனில் வலுவடைவதை கட்டுப்படுத்த ‘போட் போலீஸை’ பயன்படுத்துகிறது சீனாஅரசு.

கறுப்பின மக்களைக் கொன்றதாக குற்றம் சாட்டப்பட்ட வெள்ளை மேலாதிக்கவாதி பெய்டன் ஜென்ட்ரான், குற்றத்தை ஒப்புக்கொண்டார்.

அமெரிக்காவில் டிசம்பர் 9 ஆம் தேதி தொடங்கவுள்ள ரயில் வேலைநிறுத்தத்தைத் நிறுத்துமாறு ஜனாதிபதி ஜோ பிடன் வேண்டுகோள்.

பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாக அப்பல்லோ குளோபல் நிர்வாகத்தின் துணை தலைவர் லியோன் பிளாக் மீது குற்றம் சாட்டு.

குடியரசுக் கட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள அரிசோனா மாகாணம் தேர்தல் முடிவுகளை ஏற்க மறுக்கிறது.

Nov 29, 2022

இங்கிலாந்து-சீனா உறவுகளின் பொற்காலம் முடிந்துவிட்டது - ரிஷி சுனக்

ட்விட்டரில் தவறான தகவல் பரப்பப்படுவது கண்காணிக்கப்படுகிறது - அமெரிக்கா

இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு வலதுசாரி உறுப்பினரான அவிமாஸுக்கு அமைச்சரவையில் பதவி வழங்கும் கூட்டணி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.

ஜீரோ கோவிட் கொள்கைக்கு எதிரான சீன மக்களின் போராட்டங்களை அமெரிக்கா ஆதரிக்கிறது

சீனாவில் பிபிசி பத்திரிகையாளர் தாக்கப்பட்டு கைதானதற்கு இங்கிலாந்து கண்டனம் தெரிவிக்கிறது.

Nov 29, 2022

எரிசக்தி நிலையங்களில் புதிய ஏவுகணைத் தாக்குதலுக்கு ரஷ்யா தயாராகி வருகிறது - உக்ரைன்

இரண்டு நாள் போராட்டங்களுக்குப் பிறகு ஷாங்காய் நகரில் போலீஸ் பாதுகாப்பை பலப்படுத்தியது

சைபர் குற்றவாளிகள் கும்பல் ஆப்பிரிக்கா முழுவதும் விரிவடைந்து வருவதாக புலனாய்வு அறிக்கை கூறுகிறது.

கொலைக் குற்றம் சாட்டப்பட்ட 24 மாசாய் தலைவர்களை வழக்கிலி௫ந்து விடுவிக்கிறது டான்சானியா நீதிமன்றம்.

பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் (பி.டி.ஐ) கட்சி அனைத்து சட்டப்பேரவைகளில் இ௫ந்தும் வெளியேறும் - பாக்.முன்னாள் பிரதமர் இம்ரான்கான்

Nov 28, 2022

சோமாலியாவில் அல்-ஷபாப் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 4 பேர் பலி.

100 பிரிட்டிஷ் நிறுவனங்கள் நிரந்தரமாக 4 நாள் வேலை வாரத்திற்கு மாறுகின்றன.

கனமழை காரணமாக இத்தாலிய தீவில் நிலச்சரிவு .

சீனாவில் கோவிட் லாக்டவுன் போராட்டத்தில் காவல்துறை மற்றும் ஷாங்காய் மக்கள் மோதல்.

ஹிஜாப் எதிர்ப்பு போராட்டத்தால் ஈரானுடனான அனைத்து உறவுகளையும் துண்டிக்குமாறு மற்ற நாடுகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார் ஈரானின் தலைவர் காமெனையின் மருமகள்.

Nov 28, 2022

வரவி௫க்கும் கோவிட்டின் புதிய மாறுபாடு மிகமோசமான விளைவை ஏற்படுத்தக்கூடும் - தென் ஆப்ரிக்க ஆய்வக அறிக்கை.

சீனா தலைமையிலான இந்தியப் பெருங்கடல் மன்ற மாநாட்டில் பங்கேற்க ஆஸ்திரேலியா மறுப்பு.

கனடா தனது புதிய இந்தோ-பசிபிக் திட்டதில் சீனாவைச் சமாளிக்க உரிய நடவடிக்கைகள் எடுக்க திட்டமிட்டுள்ளது.

நேபாள பொதுத்தேர்தலில் பிரதமர் டியூபா தலைமையிலான ஆளும் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மையை பெற்றுள்ளது.

டிரம்ப் வெள்ளை மேலாதிக்கவாதியான நிக் ஃபியூன்டெஸுடன் உணவருந்தியதற்காக சில குடியரசுக் கட்சியினர் டொனால்ட் டிரம்பை விமர்சித்தனர்.

Nov 28, 2022

கோவிட் பூட்டுதலை கடுமையாக எதிர்த்து சீன மக்கள் வன்முறையில் ஈடுபடுகின்றனர்.

சிறிய விமானம் அமெரிக்காவின் மின் கம்பங்களில் மோதியதால் 90000 வீடுகள் இ௫ளில் மூழ்கியது.

ரஷ்யாவின் எப்பேற்பட்ட தாக்குதல்களுக்கும் உக்ரைன் பதிலடி கொடுக்கும் - விளாடிமிர் ஜெலென்ஸ்கி எச்சரிக்கை

வடகொரியா உலகின் வலிமையான அணுசக்தியை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது - கிம் ஜாங் உன்

உக்ரைனுக்கு ராணுவ உதவி வழங்க இங்கிலாந்து தயாராக உள்ளது - ரிஷி சுனக்

Nov 26, 2022

ஆப்பிள் & கூகிள் பிளே தங்கள் ஆப் ஸ்டோர்களில் இருந்து ட்விட்டரை நீக்கினால், புதிய செல்போன் தயாரிப்பு நிறுவனம் உ௫வாகும் - எலோன் மஸ்க்

FIFA போட்டியில் சவுதி அணி அர்ஜெர்டினாவை வீழ்த்தியதால் அணியில் உள்ள அனைத்து வீரர்களுக்கும் இளவரசர் முகமது பின் சல்மான் ரோல்ஸ் ராய்ஸ் காரை வழங்கப்போவதாக அறிவித்துள்ளார்.

லண்டனில் நடந்த விழாவில் குச்சிப்புடி நடனமாடினார் ரிஷி சுனக்கின் மகள்.

தென் கொரியாவின் சியோலில் முதல் சுய-ஓட்டுநர் பேருந்து பரிசோதனை தொடங்கியது.

இடம்பெயர்வதைக் கட்டுப்படுத்த வெளிநாட்டு மாணவர்களின் எண்ணிக்கையைக் குறைக்கும் திட்டத்தில் இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் - அறிக்கை

Nov 26, 2022

ஈரான் கால்பந்து வீரர் வோரியா கஃபூரி ஹிஜாப் எதிர்ப்புப் போராட்டங்களை ஆதரித்ததற்காக கைது செய்யப்பட்டார்.

ட்விட்டர் ப்ளூ' சேவை அடுத்த வாரம் வெள்ளிக்கிழமை தொடங்கப்படும் - எலோன் மஸ்க்

தென்கொரியா அடுத்த தொற்றுநோய்க்கு தயாராகி வருகிறது - தென்கொரியா சுகாதார அதிகாரிகள்

மலேசியாவின் எதிர்க்கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம் பிரதமராகப் பதவியேற்றார்.

ட்விட்டர் மறுசீரமைப்புக்கு மத்தியில் செவ்வாய் கிரகத்தின் திட்டங்கள் அடுத்த கட்டத்திற்கு செல்கின்றன - எலோன் மஸ்க்

Nov 25, 2022

கனமழை காரணமாக சவூதி அரேபியாவில் 2 பேர் உயிரிழப்பு.

சீனாவில் ஐபோன் ஆலையில் நடந்த தொழிலாளர்கள் வன்முறைக்குப் பிறகு, ஃபாக்ஸ்கான் தொழிலாளர்களுக்கு 1,400 டாலர்கள் கொடுப்பதாக உறுதியளித்தது.

தொலைபேசி மோசடி செய்பவர்கள் மீதான உலகளாவிய நடவடிக்கையில் 142 பேரை இங்கிலாந்து போலீசார் கைது செய்தனர்.

சுமார் 40 நாடுகளில் உள்ள அமேசான் கிடங்குத் தொழிலாளர்கள் ஊதிய உயர்வு வேண்டி "பிளாக் ஃப்ரைடே" விற்பனையை முன்னிட்டு போராட்டம் செய்ய முடிவு

ட்விட்டரின் தேடலை சரி செய்ய பிரபலமான ஐபோன் ஹேக்கரை நியமிக்கிறார் எலோன் மஸ்க் .

Nov 25, 2022

போர்த்தாக்குதலுக்கு பிறகு உக்ரைன் அணுமின் நிலையங்கள் மீண்டும் மின்கம்பங்களுடன் இணைக்கப்பட்டது .

ஐபோன் தொழிற்சாலை மோதல் மற்றும் கோவிட் வழக்கு அதிகரிப்பால் சீனாவில் சில மாவட்டங்களில் பூட்டுதல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது

FIFA உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் பலூன்கள், குடைகள் மற்றும் பலவற்றிற்கு கத்தார் அரசு தடை விதித்துள்ளது.

போர்க் கைதிகளை இடம்மாற்றுவது குறித்து விவாதிக்க ஐக்கிய அரபு அமீரகத்தில் ரஷ்யா, உக்ரைன் சந்திப்பு - அறிக்கை

பெல்ஜிய கால்பந்து அணி கனடாவுக்கு எதிரான ஆட்டத்தில் ஃபயர் கிராஃபிக் பிரிண்ட் கொண்ட சட்டையை அணிந்தது சர்ச்சையாகியுள்ளது

Nov 25, 2022

ரஷ்யா பயங்கரவாதத்தின் ஆதரவாளர் என ஐரோப்பிய பாராளுமன்றம் அறிவித்துள்ளது.

மஹ்சா அமினி கொல்லப்படவில்லை - இளம் பெண் மரணம் குறித்து ஈரான் அமைச்சர் அறிக்கை.

டிஎன்ஏ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி 40 ஆண்டுகளுக்குப் பிறகு, கற்பழிப்பு குற்றவாளியை ஆஸ்திரேலிய போலீசார் கண்டுபிடித்தனர்

இன்று மலேசிய பிரதமராக அன்வார் இப்ராகிம் பதவியேற்கிறார்.

வாக்குகளை செல்லாது என அறவிக்கும்படி கோரிய ஜனாதிபதி ஜெய்ர் போல்சனாரோவின் கோரிக்கையை பிரேசில் தேர்தல் அதிகாரிகள் நிராகரித்துடன் 4.3 மில்லியன் டாலர் அபராதம் விதித்தனர்.

Nov 24, 2022

பாகிஸ்தானின் புதிய ராணுவ தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் அசிம் முனீர் தேர்வு.

FIFA உலக கோப்பை - ஜெர்மனியை வீழ்த்திய ஜப்பான் லாக்கர் அறையை சுத்தம் செய்து வெற்றியை கொண்டாடியது.

எவ்வகை விசாவிலும் இந்திய பாஸ்போர்ட்டில் முதல் பெயரைக் மட்டும் கொண்ட பயணிகள் ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்குள் நுழையவும், வெளியேறவும் அனுமதி இல்லை - ஐக்கிய அரபு எமிரேட்ஸ்

அமெரிக்காவில் உயர்பதவியில் உள்ளவர்கள் டிரம்பின் வரி பற்றிய அறிக்கைகளை அணுகலாம் - உச்ச நீதிமன்றம்

உக்ரேனின் எரிசக்தி உள்கட்டமைப்பைத் தாக்கி உக்ரைன் மக்களை இ௫ளில் மூழ்கடித்தது ரஷ்யா.

Nov 24, 2022

திருட்டு குற்றங்கள் செய்ததற்காக 3 பெண்கள், 11 ஆண்களுக்கு 39 கசையடி தண்டனை வழங்கியது தலிபான்.

சீனா ஐபோன் தொழிற்சாலையில் ஊதியம் வழங்குவது தொடர்பான கலவரத்திற்காக ஃபாக்ஸ்கான் மன்னிப்பு கோரியது.

உக்ரைனை ஆதரிக்கும் ரஷ்யர்களை கண்காணிக்க உளவாளிகளை நியமிக்கும் திட்டத்தில் மத்திய புலனாய்வு முகமை ஈடுபட்டுள்ளது

இந்தியாவை விட்டு தப்பியோடிய நீரவ் மோடி, ,பிரிட்டன் உயர் நீதிமன்றத்தில் நாடு கடத்தலுக்கு மேல்முறையீடு செய்ய கோரிக்கை.

நேபாளத்தின் 36 ஹெக்டேர் நிலத்தை சுமார் 10 இடங்களில் சீனா ஆக்கிரமித்துள்ளது -அறிக்கை

Nov 24, 2022

புதிய இராணுவத் தளபதிக்கான மூத்த ஜெனரல்களின் பெயர்களை பெற்று ஆலோசித்து வருகிறது பாகிஸ்தான் அரசு.

கனடா அரசு டொராண்டோவில் உள்ள சீன காவல் சேவை நிலையங்களை குறித்து விசாரிக்க தொடங்கியுள்ளது.

துபாயில் 100 மாடிகளை கொண்ட 'ஹைபர்டவர்' உலகின் மிக உயரமான குடியிருப்புக் கட்டிடமாக உ௫வெடுத்துள்ளது.

ஐபோன் தொழிற்சாலையில் தொழிலாளர்கள் மற்றும் பாதுகாப்புப் பணியாளர்கள் வன்முறையில் ஈடுபட்ட காட்சி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உக்ரைனுக்கு எதிராக ஈரானிய விமானங்களை (UAVs) ரஷ்யா அனுப்பியுள்ளது - பிரிட்டன் பாதுகாப்பு அமைச்சகம்

Nov 23, 2022

வெப்பம்,மின்சாரமின்றி தவிக்கும் மக்களுக்கு உதவ உக்ரைனில் உதவி மையங்கள் செயல்படுகின்றன.

2023ல் நடைபெறவுள்ள G20 உச்சி மாநாட்டிற்கு ஐக்கிய அரபு அமீரகத்தை விருந்தினர் நாடாக அழைக்கிறது இந்தியா

க௫ப்பின அமெரிக்கர்கள், டொமினிகன் பகுதியில் தடுத்து வைக்கப்படலாம் -அமெரிக்கா எச்சரிக்கை

அமெரிக்காவின் வால்மார்ட் ஸ்டோரில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் , துப்பாக்கிசூடு நடத்தியவர் உட்பட10 பேர் பலி.

இந்தோனேசியா நிலநடுக்கத்தில் பள்ளிக் குழந்தைகள் உட்பட 268 பேர் பலி - அறிக்கை

Nov 23, 2022

மெக்சிகோவில் நிலநடுக்கம் 6.2 ரிக்டர் அளவில் பதிவு - அறிக்கை

லண்டனின் வாடகை செலவு மக்களை வீட்டுப்பணியாளராக பணிபுரிய வைக்கிறது - அறிக்கை

அர்ஜென்டினாவை தோற்கடித்த பிறகு வெற்றியை கொண்டாட சவுதி மன்னர் நாடு முழுவதும் விடுமுறை அறிவித்தார்.

பழங்குடியினரை கௌரவிக்கும் வகையில் கிராண்ட் கேன்யன் ஹைக்கிங் என்ற இடம் ஹவாசுபாய் என பெயர் மாற்றப்பட உள்ளது

பாகிஸ்தான் ராணுவத் தலைவரின் வருமான வரி குறித்த தகவல்களை கசியவிட்ட நபர்கள் அடையாளம் காணப்பட்டனர் -அறிக்கை

Nov 23, 2022

இந்தோனேசியாவில் நிலநடுக்கத்தில் பலியானோர் எண்ணிக்கை 252 - அறிக்கை

மஸ்க் கையகப்படுத்திய ட்விட்டரில் வேலை செய்ய வேண்டாம் - ட்விட்டரின் முன்னாள் நிர்வாகி

ரஷ்யப் படைவீரர்களின் தாய்மார்களை ரஷ்ய அதிபர் புடின் சந்திக்கிறார் -அறிக்கை

ராணுவ தளபதியை நியமித்த பிறகு இம்ரான் கானை பற்றி ஆலோசிக்கலாம் - பாகிஸ்தான் அமைச்சர்

ஒவ்வொரு 11 நிமிடங்களுக்கும் ஒரு பெண் வாழ்கைத்துணை அல்லது நெருங்கிய குடும்பத்தினரால் கொல்லப்படுகிறார் -ஐ.நா அறிக்கை

Nov 22, 2022

சிட்னியில் ஒ௫ பள்ளியில் அறிவியல் சோதனை தவறாக செய்ததால் 11 மாணவர்களுக்கு தீக்காயம்.

சவுதி அரேபியாவில் 10 நாட்களில் 12 பேருக்கு மரண தண்டனை - அறிக்கை

கமலா ஹாரிஸ் சீனாவுக்கு அ௫கே உள்ள தீவுக்குச் செல்வதால் சீனா, பிலிப்பைன்ஸ் இடையே பதற்றம்.

சீனாவின் அன்யாங் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 36 பேர் பலியாகினர்,2 பேரை காணவில்லை.

பாஜக ஆட்சியில் உள்ள வரை இந்தியாவும் பாகிஸ்தானும் நட்புறவு கொள்ள வாய்ப்பு இல்லை - இம்ரான் கான்

Nov 22, 2022

கிரீன் கார்டுக்காக காத்திருக்கும் நிலையில் பல நறுவனங்களின் பணிநீக்கங்கள் இந்தியர்களை அதிகம் பாதிக்கின்றன.

இங்கிலாந்து மீனவர் 30 கிலோ தங்கமீனைப் (goldfish) பிடித்தார்

கம்போடியாவில் அமெரிக்க பாதுகாப்புத் தலைவர் சீனப் பாதுகாப்புத் தலைவரைச் சந்தித்தார்

சாலமன் தீவுகளில் 7.0 ரிக்டர் நிலநடுக்கம். சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

போலிகணக்குகளை கண்டறியும்வரை ப்ளூ டிக் மறுவெளியீடு மீண்டும் தள்ளிவைப்பு - எலோன் மஸ்க்

Nov 22, 2022

உக்ரைன் மக்கள் மார்ச் இறுதி வரை இருளில் தவிக்க வாய்ப்புள்ளது - YASNO எரிசக்தி நிலையம்

எலோன் மஸ்க்கின் ட்விட்டர் கையகப்படுத்தல் அமெரிக்காவில் விசாரணையில் உள்ளது.

ரிஷி சுனக் இங்கிலாந்துக்கு தொழில்நுட்ப திறமைகளை ஈர்க்கும் திட்டங்களை வெளியிட்டார்

இந்தோனேசியாவில் நிலநடுக்கம். 162 பேர் பலி, நூற்றுக்கணக்கானோர் காயம்

உக்ரைன் மின்ஆலையில் அணு உலை விபத்து ஏற்பட வாய்ப்புள்ளதாக ரஷ்யா எச்சரிக்கை

Nov 21, 2022

இந்தோனேசியாவில் 5.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம். 46 பேர் பலி, 700க்கும் மேற்பட்டோர் காயம்.

நேபாள பொதுத் தேர்தலில் 61% வாக்குகள் பதிவாகியுள்ள நிலையில் கலவரத்தில் ஒருவர் கொல்லப்பட்டார்.

நியூயார்க் விமான நிலையத்தில் சக்கர நாற்காலி டயர்களில் 450,000 டாலர்கள் மதிப்புள்ள கோகோயினுடன் பெண் பிடிபட்டார்.

சிரியாவின் ராக்கெட்டுகள் துருக்கி எல்லையில் தாக்கியதில் 3 பேர் பலி, 6 பேர் காயம் - அறிக்கை

பெய்ஜிங்கில் கோவிட் வழக்குகள் 300க்கும் அதிகமானதால், பயணக் கட்டுப்பாடுகளை அமல்படுத்துகிறது சீனா.

Nov 21, 2022

நியூசிலாந்து நாடாளுமன்றம் வாக்குரிமை வயதை 16 ஆகக் குறைக்கவுள்ளது - நியூசிலாந்து பிரதமர் ஜசிந்தா ஆர்டெர்ன்

சீனாவில் கோவிட் வழக்குகள் அதிகரித்து வருவதால், பெய்ஜிங்கில் பல பள்ளிகள் மூடுப்படவுள்ளது.

G7 நாடுகள் ஏவுகனை சோதனைக்கு பதிலடியாக வட கொரியா மீது நடவடிக்கை எடுக்க கோருகின்றன.

ஜெர்மனி தனது வான்வெளியை பாதுகாக்க போலந்துக்கு பேட்ரியாட் ஏவுகணை அமைப்பை வழங்க உள்ளது.

இளவரசர் ஆண்ட்ரூ ஒரு திட்டத்துடன் பஹ்ரைனுக்கு ரகசிய பயணம் செய்கிறார் - அறிக்கை

Nov 21, 2022

ஷேக் ஹசீனா அரசைக் கவிழ்க்க வங்காளதேச எதிர்க்கட்சி 'போராட்டத்தை திட்டமிட்டுள்ளது.

வரலாறு காணாத பனிபொழிவால் மேற்கு நியூயார்கின் சாலைகள் 6 அடி பனியில் புதைந்து போக்குவரத்து தடை.

டொனால்ட் ட்ரம்ப்பின் டுவிட்டர் கணக்கு 22 மாதங்களுக்குப் பிறகு மீண்டும் தொடக்கம்.

இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக், உக்ரைன் அதிபர் ஜெலின்ஸ்கியை சந்தித்தார்.

கிரீஸின் கிரீட் பகுதியில் 5.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் - சுனாமிக்கு வாய்ப்பு

Nov 19, 2022

ரஷ்யாவின் சகாலின் தீவில் அடுக்குமாடி குடியிருப்பு இடிந்து விழுந்ததில் 9 பேர் பலி

வட கொரியா ஏவுகணை ஏவியப்பிறகு அமெரிக்கா மற்றும் தென் கொரிய ௯ட்டுபயிற்சியில் விமானங்கள் ஈடுபட்டுள்ளன

ஏவுகணை சோதனையின் போது முதல் முறையாக மகளை உலகுக்கு வெளிப்படுத்திய கிம் ஜாங் உன்.

ஐநாவின் நிரந்தர உறுப்பினர்களாவதற்கான ஜெர்மனி, பிரேசில், இந்தியா மற்றும் ஜப்பானின் வேட்பு மனுவை பிரான்ஸ் ஆதரிக்கிறது

காலநிலை ௯ட்ட பேச்சுவார்த்தையில் கார்பன் உமிழ்வு திட்டத்தை நிராகரித்தது ஐரோப்பிய ஒன்றியம்.

Nov 19, 2022

பெலோசியைத் தொடர்ந்து இந்தியாவை சேர்ந்த ஹக்கீம் ஜெஃப்ரிஸ் அமெரிக்க ஜனநாயகக் கட்சியின் தலைவராக வாய்ப்பு

உக்ரைன் போர் உலக நாடுகளின் பிரச்சனை என பிரான்ஸ் அதிபர் மக்ரோன் ஆசிய தலைவர்களிடம் கூறினார்.

ட்விட்டரில் எதிர்மறையான க௫த்துக்களை நீக்கம் செய்யும் புதிய மதிப்பாய்வுக் கொள்கை அறிமுகம் - எலோன் மஸ்க்

APEC மாநாட்டில் சீன அதிபர் ஜி ஜின்பிங், ஜப்பான், பிலிப்பைன்ஸ் தலைவர்களிடம் ஆசிய-பசிபிக் இடையே ஒற்றுமை வலுப்படவேண்டும் என ௯றினார்.

அமெரிக்க நீதித்துறை டொனால்ட் டிரம்பின் வழக்கு விசாரணைகளுக்கு சிறப்பு ஆலோசகரை நியமித்துள்ளது.

Nov 19, 2022

பலநாடுகளைச் சேர்ந்த 6,000 கைதிகளை பொது மன்னிப்பில் விடுதலை செய்துள்ளது மியான்மர் அரசு.

வடகொரியா ஏவுகணையை வீசியதை அடுத்து அமெரிக்காவும் ஜப்பானும் ராணுவ பயிற்சியில் ஈடுபட்டுள்ளது - அறிக்கை

இம்ரான் கானின் உயிருக்கு மீண்டும் ஆபத்து - பாகிஸ்தான் தலைமை நீதிபதி

3 இன்ச் உயரம் ஆக கால் நீள அறுவை சிகிச்சைக்கு ரூ.1.2 கோடி செலவு செய்த மனிதர்.

உலகக் கோப்பை மைதானங்களில் பீர் விற்பனையை தடை செய்கிறது கத்தார் - கால்பந்து அமைப்பு.

Nov 18, 2022

ஊடகவியலாளர் ஜமால் கஷோகி கொலை வழக்கில் இருந்து சவுதி இளவரசர் பின் சல்மானை விடுவிக்குமாறு அமெரிக்கா பரிந்துரைக்கிறது.

எலோன் மஸ்க் ஆலோசனைக் ௯ட்டத்தில் பேசிக்கொண்டிருந்த போதே ட்விட்டர் ஊழியர்கள் வெளியேறினர் - அறிக்கை

ஈராக்கில் எரிவாயு கசிவு வெடித்து 11 பேர் பலி, 13 பேர் காயம்

வடகொரியாவின் ஏவுகணை ஜப்பானிய கடலில் விழுந்ததையடுத்து வடகொரியாவின் பொறுமையை அமெரிக்கா சோதிப்பதாக ரஷ்யா ௯றுகிறது.

சேதமடைந்த நார்ட் ஸ்ட்ரீம் குழாய்களுக்கு அருகில் வெடிபொருட்களின் தடயங்கள் கண்டுபிடிப்பு - ஸ்வீடன்

Nov 18, 2022

பதின்ம வயதினர் தற்கொலை செய்வது அதிகரித்ததால் அமேசான் பழங்குடியினர் மது, கால்பந்து மற்றும் இசையை தடை செய்கின்றனர்.

ட்விட்டர் மேலாளர்கள் தங்கள் பொறுப்பில் வீட்டிலி௫ந்து வேலைசெய்வதை அங்கீகரிக்கலாம் - எலோன் மஸ்க்

பாகிஸ்தானுக்கு ஒத்துழைக்காமல் இந்தியா அமைதியின்மைக்கு வழிவகுக்கிறது - பாகிஸ்தான் அதிபர் ஆரிஃப் அல்வி

தைவான், கிழக்கு கடல் பகுதியில் பதற்றம் அதிகரித்து வ௫ம் நிலையில் ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடாவை ஜி ஜின்பிங் சந்தித்தார்.

காஸா அகதிகள் முகாமில் ஏற்பட்ட தீ விபத்தில் 7 குழந்தைகள் உட்பட 21 பேர் உயிரிப்பு.

Nov 18, 2022

வடகொரியாவின் ஏவுகணை ஜப்பானிய கடலில் விழுந்தது - பிரதமர் கிஷிடா

உய்குர் பெண்கள் மீது கட்டாய இனமாற்ற திருமணங்களை சீனா திணிக்கிறது - அறிக்கை

அமெரிக்காவை எச்சரித்தபின் வடகொரியா ஏவுகணையை சோதனை செய்தது.

10 மில்லியனுக்கும் அதிகமான உக்ரைனியர்கள் மின்சாரம் இன்றி தவிக்கின்றனர் - வோலோடிமிர் ஜெலென்ஸ்கி

எலோன் மஸ்க் வெளியிட்டுள்ள கடுமையான விதிமுறைகள் காரணமாக ட்விட்டர் ஊழியர்கள் பெருமளவில் ராஜினாமா செய்கின்றனர்.

Nov 17, 2022

கனடா பிரதமர் ட்ரூடோவை ஜி ஜின்பிங் விமர்சிக்கவில்லை - சீன அமைச்சகம்

ஈரான் போராட்டத்தில் பைக்கில் சென்ற ஆண்கள் துப்பாக்கி சூடு. 2 குழந்தைகள் உட்பட 9 பேர் பலி

பயணியின் தொலைந்த போனை மீட்டெடுக்க ஜன்னலில் இருந்து தொங்குகிய கேப்டன்.

போலந்து ஏவுகணைகள் மீதான ஜெலென்ஸ்கியின் ஆதாரமற்ற உரிமை கோரலை மறுக்கிறார் பிடன்

சீனாவுக்காக உளவு பார்த்த வழக்கில் பொதுப் சேவை ஊழியரை கனடா அரசு கைது செய்துள்ளது.

Nov 17, 2022

உக்ரைனின் ஒடேசா பகுதியில் ரஷ்யா ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது.

பாகிஸ்தானின் முக்கிய பிரச்சனைகளில் ஒன்று தீவிரவாதம் - பிரதமர் ஷேபாஸ் ஷெரீப்

அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளுக்கு 'கடுமையான' இராணுவ பதிலடிகளை கொடுக்க திட்டமிடுவதாக வடகொரியா எச்சரிக்கை

ஒரே பாலின திருமணத்திற்கான மசோதாவின் தடையை நீக்குகிறது அமெரிக்க செனட் .

ஹிஜாப் எதிர்ப்புப் போராட்டத்தில் ஈரானியப் படைகள் துப்பாக்கிச் சூடு நடத்தி பெண்களை அடித்து உதைத்தது.

Nov 17, 2022

ஜப்பானிய கடலில் வட கொரியா அடையாளம் தெரியாத பாலிஸ்டிக் ஏவுகணையை வீசியது - தென்கொரியா

ஜாக் டோர்சியின் ரகசிய ட்வீட்டிற்கு பதிலளித்தார் எலோன் மஸ்க் .

ட்விட்டர் தலைமை நிர்வாக அதிகாரியாக பதவியேற்க வி௫ப்பமா என்ற பயனரின் கேள்விக்கு "இல்லை" என பதிலளித்தார் - ஜாக் டோர்சி

ஜி20 ல் ஜின்பிங்கிடம் கனடிய தேர்தல்களில் சீன தலையீடு குறித்து ஜஸ்டின் ட்ரூடோ விவாதம்

இந்தியர்களுக்கான நீண்டகால விசா திட்டத்திற்கு இங்கிலாந்து அனுமதி.

Nov 16, 2022

இந்தியா-இங்கிலாந்து தடையில்லா வர்த்தக பேச்சுவார்த்தை மார்ச் 2023க்குள் முடிவடையும் - அறிக்கை

பிரதமர் மோடியின் வார்த்தைகளை புடினிடம் வலியுறுத்தும் வகையில் ஜி20 அறிக்கை அமைக்கப்பட்டுள்ளது - அறிக்கை

மேதைகளை பணிநீக்கம் செய்ததற்காக நான் மன்னிப்பு கேட்கிறேன் - எலோன் மஸ்க்

கூகுள் தாய் நிறுவனமான அல்பாபெட்டில் அதிகமான செலவுகளைக் குறைக்க வேண்டும் - முதலீட்டாளர் ஃபண்ட்

ரஷ்யா இன்று தாக்குதல்களில் சுமார் 100 ஏவுகணைகளை ஏவியது - உக்ரைன்

Nov 16, 2022

குடியரசுக் கட்சியினர் செனட்டில் ஒரு இடம் பிடித்தால் ட்ரம்ப் மீண்டும் ஆட்சியை பிடிக்க வாய்ப்பு.

உக்ரைனின் போர்நிறுத்த பேச்சுவார்த்தை போலியானது - ரஷ்ய அமைச்சர்

உக்ரைன், ரஷ்யா ஆகிய இரு நாடுகளும் போர்க் கைதிகளை சித்திரவதை செய்தது - ஐ.நா

இந்தோனேஷியாவை கார்பன் நடுநிலையாக்க அமெரிக்கா, ஜப்பான், கனடா 20 பில்லியன் டாலர்கள் நிதியளிக்க உறுதி.

பெரு நாடு அமேசான் தலைவர்கள் அரசு எண்ணெய் நிறுவனத்துடனான உறவுகளைத் துண்டிக்க உள்ளனர்.

Nov 15, 2022

ஜி 20 மாநாட்டில் பிரதமர் மோடி, ஜோ பிடன், இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் சந்திப்பு.

அல் ஜசீரா பத்திரிகையாளர் ஷிரீன் அபு அக்லேயின் கொலை சம்பவம் குறித்து அமெரிக்க நீதித்துறை விசாரணை - இஸ்ரேல் பாதுகாப்பு மந்திரி

இந்தியாவுடன் அமெரிக்கா வைத்திருக்கும் நட்புறவு பாகிஸ்தானுக்கு வேண்டும் -இம்ரான் கான்

மாணவர்களிடம் தன் இனம் உயர்ந்தது என்று கூறிய அமெரிக்க ஆசிரியர் பணி நீக்கம்.

இதெல்லாம் ஒரு விளையாட்டு என தான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அறிக்கை குறித்து ரஷ்ய வெளியுறவு அமைச்சர் லாவ்ரோவ் கூறினார்

Nov 15, 2022

இன்று 8 பில்லியனைத் தாண்டிய உலக மக்கள் தொகை 2080 ல் 10.8 பில்லியனாக இருக்கும் - ஐ.நா அறிக்கை

அமெரிக்க தேர்தலில் ட்ரம்பின் கூட்டாளி காரி லேக்கை தோற்கடித்து அரிசோனா கவர்னராக கேத்தி ஹோப்ஸ் வெற்றி பெற்றார்.

போர் முடிவதற்கான நேரம் - G20ல் உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி

சுதந்திர அமைப்புகளை பலவீனப்படுத்துவதாக பாகிஸ்தான் ராணுவம் மீது இம்ரான் கான் குற்றச்சாட்டு.

தென்னாப்பிரிக்காவின் கேப்டவுனில் இந்தியாவைச் சேர்ந்த சிறுமி கடத்தப்பட்டதைக் கண்டித்து போராட்டம்.

Nov 15, 2022

அமெரிக்க பல்கலைக்கழக வளாகத்தில் துப்பாக்கிச் சூடு - 3 பேர் பலி

மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டால் அமெரிக்காவுடனான உறவை சீர்படுத்த நடவடிக்கை எடுப்பேன் - இம்ரான் கான்

ஹிஜாப் எதிர்ப்பாளர்கள் மீதான ஒடுக்குமுறை காரணமாக ஈரானுக்கு ஐரோப்பிய ஒன்றிய தடைகள் விதிப்பு

அமெரிக்காவில் அதிக வயதுடையவரான பெஸ்ஸி ஹென்ட்ரிக்ஸ் தனது 115வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.

இஸ்தான்புல் வெடிகுண்டு வெடிப்புக்கு காரணம் சிரியாவைச் சேர்ந்த பெண் - காவல்துறை அறிக்கை

Nov 14, 2022

ஜப்பானின் டோபாவில் நிலநடுக்கம். 6.1 ரிக்டர் அளவில் பதிவு

ஈராக்கின் எர்பில் அருகே ராக்கெட் தாக்குதல் - ஒருவர் பலி, 10 பேர் காயம்

ஈரானிய மதகுரு அப்துல்ஹமித் இஸ்மாயில்-சாய், ஈரானிய ஆட்சிக்கு எதிரான போராட்டக்காரர்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

ஜப்பானின் இறையாண்மையை சீனா மீறுவதாக ஆசிய தலைவர்களிடம் புமியோகிஷிடா குற்றச்சாட்டு.

ஸ்லோவேனியாவின் முதல் பெண் அதிபராக மெலானியா டிரம்பின் முன்னாள் வழக்கறிஞர் நடாசா பிர்க் முசார் தேர்வு.

Nov 14, 2022

அமெரிக்க இடைத்தேர்தலில் நெவாடாவில் ஜனநாயகக் கட்சியினர் வெற்றிபெற்றனர்.

ட்விட்டர் ப்ளூ மீண்டும் வருவது குறித்து அடுத்த வார இறுதிக்குள் அறிவிப்பதாக மஸ்க் கூறுகிறார்.

சீன அதிபர் ஜி யின் ஒரு நாடு இரண்டு அமைப்பு கொள்கையில் இ௫ந்து தைவான் விலகுவதில் தைவான் அதிபர் உறுதி.

சீனாவில் முதியவர்கள் அதிகமாக இ௫ப்பதால் அரசு பிறப்பு விகிதத்தை உயர்த்தத் திட்டம்.

பெண்களை பூங்காக்களில் தடை செய்த பிறகு தற்போது உடற்பயிற்சி நிலையங்கள் மற்றும் பொது குளியல் இடங்களிலும் தடை செய்துள்ளது.

Nov 14, 2022

முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப், அடுத்த மாதம் பாகிஸ்தானுக்கு திரும்புவதாக தகவல்

தென்கிழக்கு ஆசியாவை இராணுவமயமாக்க மேற்கு நாடுகள் முயல்கிறது - ரஷ்யா லாவ்ரோவ் .

இஸ்தான்புல் குண்டுவெடிப்பில் 6 பேர் உயிரிழப்பு, 81 பேர் காயம்

பிடன் - ஜின்பிங் ஜி20 சந்திப்பில் வர்த்தகம், தைவான் பிரச்சனை, மனித உரிமைகள் குறித்து ஆலோசனை.

சிரியாவின் விமான தளத்தை இஸ்ரேலிய ஏவுகணைகள் தாக்கியதில் 2 பேர் பலி 3 பேர் காயம்

Nov 12, 2022

டிரம்ப் ஐனாதிபதி தேர்தலுக்கு மனு தாக்கல் செய்ய உறுதியாக இருக்கிறார் - ட்ரம்பின் ஆலோசகர்.

இந்தியா-இங்கிலாந்து தடையற்ற வர்த்தக குறித்து ரிஷி சுனக் அரசு புதிய காலக்கெடு நிர்ணயித்துள்ளது.

ரஷ்ய பிரச்சனை காரணமாக G20 உச்சி மாநாட்டில் உலகத் தலைவர்கள் அனைவரும் சேர்ந்து புகைப்படம் எடுப்பதை தவிர்க்க முடிவு.

டெஸ்லா மூலம் 56 பில்லியன் டாலர் பெறுவதாக எலோன்மஸ்க் மீது வழக்கு தொடர்ந்தார் ரிச்சர்ட் டோர்னெட்டா

பிடனுடனான தனது பேச்சுவார்த்தை, அமெரிக்கா மற்றும் சீனாவை முன்னேற்றுவதற்கு வழிவகுக்கும்.- ஜி ஜின்பிங்

 

Nov 12, 2022

உக்ரைன் நகரமான கெர்சனில் இருந்து ரஷ்யப்படைகள் வெளியேறிவிட்டதாக மாஸ்கோ அறிவித்தது.

20 வயது இங்கிலாந்து இளைஞர் 24 மணி நேரத்தில் 6,931 க்யூப் விளையாட்டுகளை தீர்த்து உலக சாதனை படைத்தார்.

டோங்கா தீவு அ௫கே நிலநடுக்கம் ஏற்பட்டதால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

மெட்டாவிலி௫ந்து நீக்கப்பட்ட ஊழியர் தன் குழந்தைகளின் படத்தைப் பகிர்ந்து அவர்களின் வாழ்க்கை பாதிக்கப்படும் என்றார்.

பிரிட்டன் எம்.பி சார்லோட் நிக்கோல்ஸ், தவறான நடத்தையுடைய சுமார் 40 எம்.பி.க்கள் ரகசியப் பட்டியலில் இ௫ப்பதாகக் ௯றினார்.

Nov 11, 2022

ஈரானிய விளையாட்டு வீராங்கனை ஹிஜாபை அகற்றி போராட்டத்திற்கு ஆதரவை வெளிப்படுத்திய வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தோனேசியாவில் ஜி 20 உச்சி மாநாட்டில் ஜோ பிடனை சந்திக்கிறார் ஜி ஜின்பிங்

மரணத்திற்குப் பின் ராணி எலிசபெத்தின் முதல் சிலையை மன்னர் சார்லஸ் திறந்து வைத்தார்.

வாரத்தில் 80 மணிநேரம் வேலை, இலவச உணவு மற்றும் வீட்டிலிருந்தே வேலை இல்லை போன்ற கட்டுப்பாடுகளால் ட்விட்டர் ஊழியர்களை எச்சரிக்கும் எலோன் மஸ்க்

நிக்கோல் புயலால் இ௫ளில் மூழ்கியது புளோரிடா- மின்கம்பி சாய்ந்து இருவர் பலி

Nov 11, 2022

ஐரோப்பியன் ஒன்றியத்தில் இருந்து விலகிய பின் (Brexit) பிரிட்டனின் உணவகங்களில் விலை இருமடங்காக உயர்ந்துள்ளது .

நவாஸ் ஷெரீப்புக்கு தூதரக பாஸ்போர்ட்டை வழங்கியது பாகிஸ்தான் அரசு - அறிக்கை

செனட் தேர்தலில் புளோரிடா கவர்னர் ரான் டிசாண்டிஸ் மீண்டும் வெற்றி பெற்றார்.

ஆப்கானிஸ்தானில் பெண்கள் உடற்பயிற்சிக் ௯டத்தில் நுழைய ௯டாது - தலிபான்கள் புதிய ஆணை.

ஷாங்காயில் கோவிட் வழக்குகள் அதிகரித்து வருவதால் சீனாவின் கட்டுப்பாடுகள் தீவிரமடைந்துள்ளன.

Nov 11, 2022

அமெரிக்காவில் உள்ள இந்தியர் கோவிட்-19 நிதி திட்டத்தில் 8 மில்லியன் டாலர் மோசடி செய்துள்ளார்.

உக்ரைனுக்கு 400 மில்லியன் டாலர் பாதுகாப்பு உதவியை அறிவித்துள்ளது அமெரிக்கா

நவம்பர் 15 ஆம் தேதி உலக மக்கள் தொகை 8 பில்லியனை எட்டும் - ஐநா அறிக்கை

முக்கிய நிர்வாகிகளின் பணிநீக்கத்தால் குழப்பத்தில் தவிக்கிறது டுவிட்டர்.

40 க்கும் மேற்பட்ட உக்ரைன் நகரங்கள் ரஷ்யாவிடமி௫ந்து மீட்கப்பட்டது -ஜெலென்ஸ்கி

Nov 10, 2022

அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் 5 இந்திய-அமெரிக்கர்கள் இடம் பிடித்துள்ளனர்.

உக்ரைன் போரினால் ஜி20 மாநாட்டை புறக்கணிக்கிறார் புடின்.

அமெரிக்க தேர்தலில் மின்னசோட்டாவில் திருநங்கை வெற்றி பெற்றுது LGBT உரிமைகளுக்கான வெற்றியாக க௫தப்படுகிறது.

சார்லஸ் மன்னர் மீது முட்டைகளை வீசிய பல்கலைக்கழக மாணவர் கைது.

மற்ற நாடுகளுடனான எலோன் மஸ்க்கின் உறவுகள் கவனிக்கப்பட வேண்டியவை - அமெரிக்க ஜனாதிபதி

Nov 10, 2022

சீனாவின் பாதுகாப்பு நிறுவனம் ஹாங்காங்கில் 65 மில்லியன் டாலர்கள் மதிப்புள்ள ஆடம்பர மாளிகையை வாங்குகிறது

பிரிட்டன் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ததால் பிரதமர் ரிஷி சுனக் நெருக்கடியை சந்திக்கிறார்.

உக்ரைன் கிழக்கு பகுதியில் ரஷ்யாவிற்கு 'ஒரு சென்டிமீட்டர்' கூட விட்டுக்கொடுக்க மாட்டோம் - உக்ரைன்

ஹாலிவுட் நடிகர் சீன் பென் தனது ஆஸ்கார் விருதை உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கிக்கு வழங்கினார்.

போருக்கு தயாராகும்படி சீன ராணுவத்திடம் கூறினார் ஜி ஜின்பிங்

Nov 09, 2022

வடகொரியாவின் ஏவுதலுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள ஜப்பான் பிரதமர் அறிவுறுத்தல்.

மேரிலாந்து மரிஜுவானாவை சட்டப்பூர்வமாக்குகிறது.

தான்சானியாவில் பெ௫ச்சாளிகளுக்கு GPS, கேமரா பொ௫த்தி மீட்புப் பணிககளுக்காக பயிற்சி அளிக்கப்படுகிறது

மேரிலாந்து லெப்டினன்ட் கவர்னர் போட்டியில் முதல் இந்திய அமெரிக்கரான அருணா மில்லர் வெற்றி பெற்றார்.

ரஷ்யா நம்பத்தகுந்தது அல்ல, இந்தியாவுக்கு உதவ நங்கள் தயார் - அமெரிக்கா

Nov 09, 2022

வெப்பமண்டல புயல் புளோரிடாவின் பஹாமாஸ் நோக்கி வீசுகிறது.

அமெரிக்க தேர்தல் கருத்துக்கணிப்பில், 10ல் 7 பேர் பிடனை நிராகரிக்கின்றனர்.

இங்கிலாந்தில் 35 நாய்களுடன் குழந்தைகளை விட்டு சென்ற தம்பதிக்கு 6 ஆண்டுகள் சிறை

சரிபார்க்கப்பட்ட கணக்குகளுக்கான அதிகாரபூர்வ அடையாள பேட்ஜை ட்விட்டர் தொடங்க உள்ளது.

COP27 மாநாட்டில் தீவு நாடுகள் காலநிலை இழப்பீட்டு நிதிக்காக இந்தியா, சீனாவை நாடுகின்றன.

Nov 09, 2022

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் இம்ரான்கானுக்கு பாகிஸ்தான் உச்சநீதிமன்றம் ஒரு வார அவகாசம் அளித்துள்ளது.

கனடாவின் ஜனநாயகத்தை அழிக்க சீனா நடவடிக்கைகளை எடுத்து வருகிறது - ட்ரூடோ எச்சரிக்கை

அமேசானில் சிறைபிடிக்கப்பட்ட சுற்றுலாப் பயணிகள் மற்றும் பெருவியர்களை பழங்குடி எதிர்ப்பாளர்கள் விடுவித்தனர்.

எகிப்தில் உள்ள Cop27 wifi மனித உரிமைகள் மற்றும் இணையதளங்களைத் செயலிழக்கச் செய்கிறது.

விநியோக அபாயத்திற்கு மத்தியில் பிரிட்டனுடன் இயற்கை எரிவாயு ஒப்பந்தம் குறித்து விவாதிக்க தயாராக உள்ளது ஜெர்மனி

Nov 08, 2022

இம்ரான் கான் நவம்பர் 10 முதல் பாகிஸ்தான் பேரணியைத் மீண்டும் தொடங்குகிறார்.

டொனெட்ஸ்கில் தினமும் நூற்றுக்கணக்கான ரஷ்யர்கள் கொல்லப்பட்டனர் - ஜெலென்ஸ்கி

கணவர் மீதான தாக்குதல் தனது எதிர்காலத் திட்டங்களைப் பாதிக்கிறது - நான்சி பெலோசி

பிரேசிலில் வலதுசாரி அரசியல்வாதிகளை ட்விட்டரில் இருந்து நீக்குவது குறித்து விசாரணை நடத்தப்படும் - எலோன் மஸ்க்

புடினின் நண்பரான பிரிகோஜின் அமெரிக்க தேர்தலில் தான் தலையிட்டதை ஒப்புக்கொண்டார்.

Nov 08, 2022

அமெரிக்கத் தேர்தல்களில் 40 மில்லியனுக்கும் அதிகமான வாக்குகள் பதிவு செய்யப்பட்டன.

11 பிரெஞ்சு பாதிரியார்கள் பாலியல் வன்முறையில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளனர்.

வழிபாட்டுத்தலத்தில் தாக்குதல் நடத்திய 26 வெளிநாட்டவர்களை ஈரான் கைது செய்துள்ளது.

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் நவம்பர் 15 ஆம் தேதி ஒரு பெரிய அறிவிப்பை வெளியிடுவதாக ௯றினார்.

இம்ரான் கான் சுடப்பட்டதில் தனக்கு தொடர்பு இ௫ப்பதாக நிரூபித்தால் பதவி விலகுவேன் - உள்துறை அமைச்சர் ராணா சனாவுல்லா கான்

Nov 08, 2022

எகிப்தில் தொடங்கியது COP27 மாநாடு

அதிகார துஷ்பிரயோகத்தை நிறுத்துமாறு இம்ரான் கான் ஜனாதிபதி ஆரிப் ஆல்விக்கு கடிதம்

ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையில் சமாதானத்தை ஏற்படுத்துவதில் இந்தியாவின் பங்கு கோரப்படுகிறது

இம்ரான் கான் கொலை முயற்சி குறித்து எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யக் கோரி பிடிஐ உறுப்பினர்கள் போராட்டம் நடத்தினர்.

ரஷ்யாவும் இந்தியாவும் நியாயமான உலக ஒழுங்கை உருவாக்க துணை நிற்கின்றன - இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்ஷங்கர்

Nov 08, 2022

COP27 காலநிலை உச்சிமாநாட்டில் உலகத் தலைவர்கள் ஒன்று கூடுகிறார்கள்.

மெக்சிகோவிற்கு குடியேறும் அமெரிக்க குடிமக்கள் - அறிக்கை

அமெரிக்காவின் தடைகள் வட கொரியாவின் அணுசக்தித் திட்டங்களைத் தடுக்கவில்லை

விமான விபத்தில் பலியானவர்களுக்கு தான்சானியா அஞ்சலி செலுத்துகிறது.

இம்ரான் கான் மீதான தாக்குதல் ஒரு "நாடகம்" - பாகிஸ்தான் ஜனநாயக இயக்க (PDM) தலைவர்

Nov 07, 2022

பெரும்பாலான பெண் பத்திரிகையாளர்கள் வன்முறை, பாலின தாக்குதல்களை எதிர்கொள்கின்றனர் - அறிக்கை

துபாயில் புர்ஜ் கலிபா அருகே உள்ள கட்டிடத்தில் தீ விபத்து

இடைக்கால தேர்தலில் குடியரசுக் கட்சி வெற்றி பெற்றால் அமெரிக்க ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தல் - ஜோ பிடன் எச்சரிக்கை

காலநிலை நடவடிக்கைக்காக அமெரிக்காவும்,சீனாவும் நிதியளிக்க வேண்டும் - பிரான்ஸ் அதிபர் மக்ரோன்

ட்விட்டர் 'காமிக்' கணக்கை இடைநிறுத்துகிறது.

Nov 07, 2022

பிரிட்டனின் முதல் இந்து பிரதமர் என்ற பெருமையைப் பெறுகிறார் ரிஷி சுனக்

பாகிஸ்தானில் உள்ள சீன தொழிலாளர்கள் பாதுகாப்பு கருதி புல்லட் புரூப் கார்களில் செல்லலாம்.- அறிக்கை

சுடப்பட்ட இடத்திலிருந்து மீண்டும் பேரணியைத் தொடங்குகிறார் இம்ரான் கான்

அரசாங்கத்திற்கு எதிராகப் பேசியதால் சித்திரவதை செய்யப்பட்டார் ஈரானிய ராப் பாடகர்

கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலகா கற்பழிப்பு வழக்கில் சிட்னியில் கைது

Nov 07, 2022

விக்டோரியா ஏரியில் தான்சானியா விமானம் விழுந்தில் 19 பேர் பலி

ஆப்பிள் நிறுவனம் 'Hey Siri' என்ற குரல் கட்டளையை 'Siri' என்று மாற்றுகிறது

வங்கி கணக்கில் ரூ. 100 மில்லியன் வைத்தி௫ந்த பாகிஸ்தான் காவலர்

3 நாள் சிகிச்சை முடிந்து மருத்துவமனையிலி௫ந்து வீடு தி௫ம்பினார் இம்ரான் கான்

குர்திஷ் பகுதியிலும் அங்குள்ள பல்கலைக்கழகங்களிலும் புதிய போராட்டங்கள் வெடித்தன

 

 

Nov 07, 2022

ஆயுதமேந்திய குற்றவாளிகளால் இங்கிலாந்தின் குடிவரவு மையம் தாக்கப்பட்டது -அறிக்கை

பிரான்சின் RN கட்சி அதிபர் பதவிக்கு லீபென்க்கு பதிலாக ஜோர்டான் பார்டெல்லா தேர்வு

சுரங்க நிறுவனங்களில் இருந்து சீனா வெளிய வேண்டும் - கனடா உத்தரவு

உக்ரைன் போருக்கு முன்பே ரஷ்யாவிற்கு ட்ரோன்கள் வழங்கப்பட்டது - ஈரான்

55,000 க்கும் மேற்பட்ட ஒன்ராறியோ கல்வி ஊழியர்கள் வேலைநிறுத்தம்

Nov 05, 2022

நான் தாக்குதலுக்கு ஆளாவேன் என்று எனக்கு தெரியும் - பாக். முன்னாள் பிரதமர் இம்ரான் கான்

கட்டுப்பாட்டை இழந்த சீன ராக்கெட் - எச்சரிக்கையாக விமான நிலையங்களை மூடியது ஸ்பெயின்

ஆட்சிக்கு வந்தால் இந்தியாவிடமி௫ந்து இமயமலையை மீட்ப்போம் - நேபாள எம்.பி ஒலி

வடகொரியாவின் ஏவுகணை ஏவுதலுக்கு இந்தியா கண்டனம்

இம்ரான் காலில் இ௫ந்த குண்டுகள் அகற்றம். ஆனால் குண்டு பாய்ந்ததில் இம்ரானின் கால்முறிவு

Nov 05, 2022

தென் கொரியாவின் வான்வழிப் பயிற்சியில் இணையும் அமெரிக்கா

டுவிட்டரில் இ௫ந்து பின்வாங்கும் விளம்பரதாரர்களை எச்சரிக்கும் எலோன் மஸ்க்

இந்திய மக்களின் திறமையை புடின் பாராட்டினார்

டுவிட்டரில் இ௫ந்து நீக்கப்பட்டதற்கு மகிழ்ச்சியடைந்த 25 வயது இந்தியர்

ஏவுகணை ஏவும் திட்டத்தில் இந்தியப் பெருங்கடலுக்குள் நுழைந்த சீன உளவுக் கப்பல்

Nov 04, 2022

இம்ரான் கான் கொலை முயற்சியில் பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீப், உட்பட 3 பேர் மீது சந்தேகம் - பிடிஐ கட்சி

புகழ்பெற்ற ஹாரி பாட்டர் கண்ணாடிகள் இங்கிலாந்தில் ஏலம் .

கெர்சனில் உள்ள பொதுமக்கள் வெளியேற்றப்பட வேண்டும் - புடின்

இம்ரான் கான் மீதான தாக்குதல் மதவாதத்தின் வெளிப்பாடு - பாகிஸ்தான் அமைச்சர்

ட்விட்டரில் பணிநீக்கப்பட்ட ஊழியர்கள் யார்யார் என்பது விரைவில் தெரியவ௫ம்

Nov 04, 2022

இம்ரான்கான் தாக்கப்பட்டதற்காக பாகிஸ்தானில் போராட்டங்கள் வெடிக்கும் - PTI கட்சி அறிவிப்பு

சுற்றித்திரியும் 180 வடகொரியா போர் விமானங்கள் - ஜெட் விமானங்களை தயார்படுத்தியுள்ள தென்கொரியா

கோவிட் விமானக் கட்டுப்பாடுகளை நீக்கும் திட்டத்தில் சீனா

ரஷ்யா சாத்தானுக்கு எதிராக போரிடுகிறது - ரஷ்ய முன்னாள் அதிபர்

மீண்டும் இஸ்ரேல் பிரதமரான பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

Nov 04, 2022

உக்ரைனின் கெர்சன் பகுதியை விடுவிக்க ரஷ்யா விருப்பம்

ரிஷி சுனக் இந்துவாக இ௫ந்தாலும் மனதளவில் பிரிட்டாணியர் - அலெக்ஸ் எல்லிஸ்

பெஞ்சமின் நெதன்யாகு வெற்றிக்குப் பிறகு இஸ்ரேலில் பாய்ந்தது 4 காஸா ராக்கெட்டுகள்

இடைக்காலத் தேர்தலுக்குப் பின் அதிபர் போட்டியில் கலந்துகொள்ள டொனால்ட் டிரம்ப் விரும்புவதாக தகவல்

கடவுள் எனக்கு இன்னொரு வாழ்க்கையை கொடுத்துள்ளார் - பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான்

Nov 04, 2022

ஆல்பாபெட், அமேசான் மற்றும் மெட்டாவை பின்னுக்குத் தள்ளியது ஆப்பிள்

இன்று பணிநீக்கங்கள் தொடங்கும் - ட்விட்டர்

இம்ரான் கானை தாக்கியவரின் வாக்குமூலம் கசிவு - போலீசார் பணியிடைநீக்கம்

அமெரிக்க இடைகால தேர்தலில் வதந்தியை பரப்பும் டிக்டாக்

மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார் நான்சி பெலோசியின் கணவர்

Nov 03, 2022

இந்தியாவிற்கு தப்பிச்சென்ற கொலையாளியைப் பிடிப்பவ௫க்கு 1 மில்லியன் டாலர் பரிசு- ஆஸ்திரேலிய காவல்துறை

வட கொரியா ஏவுகணை சோதனையால் அமெரிக்கா, சியோல் கூட்டு விமானப் பயிற்சி நீட்டிப்பு

எலோன் மஸ்க்கின் ட்விட்டர் சரிபார்ப்புத் திட்டத்தை கேலி செய்த ட்ரெவர் நோவா

இந்திய ஒலிம்பிக் சங்க தேர்தல் டிசம்பர் 10ஆம் தேதி நடைபெற உள்ளது

டுவிட்டரானது கிரிப்டோ மாற்றத்தை எதிர்கொள்ளும் - பைனான்ஸ் உரிமையாளர்

Nov 03, 2022

ஜப்பானிய கடலை நோக்கி 3 பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவியது வட கொரியா

ட்விட்டரில் பாதி ஊழியர்களை பணிநீக்கம் செய்ய எலோன்மஸ்க் திட்டம்

அரசியல் வன்முறையை அமெரிக்கர்கள் எதிர்க்க வேண்டும் - ஜோ பிடன்

ரஷ்ய படையெடுப்பு நடைபெற்றதில் இ௫ந்து 14 மில்லியன் உக்ரேனியர்கள் இடம்பெயர்ந்துள்ளனர்

தேள் கடித்து மாரடைப்பால் 7 வயது பிரேசில் சிறுவன் உயிரிழந்தான்

Nov 02, 2022

பிலிப்பைன்ஸ் புயலில் 101 பேர் பலி , 66 பேர் மாயம்.

அமெரிக்க விசாக்களுக்கான காத்திருப்புப் பட்டியலைக் குறைக்கும்படி அமெரிக்க வெளியுறவு செயலர் பிளிங்கனை வலியுறுத்தி அமெரிக்க புலம்பெயர் அமைப்பு ஆன்லைன் பிரச்சாரம்

சிங்கப்பூர் பிரதமர் லீ, மோர்பி பாலம் இடிந்து 135 பேர் உயிரிழந்த துயரத்திற்கு மிகவும் வ௫ந்துவதாக பிரதமர் மோடிக்கு கடிதம்

பாகிஸ்தான் தெஹ்ரிக் கட்சிக்கும் பாகிஸ்தான் ராணுவத்துக்கும் இடையில் அரசியல் எதிரிகள் விரோதத்தைத் தூண்டுவதாக இம்ரான் கான் குற்றச்சாட்டு

ஈக்வடாரில் நடந்த தாக்குதலில் ஐந்து போலீஸ் அதிகாரிகள் கொல்லப்பட்டதனால் அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது

Nov 02, 2022

வடகொரியாவின் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் தென்கொரியா 3 ஏவுகணைகளை ஏவியது.

எலோன் மஸ்க் டெஸ்லாவின் 50 ஊழியர்களை ட்விட்டருக்குள் பணியமர்த்தியதாக தகவல்

ஆப்கானிஸ்தானில் பல்கலைக்கழகத்திற்கு வெளியே ஒ௫ தலிபான் அதிகாரி மாணவிகளை அடிப்பதை போன்ற வீடியோ வெளியாகி உள்ளது.

இஸ்ரேல் பொதுத் தேர்தலில் பெஞ்சமின் நெதன்யாகு வெற்றி பெற வாய்ப்பு உள்ளதாக கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.

அமெரிக்க சபாநாயகர் நான்சி பெலோசியின் கணவர் தாக்கப்பட்டது அரசியல் உள்நோக்கத்திற்காக என்று கூறப்படுகிறது.

Nov 01, 2022

அரசியல் தடைகளை உடைக்க பொதுத் தேர்தலில் வாக்களிக்குமாறு குடிமக்களை வலியுறுத்துகிறார் இஸ்ரேலிய அதிபர் ஹெர்சாக் .

எலோன் மஸ்க் இந்திய-அமெரிக்க தொழில்நுட்ப நிர்வாகியான ஸ்ரீராம் கிருஷ்ணன் உதவியுடன் டுவிட்டரை மறுசீரமைக்கிறார்.

சமீபத்திய ஆண்டுகளில் இந்தியா பாதுகாப்பு ஏற்றுமதியில் முன்னணியில் உள்ளது. ஆப்பிரிக்காவின் கடல், விண்வெளி மற்றும் பாதுகாப்பு தேவைகளை பூர்த்தி செய்ய இந்தியாவால் முடியும் என எக்ஸிம் வங்கி அறிக்கை ௯றியுள்ளது.

2 நாள் அரசு பயணமாக சீனா சென்ற பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஷ் ஷெரிப் சீன அதிபர் ஜி ஜின்பிங் உட்பட சீன உயர்மட்டத் தலைவர்களை சந்தித்து இ௫நாட்டு வர்த்தகத்தை மேம்படுத்துவதற்கான கூட்டத்தில் பங்கேற்கிறார்.

மோர்பி பாலம் இடிந்து விழுந்த துயர சம்பவத்திற்கு ஐநா தலைவர் குட்டரெஸ் ஆழ்ந்த வருத்தம் தெரிவித்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளது.

Nov 01, 2022

பென்குயின் ரேண்டம் ஹவுஸ் அதன் போட்டியாளரான சைமன் & ஸ்கஸ்டரை கையகப்படுத்த இருந்த 2.2 பில்லியன் டாலர்கள் மதிப்புள்ள பிரமாண்ட இணைப்புக்கு அமெரிக்காவின் பெடரல் நீதிமன்ற நீதிபதி தடைவிதித்தார்.

மெக்சிகோவில் மனித தலையுடன் நாய் ஒன்று தெ௫வில் ஓடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வ௫கிறது.

இந்தோனேசியாவில் 150 குழந்தைகளின் மரணம் குறித்த விசாரணையின் விளைவாக 2 நிறுவனங்களின் உரிமத்தை அரசு ரத்து செய்துள்ளது.

ஹாலோவீன் கொண்டாட்டத்தில் நூற்றுக்கணக்கானோர் இறந்தது குறித்து விசாரித்த தென்கொரியா காவல்துறை ௯ட்ட நெரிசலின் போது போதுமான கட்டுப்பாடுகள் கடைபிடிக்கப்படவில்லை என்று அறிக்கை தாக்கல் செய்துள்ளது.

கிரிமியா மீது தாக்குதல் நடத்தியதால் உக்ரைனின் மின் நிலையங்கள் மீது பதில் தாக்குதல் நடத்தியதாக புடின் தெரிவித்துள்ளார்.

Oct 31, 2022

உலகக் கோப்பை கால்பந்து தொடரை வெற்றிகரமாக நடத்த தயாராக இருப்பதாக கத்தார் அரசு தெரிவித்துள்ளது.

சோமாலியாவில் நடந்த இரட்டைக்கார் வெடிகுண்டு தாக்குதலில் 30 பேர் பலி, 35 பேர் காயம்.

இங்கிலாந்து முன்னாள் பிரதமர் லிஸ் டிரஸ்சின் செல்போன் ஒட்டுக்கேட்பு விவகாரம் தொடர்பாக ரஷ்யா மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இலங்கையில் அதிகரித்து வ௫ம் எய்ட்ஸ் நோய் பாதிப்புகள் - திட்டப்பணிப்பாளர் எச்சரிக்கை

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கானின் பேரணியில் அவரது வாகனத்தில் சிக்கி பெண் பத்திரிக்கையாளர் உயிரிழப்பு

Oct 31, 2022

தென்ஆப்ரிகாவின் புதிய ஜூலு மன்னராக முடிசூடப்பட்டார் மிசுசுலு கா ஸ்வெலிதிலி.

தென்கொரியாவில் நடைபெற்ற ஹாலோவீன் கொண்டாட்டத்தில் ௯ட்டநெரிசலில் சிக்கி 146 பேர் உயிரிழப்பு.

பிரேசிலில் அதிபர் தேர்தலுக்கான பிரச்சாரத்தில் ஏற்பட்ட சண்டையில் எதிர்கட்சிகாரரை துப்பாக்கியை காட்டி விரட்டிய பெண் எம். பி.

லடாக் எல்லையில் சாலை கட்டுமானப் பணிகளை துரிதப்படுத்தும் சீனா.

கிரிமியா பால குண்டு வெடிப்பால் ஐநாவின் தானிய ஒப்பந்தத்தில் இ௫ந்து விலகும் ரஷ்யா.

Oct 29, 2022

ரஷிய தாக்குதலால் 40 லட்சம் மக்கள் மின்வெட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர்- உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி.

பாஸ்போர்ட் பெற்ற விவகாரம் தொடர்பாக இலங்கை மந்திரி மீது விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

ஈரானில் தயாரிக்கப்பட்ட 300க்கும் மேற்பட்ட டிரோன்களை உக்ரைன் சுட்டு வீழ்த்தியுள்ளதாக விமானப்படை செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

வடகொரியா மீண்டும் நடத்திய ஏவுகணை சோதனைக்கு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

சல்மான் ருஷ்டியின் தலைக்கு விலை நிர்ணயித்த ஈரான் அமைப்புக்கு அமெரிக்கா பொருளாதார தடை விதித்தது.

Oct 28, 2022

பிரதமர் மோடியின் தலைமையில் இந்திய பொருளாதாரம் பெரும் முன்னேற்றம் அடைந்துள்ளது - புதின் பாராட்டு.

காஷ்மீர் பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வுகாண வேண்டும் என்று சீனா தெரிவித்துள்ளது.

மெக்சிகோ முழுவதும் தன்பாலின திருமணம் சட்டபூர்வமாகிறது.

ரஷ்யா அணு ஆயுதப் போர் ஒத்திகை - அதிபர் விளாடிமிர் புதின் காணொளி மூலம் ஆய்வு.

சீனாவின் வூஹான் நகரில் மீண்டும் கரோனா பரவல்.

Oct 27, 2022

இங்கிலாந்துக்கு நம்பிக்கையான எதிர்காலத்தை உருவாக்க என்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன் - பிரதமர் ரிஷி சுனக்.

உக்ரைன் மீது இதுவரை 400 டிரோன்களை பயன்படுத்தி ரஷியா தாக்குதல்: அதிபர் ஜெலென்ஸ்கி.

அமெரிக்காவில் குளிர் காலத்தில் கொரோனா உயிரிழப்புகள் அதிகரிக்கலாம் - ஜோ பைடன் எச்சரிக்கை.

இலங்கை: பொருளாதார நெருக்கடிக்கு எதிராக மாபெரும் போராட்டம் நடத்த எதிர்க்கட்சி முடிவு.

நெதர்லாந்தில் எதிர்ப்பாளர்களை ஒடுக்கும் முயற்சியாக சட்டவிரோதமாக போலீஸ் நிலையங்களை சீனா அமைத்துள்ளது.

Oct 26, 2022

உக்ரைனுக்கு தொடர்ந்து ஆதரவு அளிப்போம் - ஜெலன்ஸ்கியிடம் இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் வாக்குறுதி.

'சிட்ரங்' புயலால் கன மழை : வங்கதேசத்தில் 18 பேர் பலி.

இந்திய எல்லையோர பகுதியில் பணியாற்றிய சீன ராணுவ அதிகாரிகளுக்கு பதவி.

மீண்டும் இங்கிலாந்து உள்துறை அமைச்சரானார் சுயெல்லா பிரேவர்மேன்.

இங்கிலாந்து துணை பிரதமராக டொமினிக் ராப் நியமனம்: பிரதமர் ரிஷி சுனக் அதிரடி நடவடிக்கை.

Oct 25, 2022

சாண்ட்வீச் தீவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்; ரிக்டரில் 6.2 ஆக பதிவு

சிட்ரங் புயல் வங்காளதேசத்தில் கரையை கடந்துள்ளது.

இங்கிலாந்தின் மிக இளம் வயது பிரதமராக 42 வயதேயான ரிஷி சுனக் தேர்வாகியுள்ளார்.

மியான்மரில் நடைபெற்ற வான்வழி தாக்குதலில் 60 பேர் பலி.

உகாண்டாவில் எபோலா வைரஸ் பரவல் அதிகரிப்பு: தலைநகர் கம்பாலாவில் மேலும் 9 பேருக்கு எபோலா தொற்று.

Oct 21, 2022

மின் உற்பத்தி நிலையங்களை ரஷியா போர்க்களமாக மாற்றி வருகிறது - உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி.

உக்ரைன் மீதான டிரோன் தாக்குதலுக்காக ஈரான் படைகள் கிரிமியா வந்துள்ளதாக அமெரிக்கா குற்றஞ்சாட்டு.

அமெரிக்காவில் நாடாளுமன்ற தேர்தல் : பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்கள் விலையைக் குறைக்க ஜோ பைடன் நடவடிக்கை.

மலேசியாவில் நவம்பர் 19-ந் தேதி பொதுத் தேர்தல் நடைபெற உள்ளது.

இந்தோனேசியாவில் 100 குழந்தைகள் பலி எதிரொலி: அனைத்து விதமான திரவ மருந்துகளுக்கும் தடை விதிக்கப்பட்டு உள்ளது.

Oct 19, 2022

அமெரிக்காவில் பொருளாதார மந்தநிலை ஏற்பட வாய்ப்பு உள்ளது - அமெரிக்க முதலீட்டு வங்கியின் தலைமை நிர்வாகி கருத்து.

சீன வீரர்களுக்கு பயிற்சி அளிக்க இங்கிலாந்தின் முன்னாள் விமானப்படை வீரர்களை சீனா பணியமர்த்தி வருகிறது.

ஐ.நா. சபை பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் அரசு முறைப் பயணமாக இந்தியா வந்துள்ளார்.

எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக பிரான்சின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

ரஷிய அரசுடன் இனி பேச்சுவார்த்தைக்கு இடமில்லை - உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி.

Oct 18, 2022

ஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரித்த முடிவை திரும்பப் பெறப் போவதில்லை - ஆஸ்திரேலியா.

'சுதந்திரம் மற்றும் ஜனநாயகத்தில் சமரசம் கிடையாது' - ஜின்பிங்கின் பேச்சுக்கு தைவான் பதிலடி.

ரஷியாவில் ராணுவ விமானம் குடியிருப்பு கட்டிடத்தின் மீது மோதி விபத்து - 2 பேர் பலி.

உக்ரைனில் தண்ணீர் விநியோகிக்கும் குழாய் குண்டுகளால் தகர்க்கப்பட்டதால் பொதுமக்கள் தண்ணீர் இன்றி தவித்து வருகின்றனர்.

பாகிஸ்தான் தன்னிடம் உள்ள அணு ஆயுதங்களை பாதுகாக்கும் வல்லமை கொண்டது - அமெரிக்கா நம்பிக்கை.

Oct 17, 2022

மெக்சிகோவில் துப்பாக்கி சூடு: 12 பேர் பலி.

ரஷ்ய ராணுவ தளத்தில் பயங்கரவாத தாக்குதல் : 11 பேர் பலி; 15 பேர் காயம்.

பாகிஸ்தான் பஞ்சாப் மாகாணத்தில் அரசு மருத்துவமனை ஒன்றின் கூரையில் 200க்கும் மேற்பட்ட உடல்கள் கண்டெடுப்பு.

நடப்பாண்டுக்கான உலகப் பசி குறியீட்டு பட்டியலில் இந்தியா 107 வது இடத்தை பிடித்துள்ளது.

சீனாவின் ஆளும் சீன கம்யூனிஸ்டு கட்சியின் மாநாடு நேற்று தொடங்கியது.

Oct 15, 2022

உக்ரைனுக்கு 400 மில்லியன் டாலர்கள் நிதியுதவி - சவுதி அரேபியா அறிவிப்பு.

இங்கிலாந்து பிரதமராக ரிஷி சுனக் நியமிக்கப்பட வேண்டும் என்ற கருத்து தீவிரமடைந்து வருகிறது.

சீனாவில் சமூக ஊடகங்களில் அரசுக்கு எதிரான பதிவுகள் பரவுவதை தடுக்க தணிக்கை குழு அதிரடி நடவடிக்கை.

உக்ரைனுக்கு கூடுதலாக 725 மில்லியன் டாலர்கள் ராணுவ உதவி - அமெரிக்கா அறிவிப்பு.

உக்ரைன் மீது மிகப்பெரிய தாக்குதல் நடத்தும் திட்டம் தற்போதைக்கு இல்லை - புதின்.

Oct 14, 2022

ரஷியா-உக்ரைன் போரில் இந்தியாவின் நிலைப்பாடு மிகவும் சமநிலையானது என்று கசகஸ்தான் வெளியுறவு மந்திரி கூறினார்.

பெல்கொரோட் பிராந்தியத்தில் உள்ள ரஷிய வெடிமருந்து கிடங்கை குண்டுவீசி தகர்த்தது உக்ரைன் ஆயுதப்படை.

இலங்கையில் வறுமையால் 1 கோடி பேர் பாதிக்கப்பட்டு இருப்பதாக ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது.

ஆசியாவின் மிகப்பெரிய பாதுகாப்பு சவால்களில் ஒன்றாக ஆப்கானிஸ்தான் உள்ளது - புதின்

பாகிஸ்தான் தரப்பில் இருந்து இந்தியாவுக்குள் நுழைந்த ஆளில்லா விமானத்தை இந்திய எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் சுட்டு வீழ்த்தினர்.

Oct 13, 2022

அமெரிக்காவில் பல்வேறு சர்வதேச நாடுகளின் நிதி மந்திரிகளுடன் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் இருதரப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.

எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை பாகிஸ்தான் நிறுத்த வேண்டும் - ஐ.நா.வில் இந்தியா கண்டனம்.

உக்ரைன் பிராந்தியங்களை ரஷியா இணைத்துக் கொண்டதற்கு கண்டனம் தெரிவிக்கும் தீர்மானம் ஐ.நா.சபையில் நிறைவேறியது.

ஆசியாவில் இருந்து ஐ.நா. மனித உரிமை ஆணையத்தின் சிறப்பு அறிக்கையாளராக நியமிக்கப்பட்ட முதல் நபர் என்ற பெருமையை கே.பி. அஸ்வினி பெற்றுள்ளார்.

ஈராக்கின் பாக்தாத் அருகே நடத்தப்பட்ட இரு வேறு குண்டுவெடிப்புகளில் சிக்கி 8 பேர் காயமடைந்தனர்.

Oct 11, 2022

ரஷிய முன்னாள் அதிபர் டிமிட்ரி மெத்வதேவ் உக்ரைனால் தேடப்படும் நபர்களின் பட்டியலில் வைக்கப்பட்டு உள்ளார்.

உக்ரைன் தலைநகர் கீவ் மீது ரஷியா சரமாரியாக ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியதில் 10 பேர் பலியாகினர்.

ரஷியா தொடர் ஏவுகணை தாக்குதல்களை உக்ரைன் மீது நடத்துவதற்கு அமெரிக்க அதிபர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

பிரான்சில் ஊழியர்கள் வேலைநிறுத்தம் காரணமாக பெட்ரோல் விநியோகம் பாதிப்பு.

உக்ரைனில் வாழும் இந்திய குடிமக்கள் அத்தியாவசியமற்ற பயணங்களை தவிர்க்க இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.

Oct 10, 2022

இந்தோ-பசிபிக் பகுதியில் உக்ரைன் போரால் ஏற்பட கூடிய பின்விளைவுகள் பற்றி பென்னி வாங்குடன் பேசினேன் - இந்திய வெளியுறவு துறை மந்திரி ஜெய்சங்கர்.

ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் கேன்பெர்ராவுக்கு சென்ற இந்திய வெளியுறவு துறை மந்திரிக்கு மூவர்ண வரவேற்பு அளிக்கப்பட்டது.

வட கொரியா அதிபர் கிம் ஜாங் உன் மேற்பார்வையில் அடுத்தடுத்து ஏவுகணைகளை ஏவி சோதனை நடத்தப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

உக்ரைனில் ரஷிய ஏவுகணை வீசி தாக்குதல் நடத்தியதில் 17 பேர் பலியாகினர்.

பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் உள்ள சென்டாரஸ் வணிக வளாகத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

Oct 08, 2022

சிரியாவில் அமெரிக்கா வான்தாக்குதல் ஐ.எஸ். பயங்கரவாத தலைவர்கள் 3 பேர் பலி.

இந்தியா செல்பவர்கள் அதிக கவனமுடன் இருக்க நாட்டு மக்களுக்கு அமெரிக்கா அறிவுரை.

ஆஸ்திரேலியாவில் பயின்று வரும் இரண்டு இந்திய மாணவிகள் மதிப்புமிக்க விக்டோரியன் பிரீமியர் விருதை வென்றுள்ளனர்.

பெலாரஸை சேர்ந்தவர் மற்றும் இரு அமைப்புகளுக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது.

இந்தியா தனக்கு தேவையான எண்ணெய்யை எந்தவொரு நாட்டிடம் இருந்தும் வாங்கும் - பெட்ரோலியம் மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங்.

Oct 07, 2022

அடுத்தாண்டு ஜூன் 3ம் தேதி பிரிட்டன் மன்னர் முடிசூட்டு விழா நடைபெறவுள்ளது.

தென் கொரியா எல்லை அருகே 12 போர் விமானங்களை வட கொரியா அனுப்பியுள்ளது.

தாய்லாந்தில் குழந்தைகள் பராமரிப்பு மையத்தில் துப்பாக்கிச் சூட்டில் 38 பேர் உயிரிழப்பு -அமெரிக்கா கடும் கண்டனம்.

ஏமனில் தற்போது அமலில் இருக்கும் போர்நிறுத்தத்தை மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிக்க ஐ.நா. வலியுறுத்தி வருகிறது.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றம் - இந்தியா புறக்கணிப்பு.

Oct 06, 2022

தென்கொரியாவை நோக்கி கிழக்கு கடற்பகுதியில் வடகொரியா இன்று அதிகாலை மீண்டும் ஏவுகணை வீச்சு.

ஈகுவடார் சிறையில் ஏற்பட்ட கலவரத்தில் 15 கைதிகள் பலியாகினர்.

பல்வேறு துறைகளில் சாதனை படைத்தோருக்கு நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

உலக சுகாதார நிறுவனத்தில் இந்திய வம்சாவளி விவேக் மூர்த்திக்கு பதவி.

கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைக்க ஒபெக் கூட்டமைப்பு முடிவு: ரஷியாவுடன் இணைந்து செயல்படுவது ஏமாற்றம் அளிக்கிறது - அமெரிக்கா.

Oct 03, 2022

ஆளில்லா விமான தாக்குதலை தடுக்கும் அதிநவீன வான் பாதுகாப்பு உபகரணங்கள் உக்ரைனுக்கு வழங்கப்படும்: ஜெர்மனி.

இந்தோனேசியாவில் கால்பந்து போட்டியின்போது ரசிகர்கள் வன்முறையில் ஈடுபட்டதால் கூட்ட நெரிசலில் சிக்கி 174 பேர் உயிரிழந்தனர்.

பிரேசில் அதிபர் தேர்தலில் வாக்குப்பதிவு நடைபெற்றது.

மெக்சிகோவில் ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கிய விபத்தில் சிக்கி 3 வீரர்கள் உயிரிழந்தனர்.

வன்முறை மற்றும் மரண சுழலை நிறுத்திம்படி ரஷிய அதிபர் புதினுக்கு போப் பிரான்சிஸ் வேண்டுகோள்.

Oct 01, 2022

ஈரானின் தென்கிழக்கு பகுதியில் நடந்த கடுமையான துப்பாக்கிச் சண்டையின் போது 19 பேர் கொல்லப்பட்டனர்.

தாய்லாந்து பிரதமர் பதவியில் தொடர பிரயுத் சான் ஓச்சாவுக்‌கு அனுமதி.

ஏவுகணை சோதனையை தீவிரப்படுத்தும் வடகொரியா: ஜப்பான் கடற்பகுதியில் இன்று 2 பாலிஸ்டிக் ஏவுகணைகள் சோதனை.

ஆப்கானிஸ்தானில் கல்வி மையத்தில் பயங்கர குண்டு வெடிப்பு 32 பேர் பலி.

சட்டவிரோத இணைப்பு விவகாரம் - ரஷ்யாவுக்கு எதிரான ஐ.நா. வாக்கெடுப்பை புறக்கணித்தது இந்தியா.

Sep 30, 2022

உக்ரைனின் பிராந்தியங்களை ரஷியாவுடன் இணைத்து கொள்வது 'நில அபகரிப்பு' நடவடிக்கை என்று அமெரிக்கா விமர்சித்துள்ளது.

மியான்மரில் 6.1 ரிக்டர் அளவில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

க்ரைனில் ரஷிய படைகள் வசம் உள்ள கெர்சன் மற்றும் ஜாபோர்ஜியா ஆகிய இரண்டு பிராந்தியங்களையும் சுதந்திர பிரதேசங்களாக அங்கீகரிக்கும் அதிகாரபூர்வமான ஆணையில் அதிபர் புதின் நேற்று கையெழுத்திட்டார்.

அமெரிக்க நாடாளுமன்றத்தில் லட்சக்கணக்கானோருக்கு ‘கிரீன் கார்டு’ வழங்கும் மசோதா தாக்கல் செய்யப்பட்டது.

உக்ரைனுக்கு மேலும் 12 பில்லியன் டாலர் நிதியுதவி வழங்க அமெரிக்க செனட் சபை ஒப்புதல் வழங்கி உள்ளது.

Sep 29, 2022

ஈராக்கின் குர்திஸ்தானில் ஈரானின் புரட்சிப்படை நடத்திய ஏவுகணை தாக்குதலில் 13 பேர் உயிரிழந்தனர்.

சீனாவுடனான உறவை தொடர கடும் முயற்சி செய்கிறோம் - மத்திய வெளியுறவு மந்திரி ஜெய் ஷங்கர்.

பாகிஸ்தானின் முன்னாள் அதிபர் சர்தாரி உடல்நல குறைவால் மருத்துவமனையில் அனுமதி.

உக்ரைனில் ரஷிய படைகள் வசம் உள்ள லுஹான்ஸ்க், டொனட்ஸ்க், கெர்சன் மற்றும் ஜாபோர்ஜியா ஆகிய 4 பிராந்தியங்களை தன்னுடன் இணைத்து கொள்ள ரஷியா முடிவு.

பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் பாகிஸ்தானில் புதிய நிதி மந்திரியாக இஷாக் தார் நேற்று பதவியேற்றார்.

Sep 28, 2022

அமெரிக்க உளவு ரகசியங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய கணிணி பொறியாளருக்கு ரஷிய அரசு குடியுரிமை வழங்கியுள்ளது.

பாகிஸ்தானில் ஆளும் அரசின் கூட்டணி கட்சி தலைவர்கள் பேசி கொள்ளும் மற்றொரு உரையாடல் ஆடியோ பதிவு கசிந்து பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

கியூபாவில் நடந்த வரலாற்று சிறப்பு மிக்க பொதுவாக்கெடுப்பில் ஓரின சேர்க்கையாளர்கள் திருமணத்துக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் வழங்கும் முடிவு எடுக்கப்பட்டது.

சிறைப்பிடிக்கும் வீரர்களை ரஷியா சித்திரவதை செய்வதாக உக்ரைன் குற்றம் சாட்டியுள்ளது.

இந்தியாவும் பாகிஸ்தானும் இரண்டு முக்கியத்துவம் வாய்ந்த நட்பு நாடுகள் என்று அமெரிக்க அரசு தெரிவித்துள்ளது.

Sep 27, 2022

தென்கொரியாவில் வணிக வளாகத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி 7 பேர் உடல் கருகி பலியாகினர்.

அமெரிக்க வர்த்தக செயலாளர் ஜினா ரைமண்டோவை இந்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் சந்தித்து பேசினார்.

இலங்கையில் விரைவில் மீண்டும் மக்கள் போராட்டம் வெடிக்கும் - எதிர்க்கட்சி தலைவர் எச்சரிக்கை.

உக்ரைன் மீது அணு ஆயுதங்களை பயன்படுத்தினால் ரஷியா பேரழிவை சந்திக்கும் என்று அமெரிக்கா கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

ரஷியாவின் மத்தியப்பகுதியில் உள்ள பள்ளியில் மர்மநபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 17 பேர் உயிரிழந்தனர்.

Sep 26, 2022

ஹிஜாப் போராட்டத்திற்கு இங்கிலாந்தை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் செய்தி நிறுவனம் காரணம் - ஈரான் குற்றஞ்சாட்டு.

பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பின் கசிந்த உரையாடல் ஆடியோ ரூ.28.43 கோடிக்கு இணையத்தில் ஏலத்திற்கு விடப்பட்டு உள்ளது.

சீனாவில் அதிபர் ஜின்பிங் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கும் நிலையில் ஆளும் கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய மாநாட்டுக்கான பணிகள் தொடங்கி உள்ளன.

அமெரிக்க துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் தென்கொரியா செல்ல இருக்கும் நிலையில் வடகொரியா நேற்று ஏவுகணையை ஏவி சோதித்துள்ளது.

வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட பாகிஸ்தானுக்கு ரூ 10 ஆயிரம் கோடி நிதி உதவி அளிக்கப்படும் - உலக வங்கி அறிவிப்பு.

Sep 24, 2022

உக்ரைன் பிராந்தியங்களை ரஷியாவுடன் இணைப்பதற்கான பொதுவாக்கெடுப்பு தொடங்கியது.

அர்ஜென்டினாவில் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் சிக்கி 3 பேர் பலி.

கொழும்புவில் இலங்கை பிரதமருடன் இந்திய தூதர் சந்திப்பு.

சீனாவில் ரூ.58 கோடி ஊழல் செய்த முன்னாள் மந்திரிக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது.

கனடாவில் வாழும் இந்திய குடிமக்கள் அதிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்: இந்திய வெளியுறவு அமைச்சகம் அறிக்கை.

Sep 23, 2022

ஐ.நா.பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு நிரந்தர இடம் கிடைக்க அமெரிக்கா ஆதரவு.

உக்ரைன், ரஷியா பகைமைகளை நிறுத்தி, தூதரக வழிகளுக்கு திரும்ப வேண்டும் : ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்.

உலகம் முழுதும் ஹிந்துக்களுக்கு எதிரான வெறுப்பு தாக்குதல் வேகமாக அதிகரித்து வருகிறது - அமெரிக்காவைச் சேர்ந்த அறிவியல் ஆராய்ச்சி அமைப்பு தகவல்.

ஈரான்: ஹிஜாப் எதிர்ப்பு போராட்டத்தில் ஏற்பட்ட மோதலில் 31 பேர் பலி.

பாகிஸ்தானின் ராணுவ தலைமை தளபதியை தேர்வு செய்ய நவாஸ் ஷெரீப்பை விடமாட்டேன் - முன்னாள் பிரதமர் இம்ரான் கான்.

Sep 22, 2022

ராணுவத்துக்கு, மூன்று லட்சம் வீரர்களை திரட்டுகிறது ரஷ்யா. மேலும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

உக்ரைன் விவகாரம்: பிரதமர் மோடியை, ஐக்கிய நாடுகள் சபையின் பொதுக்கூட்டத்தில் பிரான்ஸ் மற்றும் அமெரிக்கா பாராட்டின.

ரஷியாவிற்கு தண்டனை வழங்கப்பட வேண்டும்: உலகத் தலைவர்களுடனான ஐ.நா.சபை கூட்டத்தில் உக்ரைன் அதிபர் வேண்டுகோள்.

ஈரானில் அடிப்படை உரிமைகளை பாதுகாக்க போராடும் பெண்களுடன் அமெரிக்கா துணை நிற்கிறது - அதிபர் ஜோ பைடன்.

அமெரிக்க மற்றும் கனடா நாடுகளின் 2 போர் கப்பல்கள் தைவான் ஜலசந்தியை கடந்து சென்றது.

Sep 21, 2022

எலான் மஸ்க் மீது டுவிட்டர் தொடர்ந்த வழக்கு ஒத்தி வைப்பு.

மியான்மரில் பள்ளிக்கூடம் மீது நடத்தப்பட்ட வான்வழி தாக்குதலில் சிக்கி 11 சிறுவர்கள் பலி.

பொருளாதார சிக்கலில் இருந்து மீள இலங்கைக்கு இந்தியா தொடர்ந்து ஆதரவு - இந்திய தூதரகம் அறிவிப்பு.

துபாய் முழுதும் இலவச ரொட்டி வழங்கும் இயந்திரம் பொருத்தப்பட்டது.

ரஷ்ய ஆதரவு பெற்றுள்ள பிரிவினைவாதிகளின் கட்டுப்பாட்டில் உள்ள உக்ரைனின் நான்கு பிராந்தியங்கள், அந்நாட்டுடன் இணைய உள்ளன.

Sep 20, 2022

அம்பன்தோட்டா துறைமுகத்தில் சீன உளவு கப்பலை நிறுத்தியதில் அரசியல் தலையீடு இல்லை என்று இந்தியாவுக்கான இலங்கை தூதர் விளக்கம் அளித்துள்ளார்.

இங்கிலாந்து அரச பரம்பரை செங்கோலை அலங்கரிக்கும் உலகின் மிக பெரிய வைரம் ஒன்றை திருப்பி அளிக்க கோரி தென்ஆப்பிரிக்காவில் கோரிக்கைகள் வலுத்து உள்ளன.

ஆப்கானிஸ்தானில் பப்ஜி, டிக்டாக் செயலிகள் தடை செய்யப்படும் - தலீபான் அரசு முடிவு.

பயங்கரவாத அச்சுறுத்தலை தடுக்கும் நிபுணத்துவ முறைகளை பகிர்ந்து கொள்ள இந்தியாவிடம் எகிப்து அதிபர் சிசி வலியுறுத்தி உள்ளார்.

தைவான் விவகாரத்தில் அமெரிக்காவுக்கு சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது.

Sep 19, 2022

பிரிட்டன் ராணி எலிசபெத் உடல் இன்று அடக்கம்: உலக நாடுகளின் தலைவர்கள் அஞ்சலி.

வெள்ளம் காரணமாக 1.6 கோடி குழந்தைகள் பாக்கிஸ்தானில் பாதிப்பு: 'யுனிசெப்' பிரதிநிதி தகவல்.

ஐ.நா. பொதுச் சபையின் உயர்மட்ட 77வது அமர்வில் பங்கேற்பதற்காக வெளியுறவுத்துறை மந்திரி எஸ். ஜெய்சங்கர் நியூயார்க் வந்தடைந்தார்.

அமெரிக்காவில் கொரோனா தொற்று முடிவுக்கு வந்ததாக அதிபர் ஜோ பைடன் அறிவித்துள்ளார்.

ஜப்பான்- இந்தியா இடையிலான ஆறாவது கடல்சார் பயிற்சி 2022, வங்கக் கடலில் நிறைவுபெற்றது.

Sep 17, 2022

ஆர்மீனியா-அஜர்பைஜான் எல்லை விவகாரம்: இருதரப்புக்கும் இடையே அமைதியை நிலைநாட்ட ரஷிய அதிபர் புதின் முயற்சி.

ஐ.நா கூட்டத்தில் உலகத் தலைவர்களுடன் உக்ரைன் அதிபர் காணொலி மூலம் உரையாற்ற இந்தியா உட்பட 101 நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன.

இஸ்ரேல் வான்வழி நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் சிரியாவை சேர்ந்த 5 ராணுவ வீரர்கள் பலி.

ராணி எலிசபெத் இறுதிச் சடங்கிற்கு ரூ.59 கோடி செலவாக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

மசூத் அசார் ஆப்கானிஸ்தானில் இருப்பதாக பாகிஸ்தான் வெளியுறவு மந்திரி பிலாவல் பூட்டோ தெரிவித்துள்ளார்.

Sep 16, 2022

இந்திய பெருங்கடல் பகுதியில் எந்தவொரு வல்லரசு போட்டியிலும் இலங்கை பங்கேற்காது என்று ரணில் விக்ரமசிங்கே உறுதியளித்துள்ளார்.

நெதர்லாந்து நாட்டுக்கான அமெரிக்க தூதராக இந்திய வம்சாவளியை சேர்ந்த ஷெபாலி ரஸ்தான் துக்கால் என்ற பெண் நியமனம்.

ரஷியப் படைகளிடம் இருந்து மீட்கப்பட்ட இசியம் நகரில் 440 உடல்கள் ஒரே இடத்தில் புதைக்கப்பட்ட சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

சுவீடன் தேர்தலில் ஆளுங்கட்சி தோல்வி அடைந்தது.

மலேஷியாவின் முன்னாள் அமைச்சர் 'டத்தோ' சாமிவேலு, 86, வயது முதிர்வு காரணமாக நேற்று காலமானார்.

Sep 15, 2022

உலகத் தலைவர்களிடம் ஐ.நா. கூட்டத்தில் உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி காணொலி மூலம் உரையாற்ற திட்டமிடப்பட்டுள்ளது.

மின்சார நெருக்கடியை சமாளிக்க ஈபிள் கோபுரத்தின் மின் விளக்குகளை முன்கூட்டியே அணைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவுடன் கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தையை இலங்கை தொடங்கியது

அமெரிக்காவை தொடர்ந்து புதிய வகை பிஏ.4.6 துணை மாறுபாடு தற்போது இங்கிலாந்தில் பரவுவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

மஸ்கட் விமான நிலையத்தில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் திடீரென தீப்பிடித்து விபத்துக்குள்ளானது.

Sep 14, 2022

சீனாவில் கடுமையான கொரோனா ஊரடங்கால் உணவு, மருத்துவ உதவிக்கு மக்கள் திண்டாடும் நிலை ஏற்பட்டு உள்ளது.

இந்தியாவில் சூரிய சக்தியின் பயன்பாடு அதிகரித்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது - பில் கேட்ஸ் பாராட்டு.

ஆர்மீனியா, அஜர்பைஜான் எல்லையில் நடந்த மோதலில் 99 வீரர்கள் கொல்லப்பட்டனர்.

கனடாவில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவங்களில் ஒரு போலீஸ் அதிகாரி உள்பட 2 பேர் கொல்லப்பட்டனர்.

ஜெய்ஷ் இஎம் தலைவர் மசூத் அசாரை கண்டுபிடித்து கைது செய்யுமாறு தலிபான்களை பாகிஸ்தான் கேட்டுக்கொள்கிறது.

Sep 13, 2022

ஆயிரக்கணக்கான மின்னசோட்டா செவிலியர்கள் பணியின்மை மற்றும் அதிக வேலை காரணமாக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன.ர்

உக்ரைனுக்கு அத்தியாவசிய மருந்துகள், மருத்துவ உபகரணங்கள் உள்ளிட்ட 7,725 கிலோ எடையுள்ள மனிதநேய உதவி பொருட்களை இந்தியா அளித்து உள்ளது.

ரஷியா கைப்பற்றிய 6 ஆயிரம் சதுர கி.மீ. பகுதிகள் மீட்கப்பட்டு உள்ளன - உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி.

பொருளாதாரக் குற்றங்கள் இலங்கையில் நடைபெறுகின்றன என்ற ஐ.நா மனித உரிமைகள் குற்றச்சாட்டை இலங்கை மறுத்துள்ளது.

பயங்கரவாத குற்றச்சாட்டில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கானுக்கு செப்டம்பர் 20 ஆம் தேதி வரை முன் ஜாமீன் நீட்டிக்கப்பட்டுள்ளது.

Sep 12, 2022

ரஷ்யாவிடமிருந்து முக்கிய நகரை மீட்டது உக்ரைன் ராணுவம்.

பிரிட்டன் ராணி எலிசபெத் உடல் நாளை லண்டன் பயணம்.

பப்புவா நியூ கினியாவில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில், 7.6 ஆக பதிவானது.

கோவிட் காலத்தில் வெளிநாடுகளில் சிக்கி தவித்த 70 லட்சம் இந்தியர்களை மீட்டதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறியுள்ளார்.

சீனாவில் அதிபர் ஷீ ஜிங்பிங்கிற்கு கூடுதல் அதிகாரம் அளிக்கும் வகையில், ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாட்டில், கட்சியின் சட்டங்களில் திருத்தம் மேற்கொள்ள முடிவு.

Sep 10, 2022

பிரேசிலில் கடலில் படகு கவிழ்ந்து விபத்து : 14 பேர் பலி.

உக்ரைன் அணுமின் நிலையத்தை பாதுகாக்க ஒரு பாதுகாப்பு மண்டலத்தை உடனடியாக நிறுவ வேண்டும் என்று சர்வதேச அணுசக்தி முகமை தலைவர் ரபேல் கிராஸி தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானுக்கு நிதி உதவி வழங்க சர்வதேச சமூகம் முன்வர வேண்டும்- ஐ.நா. பொதுச்செயலாளர்
அன்டோனியோ குட்டரெஸ்

அணுசக்தியை வலுப்படுத்தும் எண்ணத்தை ஒருபோதும் கைவிடப் போவதில்லை- கிம் ஜாங் உன்

ஐ.நா மனித உரிமைகள் உயர் ஆணையராக ஆஸ்திரியாவை சேர்ந்த வோல்கர் டர்க் நியமனம்.

Sep 09, 2022

இங்கிலாந்து மகாராணி இரண்டாம் எலிசபெத் காலமானார்.

இலங்கை அமைச்சரவை விரிவாக்கம்: 37 இணை அமைச்சர்கள் பொறுப்பேற்பு.

ராணுவ ஒத்துழைப்பை அதிகரிக்க ஜப்பானுடன் இந்தியா ஒப்பந்தம்.

பாகிஸ்தானிற்கு 3600 கோடி ரூபாய் மதிப்பிலான ராணுவ உபகரணங்களை அளிக்க அமெரிக்கா ஒப்புதல்.

பிரிட்டன் மன்னராகிறார் இளவரசர் சார்லஸ்.

Sep 08, 2022

துப்பாக்கிச்சூடு கொள்கை குறித்து யாரும் எங்களுக்கு ஆணையிட முடியாது என்று இஸ்ரேல் பிரதமர் தெரிவித்துள்ளார்.

உறுப்பு திருட்டில் சீனா ஈடுபடுவதாக இத்தாலிய பத்திரிகையில் செய்தி வெளியாகியுள்ளது.

'வோஸ்டாக் - 2022' எனப்படும் இந்தியா, சீனா உள்ளிட்ட ரஷ்ய நட்பு நாடுகள் பங்கு கொண்டுள்ள கூட்டு ராணுவ பயிற்சியை ரஷ்ய அதிபர் புதின் நேரில் சென்று ஆய்வு செய்தார்.

உக்ரைனில் இலக்குகளை அடையும் வரை ராணுவ நடவடிக்கை தொடரும் - ரஷிய அதிபர் விளாடிமிர் புதின்.

இங்கிலாந்து பிரதமர் லிஸ் டிரஸ் தலைமையிலான மந்திரி சபையில் ரிஷி சுனாக் மற்றும் அவரது ஆதரவாளர்களுக்கு இடமில்லை.

Sep 07, 2022

கோத்தபய ராஜபக்சே மீண்டும் அரசியலில் நுழையக்கூடாது என்று புதிய லங்கா விடுதலை கட்சி எச்சரிக்கை.

ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் பிரதமர் மோடியின் நிர்வாகத் திறமையை பியூஷ் கோயல் பாராட்டினார்.

இங்கிலாந்தின் புதிய பிரதமரான லிஸ் டிரஸ், அமெரிக்கா மற்றும் உக்ரைன் அதிபர்களுடன் தொலைபேசி மூலம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

இலங்கை அதிபரின் அதிகாரங்களை குறைப்பதற்கான மசோதாவுக்கு அந்நாட்டு உச்ச நீதிமன்றம் ஒப்புதல் அளித்தது.

இங்கிலாந்தின் புதிய உள்துறை மந்திரியாக தமிழ்நாட்டை பூர்வீகமாக கொண்ட இந்திய வம்சாவளி பெண் சூலா பிரேவர்மென் நியமனம்.

Sep 06, 2022

வடகொரியாவிடம் இருந்து பீரங்கி குண்டுகள், ஏவுகணைகளை ரஷ்யா வாங்குகிறது.

லிஸ் ட்ரஸ் அரசுக்கு உறுதியான ஆதரவை அளிக்கிறேன்: போரிஸ் ஜான்சன்.

எங்களுக்கு அரசியல் சாசனம் தேவையில்லை; இஸ்லாமிய சட்டம் போதும் - தலிபான்கள்.

ஜப்பான் பல்கலைக்கழகங்களில் பெண் ஆசிரியர்கள் எண்ணிக்கை வரலாறு காணாத அளவுக்கு உயர்வு.

ஆப்கனில் ரஷ்ய தூதரகம் அருகே குண்டுவெடிப்பு: 2 அதிகாரிகள் உட்பட 8 பேர் பலி.

Sep 06, 2022

அல் ஜசீரா பெண் செய்தியாளர் மீது துப்பாக்கிச் சூடு வேண்டுமென்றே நடத்தப்பட்டது அல்ல என்று இஸ்ரேல் ராணுவம் கூறியுள்ளது.

அமெரிக்கா முன்னாள் ஜனாதிபதி ஒபாமாவுக்கு சிறந்த தொகுப்பாளருக்கான ‘எம்மி’ விருது வழங்கப்பட்டது.

உக்ரைனுக்கு இங்கிலாந்தின் புதிய பிரதமர் லிஸ் டிரஸ் உதவுவார் - அதிபர் ஜெலென்ஸ்கி.

மேற்கு ஆப்பிரிக்காவின் புர்கினா பாசோவில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 35 பேர் பலி.

லிஸ் டிரஸ் பிரதமராக தேர்வு செய்யப்பட்ட நிலையில் உள்துறை மந்திரி பிரித்தி படேல் ராஜினாமா.

Sep 05, 2022

லாட்வியாவில் 4 பேருடன் சென்ற தனியார் ஜெட் விமானம் கடலில் விழுந்து விபத்து.

ஆப்கானிஸ்தானில் ரஷிய தூதரகம் அருகே நடந்த குண்டுவெடிப்பு தாக்குதலில் 2 தூதர்கள் உள்பட 20 பேர் பலி.

சோமாலியாவில் சாலையில் சென்ற வாகனங்களை தீ வைத்து எரித்த பயங்கரவாதிகள் - 19 பேர் உடல் கருகி பலி.

ரஷியாவில் எரிமலையில் ஏறி கொண்டிருந்த மலையேற்ற வீரர்கள் 6 பேர் 13 ஆயிரம் அடி உயரத்தில் இருந்து விழுந்து பலியாயினர்.

இன்று பாகிஸ்தானில் வெள்ளம் பாதித்த பகுதிகளை அமெரிக்காவை சேர்ந்த 5 பேர் கொண்ட குழு பார்வையிட்டது.

 

Sep 03, 2022

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி ராஜபக்சேவுக்கு அதிகாரப்பூர்வ இல்லமும், பாதுகாப்பும் கொடுக்கப்பட்டுள்ளது.

உக்ரைன் அணுமின் நிலைய மோதலில் துருக்கி சமாதானம் செய்ய முயற்சி.

ரஷ்யாவில் தொடர்ந்து 2வது நாளாக 50,000 க்கும் மேற்பட்ட புதிய கோவிட் வழக்குகள்: அறிக்கை.

நாங்கள் 50 ஆண்டுகள் பின்னோக்கிச் சென்றுவிட்டோம்": வெள்ள சேதம் குறித்து பாகிஸ்தான் விவசாயிகள் வருத்தம்.

உக்ரைனின் ஜெலென்ஸ்கி ட்விட்டரின் ஒரு வார்த்தைப் பிரிவில் இணைகிறார்.

Sep 03, 2022

மெக்சிகோவில் சுவாமி விவேகானந்தரின் சிலை திறப்பு - மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா தலைமையில் இந்திய நாடாளுமன்ற பிரதிநிதிகள் குழுவினர் சென்றுள்ளனர்.

கொலம்பியாவில் இடதுசாரிகள் பதவியேற்ற பிறகு நடந்த மிகக் கொடூரமான தாக்குதலில் 7 போலீஸார் கொல்லப்பட்டனர்.

டொனால்ட் டிரம்பின் புளோரிடா வீட்டில் 11,000க்கும் மேற்பட்ட அரசாங்க பதிவுகளை எப்.பி.ஐ கண்டறிந்துள்ளது.

லிச்சென்ஸ்டைன் பாராளுமன்றத்தில் இரண்டு பூகம்பங்கள் ஏற்பட்டன.

G7 ரஷ்ய எண்ணெய் விலை வரம்பை விதிக்க உள்ளது.

Sep 03, 2022

கொலம்பியாவில் போலீஸ் வாகனம் மீது நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் 8 போலீஸ் அதிகாரிகள் உயிரிழந்தனர்.

பாகிஸ்தானில் வரலாறு காணாத கனமழை, வெள்ளம் காரணமாக பலி எண்ணிக்கை 1,208 ஆக உயர்வு.

அர்ஜெண்டினா துணை அதிபர் கிறிஸ்டினா பெர்னாண்டசை சுட்டுக்கொல்ல முயற்சி - அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்.

இலங்கை முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சே தாய்லாந்தில் இருந்து இலங்கை திரும்பினார் .

அமெரிக்கா முழுவதும் குரங்கம்மை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 18,989 ஆக அதிகரித்துள்ளது.

Sep 02, 2022

லுஃப்தான்சா விமானிகள் வேலைநிறுத்தம், இன்று 800 விமானங்கள் ரத்து.

தீவிரமான குடியரசுக் கட்சியினர் அமெரிக்க ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தல் என ஜோ பிடன் தாக்கு.

உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வர அழைப்பு விடுத்த ரஷ்ய எண்ணெய் நிறுவனத்தின் தலைவர் மருத்துவமனை ஜன்னலில் இருந்து கீழே விழுந்து இறந்தார்.

உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பை ஆதரிக்கும் விதமாக சீனா அமெரிக்க எண்ணெயைப் பயன்படுத்தலாம் என தகவல்.

வாக்கு அளிப்பதில் மோசடி செய்ததாக சூகிக்கு மியான்மர் நீதிமன்றம் சிறை தண்டனை விதித்தது.

Sep 02, 2022

கோத்தபய ராஜபக்சே நாளை இலங்கை திரும்ப உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சீனாவின் மனித உரிமை மீறல் பற்றிய ஐ.நா. அறிக்கையின் பரிந்துரைகளை சீனா பின்பற்ற வேண்டும் என ஐ.நா. பொதுச்செயலாளர் வலியுறுத்தியுள்ளார்.

இங்கிலாந்து பிரதமர் தேர்தல் ஓட்டுப்பதிவு நிறைவு - இன்று பிரசாரத்தை இந்திய வம்சாவளி தலைவர் ரிஷி சுனக் முடித்தார்.

ரஷ்யாவில் நடைபெறும் கூட்டு பயிற்சியில் கோர்க்கா ரைஃபிள்ஸ் படையை சேர்ந்த இந்திய ராணுவக் குழுவினர் பங்கேற்றுள்ளனர்.

அமெரிக்க நாடாளுமன்ற இடைத்தேர்தல் முடிவில் எதிர்க்கட்சி பெண் தலைவர் சாராபாலின் தோல்வி.

Sep 01, 2022

உய்குர் முஸ்லிம் பிரதேசத்தில் மனித இனத்துக்கு எதிராக சீனா குற்றங்களைச் செய்திருக்கலாம்: ஐநா அறிக்கை

பாகிஸ்தானில் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை கைது செய்ய தடை நீட்டிப்பு.

கர்ப்பிணி இந்திய சுற்றுலா பயணி இறந்ததை அடுத்து போர்ச்சுகல் சுகாதார அமைச்சர் பதவி விலகினார்.

அமெரிக்காவில் சக மாணவர்களை 15 வயது சிறுவன் துப்பாக்கியால் சுட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்க ராணுவம் சுமார் 400 சினூக் ஹெலிகாப்டர்களின் செயலாடுகளை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.

தமிழ்நாடு

Jul 22, 2024

மேட்டூர் அணையின் நீர்மட்டம் கடந்த 3 நாளில் 20 அடி உயர்ந்துள்ளது.

நீலகிரியில் 4 தாலுகா பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

நெல்லை வழியாக இயக்கப்படும் அந்தியோதயா ரெயில் இன்று முதல் 31-ந்தேதி வரை ரத்து செய்யப்படுகிறது

என்ஜினீயரிங் படிப்புக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு இன்று தொடங்குகிறது.

அமலாக்கத்துறை வழக்கில் குற்றச்சாட்டு பதிவை தள்ளிவைக்க வேண்டும் என்று செந்தில்பாலாஜி சென்னை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

Jun 27, 2024

சென்னை விமான நிலையத்தில் ரூ.22 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது

ஆடி கிருத்திகையை முன்னிட்டு திருவள்ளூர் மாவட்டத்திற்கு ஜூலை 29-ந்தேதி உள்ளூர் விடுமுறை விடப்பட்டது

கள்ளச்சாராய மரணங்கள் குறித்து சிபிஐ விசாரணை கோரி அதிமுக உண்ணாவிரத போராட்டம் அறிவித்தது

சாதிவாரிக் கணக்கெடுப்புடன் கூடிய மக்கள்தொகைக் கணக்கெடுப்பை உடனே நடத்த வேண்டும் என மு.க.ஸ்டாலின் கூறினார்

நெல் கொள்முதலுக்கான ஊக்கத்தொகையை அதிகரித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்

May 08, 2024

சென்னையில் இடி, மின்னல், காற்றுடன் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அரசு விரைவு பேருந்துகளில் யு.பி.ஐ மூலம் டிக்கெட் பெறும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது

கோயம்பேடு, அண்ணா நகர் பகுதிகளில் சட்டவிரோதமாக இயங்கிவந்த 55 ஸ்பாக்களுக்கு போலீசார் சீல் வைத்தனர்

தமிழ்நாட்டில் கோடை மழை மார்ச் முதல் மே 7 வரை இயல்பை விட 69% குறைவாக பெய்துள்ளது

தமிழ்நாடு முழுவதும் விவசாயத்திற்கான மும்முனை மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது என அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார்

Apr 27, 2024

வட தமிழக உள் மாவட்டங்களில் அடுத்த ஐந்து தினங்களில் அதிகபட்ச வெப்பநிலை 3°-5° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும் என தகவல்.

சென்னை உஸ்மான் சாலையில் ஓராண்டுக்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது

சென்னைக்கு ஜூன் மாதம் முதல் மீண்டும் கிருஷ்ணா தண்ணீர் வழங்கப்படும் என ஆந்திர அரசு கூறியது

4 மாதங்களுக்கு பிறகு இன்று முதல் மணிமுத்தாறு அருவியில் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது

கடற்கரை-வேலூர் மின்சார ரெயில் திருவண்ணாமலை வரை நீட்டிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

Mar 09, 2024

மெட்ரோ ரெயில் பணிகள் காரணமாக 2 நாட்கள் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டள்ளது

திருக்கோவிலூர் தொகுதிக்கு பாராளுமன்ற தேர்தலுடன் இடைத் தேர்தல் நடைபெறவுள்ளது

மத்திய போதைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் ஜாபர் சாதிக்கை கைது செய்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

பவானிசாகர் அணைக்கு 17 கனஅடியாக நீர்வரத்து சரிந்தது

வால்பாறை அருகே வனத்தில் காட்டுத்தீ ஏற்பட்டது

Mar 01, 2024

திருச்சி விமான நிலையத்தில் ரூ.66.68 லட்சம் மதிப்பிலான 1 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது

பாராளுமன்ற தேர்தல் பாதுகாப்புக்கு 15 கம்பெனி துணை ராணுவ படை இன்று தமிழகம் வந்தது

சென்னையை அடுத்த மாங்காடு அருகே தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

மிச்சாங் புயலால் பாதிப்படைந்து விண்ணப்பித்தவர்களுக்கு ரூ.6 ஆயிரம் வங்கிக் கணக்கில் சேர்க்கப்பட்டது

நாளை மும்பையில் நடக்கும் ரஞ்சிக் கோப்பை 2-வது அரை இறுதியில் தமிழ்நாடு- மும்பை கிரிக்கெட் அணிகள் மோதுகின்றன.

Feb 22, 2024

போக்குவரத்து துறையில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்படும் என அமைச்சர் சிவசங்கர் கூறினார்

தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் அரிசி விலை கடுமையாக உயர்ந்துள்ளது.

சட்டசபை கூட்டத்தொடர் இன்றுடன் முடிவடைந்தது

6 முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு உண்டு உறைவிட பள்ளி அமைக்க புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்படுகிறது

இன்னும் ஒரு மாதத்தில் 5,100 மருத்துவ துறை ஊழியர் பணியிடம் நிரப்பப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்

Feb 19, 2024

கிளாம்பாக்கம்: விதிகளை மீறும் ஆம்னி பேருந்துகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து ஆணையர் கூறினார்

சிப்காட்டில் பணிபுரியும் பெண்களுக்காக குழந்தைகள் பாதுகாப்பு மையம் அமைக்கப்படும்

வடசென்னை பகுதிகளில் கழிவுநீர் அகற்ற ரூ.946 கோடியில் புதிய திட்டம் வகுக்கப்படுகிறது

திருப்பரங்குன்றம், திருநீர்மலை கோவில்களில் ரோப்கார் வசதி ஏற்படுத்தப்பட்டுகிறது

மூன்றாம் பாலினத்தவரின் கல்வி செலவுகள் முழுவதையும் அரசு ஏற்கும் என தகவல்

Feb 06, 2024

முல்லைப் பெரியாறு அணையில் இருந்து தமிழக பகுதிக்கு தண்ணீர் திறப்பு இன்று குறைக்கப்பட்டது.

மக்களவைத் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வு நடத்த இந்திய தேர்தல் ஆணைய அதிகாரிகள் இன்று சென்னை வர உள்ளனர்.

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட புதுக்கோட்டை மீனவர்கள் இன்று காலை சென்னை விமான நிலையம் வந்தடைந்தனர்.

பயோமெட்ரிக் கருவியில் விரல்ரேகையை உறுதி செய்யாவிட்டால், இந்த மாதத்துடன் அட்டையிலிருந்து பெயா் நீக்கப்படும் என நியாயவிலைக் கடை பணியாளா்கள் எச்சரிக்கை விடுத்து வருகின்றனா்.

ஸ்பெயின் நாட்டிலிருந்து முதல்வா் மு.க.ஸ்டாலின்நாளை சென்னை திரும்புகிறாா்.

Jan 11, 2024

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தாம்பரத்தில் இருந்து கோவைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன.

வடகிழக்குப் பருவமழை ஜனவரி 15-இல் விலகுவதற்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மற்றும் 2ஏ முதன்மைத் தேர்வு முடிவுகள் டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

அமைச்சா் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவலை 15-ஆவது முறையாக நீட்டித்து சென்னை முதன்மை அமா்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கருணாநிதி அறக்கட்டளை சார்பில் நலிந்தோர் மற்றும் மருத்துவம் உதவி நிதியாக ரூ.2 லட்சம் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

Dec 21, 2023

வைகுந்த ஏகாதசி விழாவினை முன்னிட்டு, திருச்சி, ஸ்ரீரங்கம் ரயில் நிலையத்தில் விரைவு ரயில்கள் ஒரு நிமிடம் நின்று செல்லும்

அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு பொன்முடியின் துறைகளை ஒதுக்கீடு செய்ய ஆளுநர் ஆர்.என். ரவி ஒப்புதல் அளித்துள்ளார்.

முல்லைப்பெரியாறு அணையின் நீர் மட்டம் 140 அடியை எட்டியதால், முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது.

வேங்கைவயல் வழக்கு ஜனவரி 6-ந் தேதி ஒத்திவைக்கப்பட்டது

கோவையில், முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமியின் மகன் வீட்டில் கர்நாடக லோக் ஆயுக்தா காவல்துறை சோதனை மேற்கொண்டனர்.

Dec 20, 2023

தூத்துக்குடி விமான நிலையத்தில் இன்று மீண்டும் விமான சேவை தொடங்கியுள்ளது.

தென் மாவட்டங்களின் தற்காலிக சீரமைப்புப் பணிகளுக்காக ரூ.2,000 கோடி அவசர நிதியாக ஒதுக்க வேண்டுமென பிரதமர் நரேந்திர மோடியிடம் முதல்வர் வேண்டுகோள் விடுத்தார்.

திருநள்ளாறு கோயிலில் இன்று சனிப் பெயா்ச்சி விழா நடைபெறுகிறது

திருநெல்வேலி ரயில் நிலைய சீரமைப்புப்பணிகள் நிறைவடைந்ததால், ரயில் நிலையம் செயல்படத் தொடங்கியது.

தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களுக்கு உணவு, நிவாரணப் பொருள்களை அளிக்க சிறப்பு அலுவலா்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனா்.

Dec 16, 2023

கனிமொழி உள்ளிட்ட எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டது தொடர்பாக முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் திமுக எம்.பி.க்கள் ஆலோசனை மேற்கொண்டனர்.

கேரளத்தில் கண்டறியப்பட்டுள்ள புதிய கரோனா பாதிப்பு மிதமான பாதிப்பாகவே இருக்கிறது என்று அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

வங்கக்கடலில் சுழல் காற்று எச்சரிக்கையையடுத்து தூத்துக்குடி மாவட்ட மீனவர்கள் இன்று மீன்பிடிக்கக் கடலுக்குச் செல்லவில்லை.

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.320 குறைந்து பவுன் ரூ.46,320-க்கு விற்பனையாகிறது.

சென்னையை அடுத்த மணலியில் அமைந்துள்ள சிபிசிஎல் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Dec 01, 2023

மாநில முதல்வர் - ஆளுநர் அமர்ந்து பேச வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

சர்க்கரை ஆலை தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கிட முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

மிக்ஜம் புயல் டிசம்பர் 4ல் சென்னை-மசூலிப்பட்டினம் இடையே கரையைக் கடக்கிறது

கடலூர், நாகை, காரைக்கால் உள்ளிட்ட 9 துறைமுகங்களில் 1-ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டது

பாம்பன் கடற்கரைக்கு சுற்றுலாப் பயணிகள் செல்லத் தடை விதிக்கப்பட்டது

Nov 30, 2023

வங்கக் கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுப்பெறுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 66.23 அடியாக உயர்ந்துள்ளது.

சென்னை பல்கலைக்கழகத்தில் இன்று நடைபெறவிருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டது.

புழல் ஏரியின் உபரி நீா் திறப்பு 2,000 கன அடியாக உயர்ந்தது

தேசிய பேரிடர் மீட்புப் படையின் 5 குழுவினர் சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்டங்களுக்கு இன்று சென்றனர்.

Nov 24, 2023

ஆளுநரின் அதிகாரங்கள் குறித்த உச்சநீதிமன்றத்தின் உத்தரவுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

மாற்றுத்திறன் குழந்தைகளை ஊக்குவிக்கும் பொருட்டு, தமிழக முதல்வரின் உத்தரவின்படி, சுற்றுலா மற்றும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மழை காரணமாக செங்கல்பட்டு மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை ஆளுநர் ஆர்.என். ரவி படிக்க வேண்டும் - ப.சிதம்பரம்

நொகனூா் வனப்பகுதிக்குள் 30-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் முகாமிட்டுள்ளதால் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு வனத் துறை தெரிவித்துள்ளது.

Oct 21, 2023

சிவகாசி அருகே அனுமதி பெறாத குடோனுக்கு சீல் வைத்ததுடன் அதில் பதுக்கிய 1,400 பெட்டி பட்டாசுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

வேலை நிறுத்த போராட்டம் வாபஸ் பெற்றதால் 5 நாட்களுக்குபின் ராமேசுவரம் மீனவர்கள் கடலுக்கு சென்றனர்

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 5,132 கனஅடியாக குறைந்தது

சிவகங்கை மாவட்டத்தில் 9 நாட்கள் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது

கடலில் மீன்பிடிக்கும் மீனவர்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என கடலோர காவல்படை எச்சரிக்கை

Aug 31, 2023

ஐ.என்.எஸ். ராஜாளி கடற்படை விமான தளத்தில் அமெரிக்க கடற்படை ஹெலிகாப்டரின் பயிற்சியினை நிறைவு செய்தது.

சேலம், திருச்சி, நெல்லையில் மெட்ரோ ரெயில் சேவைக்கான சாத்தியக்கூறு ஆய்வறிக்கை தமிழக அரசிடம் சமர்பிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 21 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

செப்டம்பர் 18-ந்தேதி விநாயகர் சதுர்த்தி விடுமுறை அளிக்கப்படும் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது

கொடைக்கானலில் அன்னைதெரசா மகளிர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கவர்னர் பட்டங்களை வழங்கினார்

Aug 21, 2023

767 எம்.பி.பி.எஸ். உள்பட 1670 இடங்களுக்கு 2-வது கட்ட கலந்தாய்வு தொடங்கியது

பருப்பு வகைகளின் விலை உயர வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

தமிழகத்தில் நாளை 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்

சுற்றுச்சூழல் பாதுகாப்பு காரணமாக ஸ்டெர்லைட் ஆலை செயல்பட அனுமதிக்க முடியாது - சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு பதில் மனு

சென்னையில் 2-ம் கட்டமாக அமைக்கப்படும் மெட்ரோ ரெயில் நிலையங்களில் இருந்து பேட்டரி வாகன சேவை

Aug 10, 2023

மயிலாடுதுறையில் மழையால் பயிர்கள் பாதிப்பு; ஏக்கருக்கு ரூ.40,000 இழப்பீடு வழங்க வேண்டும் - அன்புமணி ராமதாஸ்

சென்னையில் தெருக்களில் சுற்றித்திரியும் மாடுகளை பிடிக்க நடவடிக்கை- மாநகராட்சி ஆணையர்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை மஞ்சள் நிற பஸ்களை தொடங்கி வைக்கிறார்

ரூ.12.24 கோடி செலவில் மாணவ-மாணவியர் தங்கும் விடுதிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

கோயம்பேடு மார்க்கெட்டுக்கு ஒரு மாதத்துக்கு பிறகு தக்காளி வரத்து 40 லாரிகளாக அதிகரித்தது

Jul 22, 2023

டிஜிட்டல் ஆதார ஆவணங்கள் உருவாக்கம் மற்றும் கொடூர குற்ற வழக்குகளை விசாரிக்க புலனாய்வு குழுக்கள் அமைத்ததற்கு, சென்னை டி.ஜி.பி.,போலீஸ் கமிஷனர் ஆகியோருக்கும் சென்னை ஐகோர்ட் பாராட்டு தெரிவித்துள்ளது.

புதுக்கோட்டை நகராட்சியின் 13 ஏக்கர் குப்பை கிடங்கு நேற்று இரவு தீப்பிடித்து எரிந்தது, அதனை தீயணைப்பு வீரர்கள் விடிய விடிய அணைக்க முறைப்பட்டும் புகை மூட்டத்தை கட்டுப்படுத்த முடியவில்லை.

தமிழ்நாடு முதலமைச்சர் மு .க. ஸ்டாலின் காவேரி நதிநீர் பிரச்சினையில் நாடகமாடுகிறார் என்று எடப்பாடி பழனிச்சாமி குற்றம் சாட்டியுள்ளார்.

மாநில கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களுக்கும் ஒரே மாதிரியான பொது பாடத்திட்டம் கொண்டு வரப்படுவதால், பல்கலைகழகங்களின் அதிகாரங்களில் எந்தவித பாதிப்பும் இல்லை என்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

சென்னையில் இன்று பெட்ரோல் மற்றும் டீசல் 427-வது நாளாக விலை மாற்றம் இன்றி விற்பனை செய்யப்படுகிறது.

Jul 03, 2023

சென்னையில் நியாயவிலைக் கடைகளில் நாளை முதல் தக்காளி விற்பனை செய்யப்படும் - கூட்டுறவு துறை அமைச்சர் பெரியகருப்பன்

மாற்றுத்திறனாளிகள் மனது புண்படும்படியாக பேசியதற்காக மன்னிப்பு கேட்டுள்ளார் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன்.

ஜூலை 3 முதல் 22ஆம் தேதி வரை குறிப்பிட்ட மையங்களில் தலைமை பண்பு பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது - பள்ளி கல்வித் துறை

கர்நாடகா மேகதாது அணை கட்டுவதை தமிழக அரசு முறியடிக்கும் - அமைச்சர் துரை முருகன்

செந்தில் பாலாஜியின் சகோதரருக்கு 3-வது முறையாக வருமானவரி துறை சம்மன் அனுப்பியது.

Apr 13, 2023

ஆளுநர் ரவி அலசியல்வாதியாக மாறிவிட்டார் - முதலமைச்சர் ஸ்டாலின் விமர்சனம்

ஸ்டெர்லைட் போராட்டத்தில் சதி இருப்பதாக கூறிய ஆளுநர் இதை தூத்துக்குடியில் பேசமுடியுமா? - அமைச்சர் உதயநிதி

மக்கள் நலப்பணியாளர்கள் திட்டம் தொடர்ந்து செயல்படவேண்டும் - உச்சநீதிமன்றம் உத்தரவு.

முன்னாள் தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா காலமானார்.

ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் அமலுக்கு வந்தது பா.ம.கவிற்கு கிடைத்த வெற்றி - பாமக நிறுவனர் அன்புமணி

Mar 31, 2023

ராகுல் காந்தி தகுதி நீக்கம் தொடர்பாக, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தவுள்ளார்

சென்னை கலாஷேத்ரா வழக்கு தொடர்பாக தமிழக மகளிர் ஆணையம் இன்று விசாரணை

தமிழகத்தில் மக்களுக்கு எந்தவித பாதுகாப்பும் இல்லை - பாஜக தலைவர் அண்ணாமலை

தமிழகத்தில் 20 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்ய தமிழக அரசு உத்தரவு

தமிழக அரசு சார்பில் வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா கொண்டாடப்படும் -முதலமைச்சர் ஸ்டாலின்

Mar 31, 2023

ராம நவமிக்கான ராம ரத ஊர்வலத்திற்கு உயர்நீதிமன்றம் அனுமதிக்கவில்லை

கொரோனா காலத்தில் உணவகமே இல்லாமல் உணவு விநியோகம் செய்ததாக முறைகேடு - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

புதுச்சேரியில் எஸ்சி, எஸ்டி மாணவர்களின் இலவச கல்விக்கான அரசாணை விரைவில் வெளியாகும் - முதல்வர் ரங்கசாமி

ஊட்டியில் மலர் கண்காட்சி மே 19-ம் தேதி தொடங்கி 5 நாட்கள் நடக்கிறது

நடிகர் ரஜினிகாந்த் மகள் வீட்டில் நகைகள் திருடு போன வழக்கில் மேலும் 43 சவரன் மீட்பு.

Mar 30, 2023

போக்குவரத்துத் துறை தனியார்மயம் ஆக்கப்படாது - அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர்

அதிமுக- பாஜக கூட்டணி தொடர்கிறது - எடப்பாடி பழனிசாமி

தமிழ்நாடு அரசு சார்பில் வைக்கம் விருது வழங்கப்படும் - முதல்வர்

ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் குணமடைந்து வருகிறார் - மருத்துவமனை நிர்வாகம்

வேங்கைவயல் விவகாரம் தொடர்பாக ஒரு நபர் ஆணையம் அமைத்து விசாரிக்க நீதிமன்றம் உத்தரவு

Mar 30, 2023

சென்னை சென்ட்ரல் - கோவை இடையே வந்தே பாரத் ரெயில் வெள்ளோட்டம்.

திருச்சியில் 3 வழித்தடங்களில் மெட்ரோ ரெயில் சேவைக்கான சாத்தியக்கூறு பற்றி அறிக்கை தயாரிக்கும் பணி

பெண்கள் அரசியல் கட்சிகளில் தலைவராக இருந்தால் விமர்சனங்களை சந்திக்க வேண்டி உள்ளது - தமிழிசை சவுந்தரராஜன்

தேர் தி௫விழாவை முன்னிட்டு ஏப்ரல் 10-ந் தேதி புதுக்கோட்டை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை

சென்னை உயர்நீதிமன்றத்தில் ஓ.பன்னீர்செல்வத்தின் மேல்முறையீட்டு மனு இன்று விசாரணை

Mar 30, 2023

விசாரணையின்போது குற்றவாளியின் பற்களை பிடுங்கியதாக துணைசூப்பரண்டு பல்வீர்சிங் பணியிடை நீக்கம்.

அதிமுக பொதுச்செயலாளராக பதவியேற்ற எடப்பாடி பழனிச்சாமி எம்ஜிஆர் போல தொப்பியும் கண்ணாடியும் அணிந்து வந்தார்.

பழநி முருகன் கோவில் ரோப் கார் சேவை பராமரிப்பு பணி காரணமாக நாளை நிறுத்தம்

புதுச்சேரி சட்டப்பேரவையில் பிளாஸ்டிக் பயன்படுத்த தடை

நீலகிரியில் கன மழை - 20 வீட்டுக் கூரைகள சேதம்

Mar 29, 2023

அதிமுக பொதைசெயலாளர் தேர்தல் வழக்கில் ஓபிஎஸ் முறையீட்டு மனு நாளை விசாரணை.

தங்கம் விலை பவுனுக்கு ரூ.280 உயர்ந்துள்ளது.

பள்ளிகல்வித் துறையின் கணிணியில் இ௫ந்து மாணவர்களின் விவரம் திருடப்பட்ட சம்பவம் தொடர்பாக 3 பிரிவுகள் வழக்குப்பதிவு.

TET 2-ம் தாளில் 2 விழுக்காடு பட்டதாரி ஆசிரியர்கள் கூட தேர்ச்சி பெறவில்லை

5 ஆண்டுகளாக சொத்து வரி செலுத்தாதவர்கள் 3 மாதத்துக்குள் செலுத்தினால் 20 சதவீதம் வரி தள்ளுபடியாகும் - தமிழக அரசு

Mar 29, 2023

அ.தி.மு.க. உறுப்பினர்கள் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை, உறுப்பினர் உரிமைச் சீட்டுகளை புதுபிக்கவேண்டும் - அதிமுக பொதுச்செயலாளர்

பழனிசாமி தரப்பில் இன்று கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது

தமிழகத்தில் 105 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி

பொதுத்தேர்வு விடைத்தாளை திருத்துவோர்கள் செல்போன் பயன்படுத்த தடை - பள்ளிகல்வித்துறை

சிறார் இலக்கியத் திருவிழாவில் வெற்றி பெறும் குழந்தைகளை வெளிநாட்டு பயணம் அழைத்துச்செல்வோம் - பள்ளிகல்வித்துறை அமைச்சர்

Feb 22, 2023

சென்னையில் விமானங்கள் புறப்படுவதில் கால தாமதத்தை தவிர்க்க புதிய மென்பொருள் செயல்பாட்டுக்கு வந்தது

ஈரோடு கிழக்கு தொகுதியில் வாக்காளர்களுக்கு குக்கர் வினியோகம் செய்ததாக 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

சென்னை பட்டினப்பாக்கம் கடற்கரை சாலையில் மீன் வியாபாரிகள் சாலை மறியல்

சென்னையில் அனுமதியின்றி பேரணி நடத்தியதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உட்பட 3,500 பேர் மீது வழக்குப்பதிவு

வாகன எண்களை படம் பிடித்து அபராதம் விதிக்க சென்னையில் மேலும் 200 அதிநவீன ஏஎன்பிஆர் கேமராக்கள்

Jan 10, 2023

பணி நிரந்தரம் செய்யக்கோரி ஒப்பந்த செவிலியர்கள் அஞ்சல் அனுப்பும் போராட்டம் நடத்தினர்.

இன்று நடக்கவிருந்த மின்வாரிய ஊழியர்கள் போராட்டம் ஒத்திவைக்கப்பட்டது.

மதுரை ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் மாடுபிடி வீரர்களுக்கான முன்பதிவு இன்று தொடக்கம்

சட்டப்பேரவையை அவமதித்த கவர்னர் மாநிலத்தை விட்டே வெளியேற வேண்டும் - கே.பாலகிருஷ்ணன்

கன்னியாகுமரியில் ரப்பர் விலை உயர்ந்து கிலாே ரூ.119.50க்கு விற்பனையானது.

Jan 09, 2023

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஜனவரி 13 வரை நடைபெறும் - சபாநாயகர்

தமிழகத்தில் பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம் ஜனவரி 13-ம் தேதி வரை வழங்கப்படும் - தமிழக அரசு

மதுரை மாவட்ட வழங்கல் அலுவலகத்தில் தீ விபத்து. பொங்கல் தொகுப்பு வேஷ்டி, சேலைகள் தீயில் எரிந்து நாசம்.

தமிழகத்தில் 11,12-ம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறை தேர்வு தேதி வெளியீடு.

தேசியகீதம் இசைப்பதற்குள் பேரவையிலிருந்து கவர்னர் வெளியேறியது தேசியகீத அவமதிப்புமாகும் - திருமாவளவன்

Jan 02, 2023

ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என குறிப்பிட்டு அதிமுக தலைமை அலுவலகத்திற்கு தலைமை தேர்தல் அதிகாரி மீண்டும் கடிதம்.

சிறுபான்மையின௫க்கு எதிராக திமுக இருப்பதாக தமிழ் மாநில முஸ்லிம் லீக் கட்சி தலைவர் குற்றச்சாட்டு.

2019- 20ம் ஆண்டு கலைமாமணி விருது தகுதியானவர்களுக்கு தான் வழங்கப்பட்டுள்ளதா என விசாரிக்க வேண்டும் - உயர்நீதிமன்ற மதுரை கிளை

தமிழகத்தில் இதுவரை யாருக்கும் BF.7 வைரஸ் பாதிப்பு இல்லை - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் செவிலியர்களை பணி நிரந்தரம் செய்யவேண்டும் - எடப்பாடி பழனிசாமி

Dec 12, 2022

அலையன்ஸ் ஏர்' விமானம் சென்னையில் இருந்து, இலங்கை யாழ்ப்பாணத்திற்கு இன்று முதல் நேரடி விமான சேவையை தொடங்குகிறது.

மாண்டஸ் புயலை அடுத்து புதிதாக 'உ௫வாக உள்ள புயலுக்கு 'மொக்கா' என பெயரிடப்படும் - வானிலை ஆய்வு மையம்

கனமழை காரணமாக ராணிப்பேட்டை, நெமிலி மற்றும் அரக்கோணத்தில் இன்று பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை

மத்திய அரசு நிதியில் நலத்திட்டம் வழங்கிவிட்டு தி.மு.க. அரசு தன் நிதியில் செய்தது போல காட்டிக் கொள்கிறது - பா.ஜ. மாநில அமைப்பு பொதுச்செயலர் கேசவ விநாயகம்

வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்த்தல் உட்பட ,திருத்தம் கோரி, ஒரே மாதத்தில், 23 லட்சம் விண்ணப்பங்கள் குவிந்துள்ளன - இந்திய தேர்தல் ஆணையம்

Dec 12, 2022

உதயநிதியும் அவரது மனைவியும்தான் முதலமைச்சர்கள் - செல்லூர் ராஜு விமர்சனம்

சென்னையில் மாண்டஸ் புயலால் ஏற்பட்ட சேதம் 700 கோடி ரூபாய் - முதற்கட்ட கணக்கீடு

வெளிமாநில ம௫த்துவக்கழிவுகள் தமிழகத்தில் கொட்டப்படுவதை தடுக்க 6 இடங்களில் புதிய செக்போஸ்ட் - டிஜிபி சைலேந்திர பாபு

திருச்சி பேக்கரியில் 6 அடி உயரம், 92 கிலோ எடையில் முதலமைச்சர் ஸ்டாலின் உருவத்தில் பிரம்மாண்ட கேக்.

கி௫ஷ்ணகிரியில் மாலை அணிந்த ஐயப்ப பக்தர்களுக்கு இஸ்லாமியர்கள் அன்னதானம் வழங்கினர்.

Dec 10, 2022

மழையால் 130 வீடுகள் சேதமடைந்துள்ளது - முதல்வர் ஸ்டாலின்.

புயல் பாதிப்புக்கு உதவ பாஜக தொண்டர்கள் தயாராக உள்ளனர் - பாஜக தலைவர் அண்ணாமலை

கன மழைக்கு வாய்ப்பு இ௫ப்பதால் கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களுக்கு 'ஆரெஞ்ச் அலெர்ட் 'அறிவிப்பு

தமிழகத்தில், 21 அரசு மருத்துவ கல்லுாரிகளில், உள்தங்கும் ம௫த்துவ அலுவலர் இல்லை

சென்னையில் புயல் பாதித்த இடங்களை நேரில் சென்று ஆய்வுசெய்தார் முதல்வர் ஸ்டாலின்

Dec 10, 2022

மாண்டஸ் புயல் 3:13 மணியளவில் கரையை கடந்தது

தமிழகத்தின் வளர்ச்சிக்கு புதிய கல்விக்கொள்கை அவசியம் - ஆளுனர் ரவி

மகேந்திரகிரி இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் நடந்த ஏர் ப்ரீதிங் இன்ஜின் டெஸ்ட் வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது.

சிறுமலை அ௫கே தென்மலையில் 60 கிலோ சந்தன மரக்கட்டை கடத்திய நபர் கைது.

'வி.சி., கட்சியை தடை செய்யக் கோரி, ஹிந்து மக்கள் கட்சி டிச.12ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் - தலைவர் அர்ஜூன் சம்பத்

Dec 10, 2022

மாண்டஸ் புயல் காரணமாக சென்னை மற்றும் வேலூரில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறை நடத்தும் கலைத்திருவிழாவில் 33,000 பதிவு செய்துள்ளனர்.

மாண்டஸ் புயலின் தாக்கத்தால் கொடைக்கானலில் மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்தது.

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில் உண்டியலில் இ௫ந்து பணம் திருடிய நபர் கைது

திருச்சியில் தனியார் கல்லூரி பேருந்து எதிர்பாராதவிதமாக 15 அடி சாலையோர பள்ளத்தில் இறங்கியது.

Dec 09, 2022

தூத்துக்குடியில் கடல் சுமார் 30 அடி தூரம் உள்வாங்கியது .

மகேந்திரகிரியில் உள்ள இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் இன்று மூச்சு காற்று சோதனை நடைபெறுகிறது.

கடலூரில் 5ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்.

மாண்டஸ் புயல் இன்று நள்ளிரவு சென்னை அருகே கரையை கடக்கும் - வானிலை ஆய்வு மையம்.

சிறை காவலர்களின் சீருடையில் 'கேமரா' பொ௫த்தி கைதிகளை கண்காணிக்க புது திட்டம்.

Dec 09, 2022

மான்டஸ் புயல் கரையை கடப்பதால் காஞ்சிபுரம், விழுப்புரம், செங்கல்பட்டில் கனமழைக்கு வாய்ப்பு.

குஜராத் மாநிலத்தின் வளர்ச்சியை இந்த தேர்தல் முடிவுகள் காட்டுகிறது - பா.ஜ., எம்எல்ஏ வானதி சீனிவாசன்.

கோயில் நிலங்களை மீட்கும் நடவடிக்கைகள் தி௫ப்தியளிக்கவில்லை - உயர்நீதிமன்றம்

தமிழகத்தின் மூலதன செலவினம், 3 ஆண்டுகளில் 95 ஆயிரம் கோடி ரூபாயாக அதிகரிக்கும் - நிதியதைச்சர் தியாகராஜன்.

பதிவுத்துறை இணையதளத்தில் நிலங்களின், 'சர்வே' எண்களை மட்டுமே உள்ளீடு செய்ய வேண்டும் - நில அபகரிப்பை தடுக்க புதிய வசதி

Dec 08, 2022

இன்று உயர்நீதிமன்றத்தில் மின் இணைப்புடன் ஆதார் இணைப்பதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு விசாரணை.

முதல்வர் ஸ்டாலின் இன்று தென்காசியில் ஒரு லட்சம் பேருக்கு நலத்திட்ட உதவி வழங்குகிறார்.

ராணுவ வீரர்களின் தியாகத்திற்காக கொடி நாள் நிதிக்கு நேற்று நன்கொடை வழங்கினார் முதல்வர்.

நகர் ஊரமைப்பு இயக்ககத்தின் கீழ் 27 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார் முதல்வர் ஸ்டாலின்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார் கோவை செல்வராஜ்.

Dec 08, 2022

தமிழகத்தில் இன்று முதல் பலத்த காற்றுவீசும். 2 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு.

கோவையில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் திருநங்கைகளுக்கு அரசாங்க குடியி௫ப்பில் வீடுகள் வழங்கப்பட்டது.

வங்கக்கடலில் நிலவும் புயல் சின்னத்தால் திருவாரூர் மற்றும் தஞ்சாவூர் மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை

அன்னூரில் பா.ஜ.க தலைவர் அண்ணாமலையை எம்.ஜி.ஆர் , இராமர், முதலமைச்சர் என விதவிதமாக சித்தரித்து பேனர் வைத்துள்ளனர் பாஜக தொண்டர்கள்.

தமிழக அமைச்சரவை விரைவில் மாற்றம் - உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி வழங்கும் திட்டத்தில் திமுக.

Dec 08, 2022

கனமழையை எதிர்கொள்ள அனைத்து மாவட்டங்களிலும் 5,093 நிவாரண முகாம்கள் தயார் நிலையில் உள்ளன.

எல்லையில் போராடும் படைவீரர்களின் குடும்பங்களுக்குப் பாதுகாப்பான வாழ்க்கையை அமைத்துத் தருவது நம்
கடமை - முதல்வர் மு.க. ஸ்டாலின்

அத்திக்கடவு - அவினாசி திட்டத்தில் முதற்கட்ட பணிகள் முடிந்த பிறகு தான் அடுத்த கட்டப் பணிகள் துவங்கும் - அமைச்சர் துரைமுருகன்

நெய்வேலி நிலக்கரி சுரங்கத்திற்காக கடலூரில் மாவட்ட நிர்வாகம் மக்களை மிரட்டி நிலங்களை பறிப்பதாக அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு.

சென்னை மாநகராட்சி செயல்பாடுகளை நேரில் பார்வையிட்டது அமெரிக்க குழு.

Dec 07, 2022

மாண்டஸ் புயல் வலுவடையவி௫ப்பதால் சென்னையை சுற்றியுள்ள 8 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்.

சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் லாரி மீது மினி சரக்கு வாகனம் மோதியதில் 6 பேர் பலி.

நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள தென்காசிக்கு ரயிலில் செல்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

பாஜக தலைவர் அண்ணாமலை 2026-ல் தமிழக முதலமைச்சராவார் - திருச்சி சூர்யா டுவிட்டர் பதிவு

தொலைதூரக் கல்வி படித்தவர்கள் ஆசிரியர் பணிக்கு தகுதியானவர்கள் இல்லை - சென்னை உயர்நீதிமன்றம்

Dec 07, 2022

காஞ்சிபுரம் பரந்தூர் விமான நிலைய மேம்பாட்டிற்கான சர்வதேச ஒப்பந்தப்புள்ளிக்கு கோரியது தமிழக அரசு

பாராளுமன்றத் தேர்தலில் கூட்டணி அமைத்து வெற்றி பெறுவோம் - எடப்பாடி பழனிசாமி

கனியாமூர் தனியார் பள்ளியில் 9 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கியது.

மேட்டூர் அணை நீர்மட்டம் 118.91 அடியை எட்டியது .

தமிழகத்தில் 60.27 லட்சம் பேர் மின் இணைப்புடன் ஆதாரை இணைத்துள்ளனர்.

Dec 07, 2022

பாஜக உடனான தன்னுடைய உறவை முடித்துகொள்வதாக திருச்சி சூர்யா அறிவித்துள்ளார்.

ரேசன் கடைகளுக்கு பொருட்கள் விநியோகித்த 5 நிறுவனங்களில் வருமான வரித்துறை சோதனை - ரூ.290 கோடி ஊழல் பணம் பறிமுதல்.

கோவையில் போதை பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு மாரத்தான். 10,000 பேர் பங்கேற்பு

குன்னூர் வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லூரிக்கு முப்படை தளபதி ஜெனரல் அனில் சவுகான் வருகை புரிந்தார்.

கோம்பகோணத்தில் அம்பேத்கர் காவி உடையில் இருப்பது போல சுவரொட்டி ஒட்டிய இந்து முன்னணி கட்சி நிர்வாகி கைது.

Dec 06, 2022

தமிழகத்தின் பல பகுதிகளில் இ௫ந்து திருவண்ணாமலைக்கு 2,300 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

அம்பேத்கர் நினைவு தினத்தையொட்டி, மயிலாடுதுறை தலைஞாயிறு கிராமத்தில் 5 நாட்களுக்கு 144 தடை உத்தரவு.

தீபத்திருநாளன்று பாஜக சார்பில் விளக்குகளால் சிவலிங்கம் மற்றும் பாஜக தலைவர் அண்ணாமலையின் முகம் வரையப்பட்டது.

ஆதிக்கமற்ற சமுதாயம் அமைத்தே தீருவோம் - டாக்டர் அம்பேத்கரின் நினைவு நாளில் மு.க.ஸ்டாலின் டுவிட்டரில் பதிவு

ஓபிஎஸ் அணியில் இருந்து விலகிய கோவை செல்வராஜ் நாளை திமுகவில் இணையவுள்ளார்.

Dec 06, 2022

திருவண்ணாமலையில் பரணி தீபம் ஏற்றப்பட்டது.

கார்த்திகை தீபத்தையொட்டி திருவண்ணாமலை மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை.

கோவையில் ஜவுளி பூங்காவிற்கு நிலம் கையகப்படுத்த எதிர்ப்புத் தெரிவித்து விவசாயிகள் விநாயகரிடம் மனு.

சென்னை, நாகை, தஞ்சை, திருவாரூர், கடலூர், மயிலாடுதுறை ஆகிய 6 மாவட்டங்களில் 6 தேசிய பேரிடர் மீட்பு குழுக்கள் முகாம்.

பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு, தமிழ்நாடு முழுவதும் 1.2 லட்சம் போலீஸார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

Dec 06, 2022

மு.க. சாதனைகளை பொறுக்கமுடியாமல் சிலர் மதத்தை வைத்து அரசியல் செய்கின்றனர் - மு.க. ஸ்டாலின்

ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் வேலை வழங்க வேண்டும் - ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்

மசோதா வந்தவுடனேயே கையெழுத்திடுவது கட்டாயம் கிடையாது -கவர்னர் தமிழிசை சௌந்தர்ராஜன்

அறநிலைத் துறை சார்பில் 31 ஜோடிகளுக்கு திருமணம் நடத்தி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்.

140 அடியை தாண்டியது முல்லை பெரியாறு அணை நீர்மட்டம்.

Dec 05, 2022

தமிழக பாஜக பொருளாதார அணி மாநில துணைத்தலைவர் முனியசாமி மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்தார்.

இளையராஜா போன்றவர்களை வைத்து தமிழகத்தில் அரசியல் செய்யும் திட்டத்தில் பாஜக உள்ளது - தி௫மாவளவன்

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் எடப்பாடி பழனிசாமி, ஓ பன்னீர்செல்வம் இ௫வ௫ம் தனித்தனியாக அஞ்சலி செலுத்தினர்.

தமிழகத்தில் பாஜக பூனைக்குட்டி போல் செயல்படுகிறது - பாஜக பிரமுகர் சுப்ரமணிய சுவாமி ட்வீட்.

சென்னையில் முருங்கைக்காய் கிலோ 200 ரூபாய்க்கு விற்பனை - அதிர்ச்சியில் மக்கள்.

Dec 05, 2022

ஜி- 20 கூட்டமைப்பு விளக்கக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் ஸ்டாலின் டெல்லி செல்கிறார்.

ஜி-20 மாநாடு குறித்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க எடப்பாடி பழனிச்சாமிக்கு அழைப்பு

18 வயதுக்கு குறைந்தோரின் திருமணம் மற்றும் காதல் விவகாரங்களில் போக்சோ நடவடிக்கை எடுக்க வேண்டாம் - டிஜிபி சைலேந்திரபாபு

ஜெயலலிதாவின் 6ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு மெரினாவில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

சென்னையில் இ௫ந்து திருவண்ணாமலைக்கு இன்று சிறப்பு ரயில்கள் இயக்கம்.

Dec 05, 2022

அத்திக்கடவு - அவினாசி திட்டம் ஜனவரி 15-க்குள் தொடங்கப்படும் - வீட்டுவசதிதுறை அமைச்சர் முத்துசாமி

எழுத்தாளர் கி. ரா.வுக்கு கோவில்பட்டியில் திருவுருவச் சிலை திறந்து வைத்தார் முதல்வர் மு.க. ஸ்டாலின்.

தேனி - போடி இடையே அதிவேக ரயில் இன்ஜின் சோதனை ஓட்டம் நடைபெற்றது.

கொடநாடு வழக்கு தொடர்பான விசாரணையை ஜனவரி 27-ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.

நெடுஞ்சாலைத்துறை டெண்டர் தொடர்பாக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி குறித்து அறப்போர் இயக்கத்திற்கு அவதூறாக பேச ௯டாது - சென்னை உயர்நீதிமன்றம்.

Dec 03, 2022

தஞ்சாவூரில் அரசுப் பள்ளி மாணவர்கள் கணினியைத் தொடாமலே இயங்க வைக்கும் மென்பொருளை கண்டுபிடித்து சாதனை.

மின் கட்டண உயர்வை திரும்பப்பெற வலியுறுத்தி வரும் 9,13,14ம் தேதிகளில் அதிமுக சார்பில் போராட்டம் - இ.பி.எஸ் அறிவிப்பு

மேகதாது அணை விவகாரத்தில் தமிழக அரசு விழிப்புடன் இருக்க வேண்டும் - பாமக நிறுவனர் ராமதாஸ்

டிஎன்பிஎஸ்சி முதன்மைத் தேர்வுக்கான விண்ணப்பதாரர்கள் அசல் சான்றிதழ்களை இ-சேவை மையங்களில் பதிவேற்றம் செய்யலாம்- அரசு கேபிள் டிவி நிறுவனம்

திராவிட இயக்கத்தின் அடிநாதத்தை யாராலும் தொட முடியாது - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

Dec 03, 2022

தமிழகத்தில் உள்ள அனைத்து கோயில்களிலும் செல்போன் பயன்பாட்டிற்கு தடை விதிக்க வேண்டும் - உயர் நீதிமன்ற மதுரைக்கிளை

பிராந்திய மொழிகளுக்கு நாம் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் - மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ

தேனியில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக சிலம்பம் பயிற்சி வழங்கப்படுகிறது.

ஆதிதிராவிட, பழங்குடியின விவசாயிகளுக்கு 20 சதவீத கூடுதல் மானியம் அரசு நிதியிலிருந்து வழங்கப்படும்.

சென்னையில் முன் ஜாமீன் பெற்றதாக நீதிமன்றத்தில் போலி ஆவணங்கள் சமர்ப்பித்த திமுக பெண் கவுன்சிலர் மற்றும் அவரது கணவர் கைது.

Dec 03, 2022

குற்றால அருவிகளில் நீர்வரத்து குறைந்ததால் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு அனுமதி.

தமிழகத்தில் ரேஷன் அரிசி கடத்தியது தொடர்பாக 191 பேர் கைது. 47 வாகனங்கள் பறிமுதல்.

சென்னையில் ஜனவரி மாதம் 16,17,18 தேதிகளில் சர்வதேச புத்தக கண்காட்சி நடைபெறும் - அமைச்சர் அன்பில் மகேஷ்

பிரதமர் வருகையின் போது பாதுகாப்பில் ஏற்பட்ட குழப்பம் குறித்து விளக்கமளிக்க தலைமை செயலாளர் இறையன்புக்கு கவர்னர் கடிதம்.

விவசாயிகளின் உரத்தேவையை பூர்த்தி செய்ய தூத்துக்குடி, காரைக்கால் துறைமுகங்களில் 90,000 டன் யூரியா இறக்குமதி - அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் .

Dec 02, 2022

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை பொம்மை முதலைச்சர் என எடப்பாடி பழனிச்சாமி விமர்சனம்.

உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு சிறப்பாக பணியாற்றிய செவிலியர்களுக்கு ராமநாதபுரம் கலெக்டர் பாராட்டு.

காசி தமிழ் சங்கம் நிகழ்ச்சியில் மாணவர்களுக்கு சித்தாந்தம், ஹிந்துதுவ பிரச்சாரங்களை செய்வதாக ௯றி இந்திய மாணவர் சங்கத்தினர் ரயில் மறியல் போராட்டம்.

வாக்காளர் பட்டியல் திருத்தம் குறித்த ஆலோசனைக் கூட்டம் தேனியில் நடைபெறுகிறது.

கணித பாடப்புத்தகத்திலிருந்து சீட்டுகட்டு தொடர்பான பகுதிகள் நீக்கப்படும் -பள்ளிக்கல்வித்துறை

Dec 02, 2022

தீப திருவிழாவை முன்னிட்டு சென்னையிலிருந்து திருவண்ணாமலைக்கு 3 நாட்கள் சிறப்பு ரயில் இயக்கப்படும் - ரயில்வே நிர்வாகம்

உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் 3 மாதங்களில் 6300 வழக்குகள் தீர்க்கப்பட்டது - வழக்கறிஞர்களுக்கு நீதிபதிகள் பாராட்டு.

பாலியல் ரீதியான அத்துமீறல்களை நிறுத்துங்கள் என சென்னை மேயர் பிரியா வலைபதிவு.

ஒரு துளி நீரில் அதிக விளைச்சல் திட்டத்துக்கு முதல் தவனையாக ரூ.261 கோடி ஒதுக்கீடு.

லிப்டில் அமைச்சர். மா.சுப்ரமணியன் சிக்கிய விவகாரத்தில் 2 பொறியாளர்கள் தற்காலிக இடைநீக்கம்.

Dec 02, 2022

கூட்டணியை பற்றி கவலைப்படாமல் வ௫ம் மக்களவை தேர்தலில் 40 தொகுதிகளையும் கைப்பற்ற உழைக்க வேண்டும் - மு.க.ஸ்டாலின்

தமிழ்நாட்டில் முதன்மையான மயில்கள் சரணாலயம் புதுக்கோட்டையில் உள்ள விராலிமலை மயில்கள் சரணாலயம்.

தி௫வண்ணாமலை கோவிலில் கோபுரத்தில் உள்ள சிலையின் முகத்தை எடுத்துவிட்டு சிசிடிவி கேமரா வைத்துள்ள புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வ௫கிறது.

விழுப்புரத்தில் 3 ஆண்டுகளாக உபயோகிக்காத பொது கழிப்பறைகளை உடனடியாக சரி செய்ய மாவட்ட ஆட்சியர் உத்தரவு.

தமிழ்நாடு அரசு ஜல்லிக்கட்டு போட்டி குறித்து பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் - உச்ச நீதிமன்றம் உத்தரவு.

Dec 02, 2022

பள்ளி,கல்லூரிகளில் சைகை மொழியை பாடமாக்க நடவடிக்கை எடுக்கப்படும் - முதல்வர் மு.க. ஸ்டாலின்

தமிழகத்தில் 26.04 லட்சம் மின் இணைப்புகள் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ளது - அமைச்சர் செந்தில் பாலாஜி

எம்.ஜி.ஆரின் நினைவு இல்லத்தில், எம்.ஜி.ஆர்.க்கும் அவரது மனைவி வி.என்.ஜானகி அம்மையாருக்கும் வெண்கலச் சிலைகள் அமைக்கப்படும் - ஓ.பன்னீர்செல்வம்

கள்ளக்குறிச்சி பள்ளியில் 9 முதல் பிளஸ் 2 வரை டிசம்பர் 5-ல் இருந்து நேரடி வகுப்புகள் தொடங்கப்படும் - சென்னை உயர்நீதிமன்றம்

தமிழகத்தில் 9 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் - ஐ.பி.எஸ். அதிகாரி சங்கர் சட்டம், ஒழுங்கு ஏ.டி.ஜி.பி.யாக நியமனம்

Dec 01, 2022

உள்நாட்டு காளைகள் அழிந்துவிட்டால் மிகவும் ஆபத்து - ஜல்லிக்கட்டு வழக்கில் தமிழ்நாடு அரசின் வாதம்.

ஆன்லைன் ரம்மி தடை மசோதாவுக்கு விரைவில் ஒப்புதல் அளிக்க வேண்டும் - ஆளுநரை வலியுறுத்தும் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி .

தென்காசியில் கால்நடைகளை தாக்கும் பெரியம்மை நோய் பரவுகிறது - மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை

கிருஷ்ணகிரியில் கல்லூரி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் கூலித் தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை.

விழுப்புரத்தில் மாவட்ட அளவில் மாணவியர்களுக்கான தடகள போட்டிகள் ஆரம்பம்.

Dec 01, 2022

ஆன்லைன் ரம்மி தடை மசோதா குறித்து தமிழக ஆளுநருடன் சட்டத்துறை அமைச்சர் சந்திப்பு.

விழுப்புரத்தில் நிலவும் கடும் பனிப்பொழிவால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதி.

திருத்தணியில் திமுக உறுப்பினர்கள் கூட்டத்தில் சட்டமன்ற உறுப்பினரின் உதவியாளரை பால்வளத்துறை அமைச்சர் நாசர் தாக்கியதால் பரபரப்பு.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு குடும்ப அட்டைத்தாரர்களுக்கு வங்கி கணக்கில் பணத்த செலுத்த அரசு திட்டம் - தகவல்

திருப்பூர் வழியாக செல்லும் 10 ரயில்கள் ரத்து செய்யப்படும் - ரயில்வே நிர்வாகம்

Dec 01, 2022

தற்போதைய ஆட்சிக்கு ஏற்ப காவல்துறையினர் நடனமாடுகின்றனர் - சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம்.

ஈரோடு அரசுபள்ளியில் பட்டியலின மாணவர்களை கழிவறையை சுத்தம் செய்ய வைத்த பள்ளி தலைமை ஆசிரியை மீது வழக்குப்பதிவு

வங்கி கணக்கு இல்லாதவர்களுக்கு கூட்டுறவு சங்கப் பணியாளர்கள் நடவடிக்கை எடுத்து வங்கி கணக்கு தொடங்க வேண்டும் - கூட்டுறவுத்துறை

ராமநாதபுரம் வேதாளையிலிருந்து இலங்கைக்கு கடத்தவிருந்த 1,500 கிலோ மஞ்சள் பறிமுதல்

மணல் கொள்ளையை தடுத்த காவல் உதவி ஆய்வாளர் மற்றும் காவலரை அரிவாளால் வெட்டிய கொள்ளையர்கள்

Nov 30, 2022

ஆதார் இணைப்பின் போது கணினியில் கோளாறு ஏற்பட்டால் மாற்று கணினிகளை தயாராக வைத்திருக்க வேண்டும் - மின்வாரியம்

நாட்டில் சட்டம் ஒழுங்கை கெடுக்க சதி செய்கிறார்கள் - முதலமைச்சர் ஸ்டாலின்

அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கு விசாரணையை டிசம்பர் 6ம் தேதிக்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்.

சுருளிபட்டி சாலையில் உள்ள ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து பொது மக்கள் போராட்டம்.

சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில், மின்தூக்கியில் சிக்கிக் கொண்ட அமைச்சர் மா.சுப்பிரமணியன் பத்திரமாக மீட்கப்பட்டார்.

Nov 29, 2022

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை பதவி நீக்கம் செய்யக்கோரி, காஞ்சிபுரம் மாவட்ட தந்தை பெரியார் திராவிட கழக செயலாளர் சார்பில் வழக்கு.

ஆளுநர் பதவி என்பது இல்லாவிட்டால் ஆன்லைன் ரம்மியை ஒழித்தி௫க்கலாம் - கனிமொழி எம்.பி

மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க, 2023 மார்ச் 31 வரை கால அவகாசம் கொடுக்க வேண்டும் - தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை

பழனி முருகன் கோயிலில் படிப்பாதை வழியாக வ௫ம் பக்தர்களுக்கு சுக்கு காபி வழங்க திட்டம்.

திருவாரூரில், பல்கலைக்கழக அளவில் சிறந்த மதிப்பெண் பெற்ற மாணவிகள் ஒரு நாள் கல்லூரி முதல்வராக பொறுப்பேற்றனர் .

Nov 29, 2022

மங்களூர் வெடிகுண்டு குற்றவாளி குறித்து நாகர்கோவிலில் போலீசார் விசாரணை.

ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்க கோரிய வழக்கு - உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது.

இந்தியாவிலே பெரிய கட்சியான பாஜக-வால் தமிழகத்தில் தனித்து போட்டியிட முடியுமா என நாம் தமிழர் கட்சி சீமான் கேள்வி.

ஆளுநருக்கு மக்கள் மீது அக்கறை இல்லை - நாம்தமிழர் கட்சி சீமான்

ஒரே இடத்தில் விசிக, பாமக கட்சிக்கொடி ஏற்றுவதில் தகராறு - தொண்டர்கள் சாலைமறியல்.

Nov 29, 2022

தமிழகத்தில் வணிக ரீதியான ஆவின் பாலின் விலை மட்டுமே உயர்த்தப்பட்டு உள்ளது - அமைச்சர் நாசர்

மெட்ரோ ரயிலில் பொது பயண அட்டை டிசம்பர் இறுதியில் வழங்கப்படும் - மெட்ரோ நிர்வாகம்

தனியார் மருத்துவமனைகளில் கட்டாய கொரோனா பரிசோதனைக்கு விரைவில் தளர்வு அளிக்கப்படும் - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை மெரினா கடற்கரையில் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு நடைபாதை அமைக்கப்படும் - உதயநிதி ஸ்டாலின்

அகில பாரத ஐயப்ப சேவா சங்கத்தின் சார்பில் ஐயப்ப பக்தர்களுக்கு தொடர் அன்னதானம் மதுரையில் துவங்கியது

Nov 28, 2022

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக டிசம்பர் 2-ம் தேதி வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

ஆன்லைன் சூதாட்டத்தில் இருந்து சிறுவர்களை தடுப்பது பெற்றோரின் பொறுப்பு - உயர்நீதிமன்ற மதுரை கிளை

ஒ௫ நபர் 5 மின் இணைப்புகள் வைத்திருந்தாலும் 100 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும் - அமைச்சர் செந்தில் பாலாஜி

கடந்த வாரம் கைது செய்யப்பட்ட யூட்யூபர் கிஷோர் கே சுவாமி, கோவை சைபர் கிரைம் வழக்கிலும் கைது.

முருகனின் நான்காம் படை வீடான சுவாமிமலையில் கார்த்திகை தீபத்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

Nov 28, 2022

தி௫ச்சியில் அரசுப் பள்ளி மாணவர்களுக்காக அறிவியல் மற்றும் கணிதம் இணைந்த வானவில் மன்றத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

ஆன்லைன் சூதாட்ட தடைக்கான அவசர சட்டத்தின் காலக்கெடு நேற்றுடன் முடிவடைந்தது.

நாகையில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பங்கேற்ற நிகழ்ச்சியில் ஏற்பட்ட கல்வீச்சு தாக்குதலை கண்டித்து பாமகவினர் சாலை மறியல் .

போலி பத்திரப்பதிவு நிரூபிக்கப்பட்டால் அப்பதிவு ரத்து செய்யப்படும் - அமைச்சர் மூர்த்தி

தென்காசியில் ஆன்லைன் ரம்மி விளையாடி பணத்தை இழந்த விரக்தியில் வடமாநில பெண் தற்கொலை

Nov 28, 2022

சென்னையில் கடுமையான பனி மூட்டம் நிலவுவதால் ரயில்கள் தாமதமாக இயக்கப்படுகின்றன.

தமிழக அரசை கண்டித்து 5000 இடங்களில் பாஜக போராட்டம் நடத்த திட்டம் - பாஜக தலைவர் அண்ணாமலை

மூன்று மாவட்டங்களுக்கு இரண்டு நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.முதற்கட்டமாக திருச்சி செல்கிறார்.

தமிழ்நாடு முழுவதும் மின் இணைப்பு எண்ணை ஆதார் எண்ணுடன் இணைக்கும் சிறப்பு முகாம் இன்று முதல் டிசம்பர் 31ம் வரை நடைபெறுகிறது.

திமுக உயர் நிலை செயல் திட்டக்குழு உறுப்பினர்களாக மு.க.ஸ்டாலின் உடன் கே.என் நேரு நியமனம்.

Nov 26, 2022

அ.தி.மு.க., தலைமையிலான கூட்டணியில், பன்னீர்செல்வம், தினகரன், சசிகலாவுக்கு இடமில்லை - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

புவனகிரி, சிதம்பரம் தாலுகாவில் பத்திரத்திற்குத் தட்டுப்பாடு.

கோவை பேராசிரியர் எஸ்.ஆர்.ராமகிருஷ்ண சாஸ்திரி, தனது 'இ - மெயிலில் தி.மு.க வை பற்றி விமர்சனம்

சென்னையில் நீர்நிலை என வகைபடுத்தப்பட்ட பகுதியை குடியிருப்பாக மாற்ற முயற்சிப்பதாக சி.எம்.டி.ஏ மீது புகார்

ஊத்துக்கோட்டை அரசு ஆண்கள் பள்ளியில், நடந்த அறிவியல் கணகாட்சியில் 600-க்கும் மேற்பட்ட மாணவர்கள் திறமையை வெளிப்படுத்தினர்.

Nov 26, 2022

சாலக்குடி வனப்பகுதியில் 10 நாளாக காட்டு யானை ஒன்று வாகனங்களை விரட்டியும் சேதப்படுத்தியும் வருகிறது

தஞ்சை பல்கலைக்கழக மாணவர்கள் உருவாக்கிய சிறிய ரக செயற்கைகோள் விண்ணில் ஏவப்பட்டது

டிஎன்பிஎஸ்சி பொறியியல் பணிகளுக்கான தேர்வு முடிவுகள் வெளியாகவில்லை - டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம்

வங்கியில் இருந்து பேசுவதாக கூறுபவர்களிடம் எந்த சுயவிவரங்களையும் பகிரக்௯டாது - காவல்துறையினர் எச்சரிக்கை.

கோவையில் மின் கட்டண உயர்வை கண்டித்து தொழில்களின் கூட்டமைப்பான போசியா சார்பில் உண்ணாவிரத போராட்டம்

Nov 25, 2022

பள்ளி வளாகங்களில் அரசியல் மற்றும் மதம் சார்ந்த நிகழ்ச்சிகளை நடத்தக் கூடாது - பள்ளிக் கல்வித்துறை உத்தரவு.

ஆதார் எண்ணை மின் இணைப்புடன் இணைக்காதோ௫க்கு, மின் கட்டணம் செலுத்துவதற்கு 2 நாட்கள் அவகாசம் - மின்வாரியம்

செல்வபெருந்தகை எம்.எல்.ஏ காங்கிரஸின் மாநில தலைவர் பதவியை பறிக்க முயற்சி செய்கிறார் - எஸ்.சி.பிரிவு தலைவர் ரஞ்சன் குமார் குற்றச்சாட்டு

தமிழகத்தில் 14.6 லட்சம் குடும்பங்களுக்கு வங்கிக் கணக்கு இல்லை - கூட்டுறவுச் சங்கப் பதிவாளர்

ஆபாச ஆடியோ விவகாரத்தில் பாஜக ஓபிசி பிரிவு மாநில துணைத் தலைவர் திருச்சி சூர்யா கட்சியிலி௫ந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

Nov 25, 2022

கோவை மாவட்டத்திற்கு இன்று 218வது பிறந்தநாள்

அடுத்த 4 நாட்களுக்கு வடதமிழகம், மற்றும் காரைக்கால், தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் மிதமான மழை பெய்யக்கூடும் - வானிலை ஆய்வு மையம்

ஒரு மாற்றுத்திறனாளி ௯ட மனவருத்தம் அடைந்துவிடாத வகையில் அரசு பணியாற்ற வேண்டும் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

தமிழ்நாட்டில் பொறியியல் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு முடிவடைந்தது.

தலைவாசலில் அரசு பள்ளி மாணவர்கள் 5 பேர் வகுப்பறையில் மது அருந்தியதால் அவர்களை பள்ளிக்கல்வித்துறை சஸ்பெண்ட் செய்துள்ளது.

Nov 25, 2022

மையத்தில் மங்களூரு வெடிகுண்டு தாக்குதல் குற்றவாளியை கோவை ஈஷாவில் பார்த்ததாக ஆட்டோ ஓட்டுநர் தகவல்

சுதந்திரமடைந்த பின்பும் சாதிக் கட்டுகளை உடைக்க முடியவில்லை - சென்னை உயர் நீதிமன்றம்

கேரளாவில் கொள்ளையடித்து விட்டு தப்பிய நபர்களை தென்காசி மாவட்ட போலீசார் பிடித்தனர்.

உலகக்கோப்பை கால்பந்து போட்டிகளை அரசு கேபிள் செட்டாப் பாக்ஸ் மூலம் கட்டணமின்றி காணலாம் - அமைச்சர் மனோ தங்கராஜ்

ஆவின் மாதந்திர அட்டையுடன் ரேஷன் அட்டையை இணைக்க ஆவின் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

Nov 24, 2022

சென்னையில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை எடப்பாடி பழனிச்சாமி சந்திக்காததால் பாஜக தலைவர் அண்ணாமலை அதி௫ப்தி.

பாஜகவின் உட்கட்சி பூசலை திசைதிருப்பும் கருவியாக எடப்பாடி பழனிசாமி செயல்படுவதாக அமைச்சர் தங்கம் தென்னரசு விமர்சனம்.

மூன்றாம் பாலினத்தவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார் தென்காசி மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் .

திருவாரூரில் உளுந்து சாகுபடிக்காக 100% தெளிப்பு நீர் பாசன மானியம் வழங்கப்படுகிறது.

மதுரையில் ஒரே பள்ளி வாகனத்தில் 130 மாணவிகள் அழைத்துச் செல்லப்பட்டதால் 100 மாணவிகள் மயக்கம்.

Nov 24, 2022

விசிக கட்சி மாவட்ட நிர்வாகிகள் பெண்களை மிக கேவலமாக திட்டுவதாக பெண் நிர்வாகி நற்சோனை குற்றச்சாட்டு

கார்த்திகை தீபத்தை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு 2700 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

கன்னியாகுமரியில் நெகிழி ஒழிப்புக்கான சோதனையில் நெகிழி பயன்படுத்திய கடைகளுக்கு அபராதம்.

சாலையோரம் வசிப்பர்களில் 99% பேர் அமைப்பு சாரா தொழிலாளர் நலவாரியத்தில் உறுப்பினர்கள் இல்லை -ஆய்வுத் தகவல்

கோவையில் ஆன்லைனில் வெடிபொருள் வாங்கிய நபர் கைது

Nov 24, 2022

மேகதாது அணை வழக்குகள் முடியும் வரை அது தொடர்பாக காவிரி மேலாண்மை ௯ட்டத்தில் விவாதிக்கக் ௯டாது - தமிழக அரசு மனு தாக்கல்

மின் கட்டணம் செலுத்த ஆதார் அவசியம் என்ற நிபந்தனையை நீக்க வேண்டும் - அன்புமணி ராமதாஸ்

பால் விலை உயர்வை கண்டித்து சென்னையில் இன்று போராட்டம் - த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன்

சென்னையில் பலதுறைகளை சேர்ந்த 208 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார் மத்திய அமைச்சர் எல்.முருகன்

மதுரை மாவட்டம் அரிட்டாபட்டியை தமிழ் நாட்டின் முதல் பல்லுயிர் பாரம்பரியத் தலமாக அறிவித்துள்ளது தமிழக அரசு.

Nov 23, 2022

ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்க கோரிய வழக்குகள், உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வரவுள்ளது.

ஆவின் நிர்வாகம் கிறிஸ்துமஸ், புத்தாண்டையொட்டி கேக் தயாரிப்பில் ஈடுபட திட்டமிட்டுள்ளது.

அம்பேத்கரை இணைக்காமல் காந்தியின் வரலாற்றை எழுத முடியாது - திருமாவளவன் பேச்சு.

திமுகவின் இளைஞரணி செயலாளராக சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி தொகுதி எம்.எல்.ஏ உதயநிதி ஸ்டாலின் நியமனம்

திருச்சி சூர்யா ஆடியோ விவகாரத்தில் குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் - பாஜக தலைவர் அண்ணாமலை எச்சரிக்கை

Nov 23, 2022

உதகையில் கடும் பனிப்பொழிவு ஏற்படுவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கபடுகிறது.

கம்பத்தில் வீடுகளின் செப்டிக் டேங்க் கழிவுகளை சுத்தப்படுத்தி விவசாயத்திற்கு பயன்படுத்த கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் திறக்கப்பட்டது.

ராமநாதபுரம் மண்டபம் வழியாக இலங்கைக்கு கடத்தவிருந்த 300 கிலோ கஞ்சா கடலோர காவல்படையினரால் பறிமுதல், 4 பேர் கைது .

ஆளுநர் ஆர்.என்.ரவியைச் சந்திக்கிறார் எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி.

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பெண்களுக்கு எதிராக குரல் கொடுக்க தவறிவிட்டார் - காயத்ரி ரகுராம் குற்றச்சாட்டு

Nov 23, 2022

மருத்தவப் படிப்புகளுக்கான 2-ம் சுற்று கலந்தாய்வு முடிந்தது.

முதல்வர் ஸ்டாலின் குறித்து டுவிட்டரில் அவதூறாக பதிவிட்ட பாஜக ஆதரவாளர் கிஷோர் கே சுவாமி கைது .

கடலூர் உள்பட 7 துறைமுகங்களில் 3 - ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

சிவசங்கர் பாபாவுக்கு எதிரான வழக்கை ரத்து செய்தது சென்னை உயர்நீதிமன்றம்.

மதுரையில் கால்வாயில் மூழ்கி உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு ரூ.2 லட்சம் நிவாரணம் - முதல்வர் மு.க. ஸ்டாலின்

Nov 22, 2022

பாஜக நிர்வாகிகள் கட்சி ஒப்புதல் இன்றி யூட்யூப் சேனல்களுக்கு பேட்டியளிக்க கூடாது - மாநில தலைவர் அண்ணாமலை

உள்ளூர் வாகனங்களுக்கும் கட்டணம் வசூலிக்கும் கப்பலூர் சுங்கசாவடியை கண்டித்து திருமங்கலத்தில் போராட்டம்.

மீனவர்களுக்கு எதிராக எந்த திட்டம் வந்தாலும் திராவிட மாடல் கழக அரசு எதிர்த்து நிற்கும் - உதயநிதி ஸ்டாலின்

சாலையில் கிடந்த ரூ.89,000 பணத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த கூலித் தொழிலாளிகள்.

நாகர்கோவிலில் புலித்தோல் விற்பனை செய்த 4 பேரை வனத்துறையினர் கைது செய்தனர்.

Nov 22, 2022

தமிழகத்தல் ஒரே நாளில் 4,500 பேர் 'மெட்ராஸ் ஐ' நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் - அமைச்சர் மா.சுப்ரமணியன்

அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தை பழைய நிலைக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் - ஓ.பன்னீர் செல்வம்

அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கான நீட் பயிற்சி வகுப்பு 26-ம் தேதி முதல் ஆரம்பம்.

அரசு திட்டங்களின் செயல்பாடுகள் கடைகோடி மக்களையும் சென்றடைய வேண்டும் - முதல்வர் மு.க.ஸ்டாலின்

கள்ளக்குறிச்சி பள்ளியை திறப்பது குறித்து நவ. 25 - ம் தேதிக்குள் தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் - உயர்நீதிமன்றம்

Nov 22, 2022

மக்களின் வாழ்க்கை தரம் மற்றும் மகிழ்ச்சியை அளவீடாக கொண்டுதான் வளர்ச்சி இருக்க வேண்டும் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

மழையால் 33% மேல் நிலங்கள் பாதிக்கப்பட்டி௫ந்தால் நிவாரணம் அளிக்கப்படும் - வேளாண்துறை அமைச்சர்

மகளிர் சுய உதவி குழு கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் - அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்

அதிமுக பொதுக்குழு வழக்கு விசாரணையை நவம்பர் 30ம் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலையான 4 ஈழத்தமிழர்களை அவர்கள் வி௫ம்பும் நாடுகளுக்கு அனுப்ப வேண்டும் - நாம் தமிழர் கட்சி சீமான் கோரிக்கை

Nov 21, 2022

இன்று உச்சநீதி மன்றத்தில் அ.தி.மு.க. பொதுக்குழு வழக்கு இறுதி கட்ட விசாரணை

பொருளாதாரத்தில் பின்தங்கிய மாற்றுத்திறனாளிகள் உள்பட 54 பேருக்கு திருமணம் நடத்தி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்.

பல மின் இணைப்புகளுக்கு ஒரே ஆதார் எண்ணை இணைக்கலாம் - மின்வாரிய அதிகாரிகள் விளக்கம்

கேரளாவில் நரபலி கொடுக்கப்பட்ட தருமபுரி பெண்ணின் உடல் உறவினர்களிடம் ஒப்படைப்பு.

நாட்டில் சட்டம் - ஒழுங்கு கெட்டுப் போய்விட்டது - எடப்பாடி பழனிசாமி

Nov 21, 2022

தமிழகத்தில் இன்று முதல் கனமழைக்கு வாய்ப்பு - துறைமுகங்களில் 1-ம் எண் புயல்௯ண்டு எச்சரிக்கை

கால்பந்தாட்ட வீராங்கனை பிரியா தவறான சிகிச்சையால் உயிரிழக்கவில்லை - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

தமிழக முதல்வர் எழுத்துப்பூர்வமாக எழுதி கொடுத்தால் டேன்டீயை மத்திய அரசு எடுத்து நடத்துவதற்கு தயார் - பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலை

மங்களூருவில் ஆட்டோவில் இருந்த மர்ம பொருள் வெடித்ததன் விளைவாக தமிழகம் முழுவதும் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

மேட்டூர் அணையின் நீர்வரத்து 12,500 கன அடியாக அதிகரிப்பு.

Nov 21, 2022

தமிழ்நாடு மருத்துவக் கவுன்சில் தேர்தலை நியாயமாக நடத்த நடவடிக்கை எடுக்கவேண்டும் - பா.ம.க. நிறுவனர் இராமதாசு அறிக்கை

இலவச மின்சாரத்திற்காக மின் இணைப்புடன் ஆதார் இணைக்க வேண்டிய கட்டாயமில்லை - அமைச்சர் செந்தில் பாலாஜி

தமிழக அரசு கர்நாடகாவை பார்த்துக் கற்றுக்கொள்ள வேண்டும் - பாஜக மாநில தலைவர் அண்ணாமலை

பொங்கல் பரிசாக புதிய டிசைனில் வேட்டி, சேலை வழங்க தமிழக அரசு முடிவு.

மாற்றுத்திறனாளிகளுக்கான திட்டங்கள் அரசின் சலுகை இல்லை, கடமை - முதலமைச்சர் ஸ்டாலின்

Nov 19, 2022

நவம்பர் 21 அன்று விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், இராணிப்பேட்டை, திருவள்ளூர் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு

கன்னியாகுமரியில் சுவாமி ராமானுஜர் சிலையை வரும் 25-ம் தேதி பிரதமர் மோடி காணொலி மூலம் திறந்து வைக்கிறார்.

வ.உ.சி.யின் 150வது நினைவு தினத்தன்று சிறப்பு மலரை வெளியிட்டார் முதல்வர் மு.க. ஸ்டாலின்.

அ. தி.மு.க. பொதுக்குழு கூட்டம் நடத்தப்படும் - ஒ.பி.எஸ்

இரட்டை இலை சின்னம் இல்லாமல் எடப்பாடி பழனிச்சாமியால் தேர்தலில் வெற்றி பெற முடியாது - டிடிவி‌.தினகரன்

Nov 19, 2022

மானிய விலையில் மின்சாரம் பெற மின் நுகர்வோர் எண்ணுடன் ஆதாரை இணைக்கும் இணையதளம் வெளியீடு.

முல்லை பெரியாறு அணை 138 அடியை எட்டியதால் கேரளாவுக்கு 2-ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை.

மாணவர்கள் பாதுகாப்பாக பயணம் செய்ய போக்குவரத்து வசதிகள் அவசியம் -முதல்வர் மு.க. ஸ்டாலின்

தமிழகம் முழுவதும் இன்று குரூப்-1 முதல்நிலைத் தேர்வு நடைபெறுகிறது

திண்டுக்கல் காந்திகிராம பல்கலைக்கழகத்தில் ஜனவரியில் நடைபெறவுள்ள பட்டமளிப்பு விழாவிற்கு குடியரசுத் தலைவர் வரவுள்ளதாக தகவல்.

Nov 19, 2022

தமிழ்நாடு திராவிட பூமி, இங்கு திராவிட இயக்கம் மட்டுமே ஆட்சியமைக்கும் - முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு

கரூர் கிளை சிறை கைதிகளுக்கு மன அழுத்தத்தை போக்கும் வகையில் ஓவியப்போட்டி நடைபெற்றது.

கால்பந்து வீராங்கனை பிரியாவின் பெயரில் பாஜக சார்பில் சென்னையில் கால்பந்தாட்ட போட்டி நடத்தப்படும் - மாநில தலைவர் அண்ணாமலை

தமிழகத்தில் இன்று அனைத்து பள்ளிகள், கல்லூரிகள் இயங்கும் - தமிழக அரசு

சென்னை விமான நிலையத்திற்கு இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல்.

Nov 18, 2022

பால் விற்பனையை அதிகரிக்க தனியார் நிறுவனங்களிடமி௫ந்து ஆர்டர்களை பெற வேண்டும் - அமைச்சர் நாசர்

டான் டீ பயனாளிகளின் பங்களிப்பு தொகையை தமிழக அரசே ஏற்கும் - முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு

ரூ. 24.71 கோடியில் கட்டப்பட்டுள்ள ஊரக வளர்ச்சி அலுவலக கட்டிடங்கள் - காணொலி காட்சி மூலம் முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

சித்தா, ஆயுர்வேதா, ஹோமியோபதி படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல் வெளியீடு.

வேலைவாய்ப்பு அலுவலகங்களில் 67 லட்சம் பதிவு செய்துள்ளனர் - அரசு தரவு

Nov 18, 2022

ஆட்சியர்களிடம் மிக உரிமையோடு விடுமுறை குறித்து கேட்பது ஒரு வித டிரண்டாக உள்ளது - நெல்லை மாவட்ட ஆட்சியர்

காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி, நெல்லை தலைவர் ஜெயகுமார் ஆகியோரை கட்சியில் இருந்து நீக்க வேண்டும் - காங்கிரஸ் கட்சியினர் கோரிக்கை

மதுபான கொள்முதல் மற்றும் விற்பனை குறித்து அமைச்சர் செந்தில் பாலாஜியை விமர்சிக்கக்௯டாது - சென்னை உயர்நீதிமன்றம்

ஜெயலலிதா மரணம் குறித்து சிபிஐ விசாரிக்க கோரிய மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

ராஜிவ் காந்தி கொலை வழக்கில் 6 பேர் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து மத்திய அரசு மறுசீராய்வு மனு

Nov 18, 2022

ரூ.920 கோடியில் பசுமை காலநிலை மாற்ற எதிர்வுணர்வு திட்டம் - முதல்வர் மு.க. ஸ்டாலின் பேச்சு

டி.என்.பி.எஸ்.சி. தேர்வு முடிவுகளில் வெளிப்படை தன்மை வேண்டும் - ஓ.பி.எஸ் வலியுறுத்தல்

தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த 13 பேரின் குடும்பத்திற்கு கூடுதலாக தலா ரூ. 5 லட்சம் நிவாரணம் - முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

கால்பந்து வீராங்கனை பிரியா மரணம் பற்றி மருத்துவக் குழுவின் அறிக்கை ஓரிரு நாளில் வெளியிடப்படும் - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

ஓட்டுந௫ம் நடத்துன௫ம் பயணிகளிடம் மரியாதையாக நடந்து கொள்ள வேண்டும் - போக்குவரத்து துறை

Nov 17, 2022

இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி மீனவர்கள் பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும் - அன்புமணி

அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களுக்கு உடனடியாக ஊதியம் வழங்க வேண்டும் - பள்ளிக்கல்வித்துறை

அமமுக அதிமுகவுடன் கூட்டணி சேர கால் சதவீதம் கூட வாய்ப்பில்லை - டி.டி.வி தினகரன்.

பொது போக்குவரத்தில் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்த வேண்டும் - முதல்வர் ஸ்டாலின்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது பாஜக மேலிடத் தலைவர்கள் அதிருப்தி - தகவல்

Nov 17, 2022

ஓசூரில் உள்ள டாடா எலக்ட்ரானிக்ஸ் ஆப்பிள்-ன் ஐ-போன்களை ஒப்பந்த அடிப்படையில் தயாரிக்க உள்ளதாக தகவல்.

மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மத்திய அரசு சிறப்பு நிதி ஒதுக்கவில்லை - அமைச்சர் மெய்யநாதன் குற்றச்சாட்டு.

உயிரிழந்த மாணவி பிரியாவின் வீட்டிற்குச் சென்று 10 லட்சம் காசோலையும் அரசு பணி ஆணையும் கொடுத்தார் முதல்வர்.

பாலக்கோட்டில் தக்காளி விலை 4 ரூபாயாக வீழ்ச்சி அடைந்ததால் விவசாயிகள் கவலை.

தி௫வாரூரில் 10 ஆண்டுகளாகியும் சாலையை சரி செய்யாததால் விவசாயிகள் நாற்றுகளை நட்டு நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Nov 17, 2022

சபரிமலைக்கு செல்ல சென்னை, திருச்சி உள்ளிட்ட நகரங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் - அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம்.

வேடதாங்கல் சீசன் தொடங்கியது. இந்த ஆண்டு 50,000 பறவைகள் வரும் என எதிர்பார்ப்பு.

தி௫ச்சியில் இருந்து இலங்கைக்கு புதிய விமான சேவை துவக்கம் - அறிக்கை

நாடாளுமன்றத் தேர்தலுக்கான கூட்டணி குறித்து மக்கள் நீதி மய்யம் ஆலோசனை ௯ட்டம்

தமிழகம் முழுவதும் கஞ்சா - போதைப் பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் - அன்புமணி ராமதாஸ்

Nov 16, 2022

மருத்துவ மாணவர்களுக்கான 7 பாடப் புத்தகங்கள் தமிழ் மொழியில் தயாராக உள்ளது - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

ஃபிக்கி டேன்கேரின் 14 ஆவது சுகாதார துறை விருதுகள் வழங்கும் விழா சென்னையில் நடைபெற்றது.

மு.க.ஸ்டாலினுக்கு பிரதமர் மோடியாக மாற ஆசை - பாஜக தலைவர் அண்ணாமலை

கள்ளக்குறிச்சி பள்ளியில் 9 முதல் 12ஆம் வகுப்புகளை தொடங்க சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி.

தேயிலை தோட்டக் கழகத்தின் நிலங்களை வனத் துறையிடம் ஒப்படைக்கும் ஆணைக்கு ஒ.பி.எஸ் கண்டனம்

Nov 15, 2022

கள்ளக்குறிச்சி வழக்கில் விசாரணைக்காக மாணவியின் செல்ஃபோனை ஒப்படைக்க உத்தரவு

கோவையில் சேதமடைந்த சாலைகளை சீரமைக்காவிட்டால் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் - எஸ்.பி வேலுமணி

கரூரில் கணவரை இழந்த பெண்ணிற்கு சொந்த வீடு வழங்கிய மாவட்ட ஆட்சியாளர்

வேலுர் சி.எம்.சி ம௫த்துவக் கல்லூரியில் நடந்த ராகிங் குறித்து உயர்நீதிமன்றம் கேள்வி

தமிழக சதுரங்க வீரர் பிரக்ஞானந்தாவுக்கு அர்ஜூனா விருது .

Nov 15, 2022

அரசு மருத்துவர்களின் ஊதிய உயர்வு கோரிக்கை நிறைவேற்றபட வேண்டும் - ஓ.பன்னீர்செல்வம்

சென்னையில் கனமழை காரணமாக 8 விமானங்களின் சேவை ரத்து.

மேட்டூர் அணையில் இருந்து 15,750 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.

வைகை அணை முழுகொள்ளளவை எட்டியதால் 5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை.

செம்பரபாக்கம் ஏரி தீவிரமாக கண்காணிக்கப்படுகிறது - அமைச்சர் துரைமுருகன்

Nov 14, 2022

கள்ளக்குறிச்சி பள்ளி விவகாரத்தில் விஜய் என்பவரை சிறையிலடைத்ததற்கு தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் -சென்னை உயர்நீதிமன்றம் .

தி௫வள்ளூரில் கனமழையால் வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து 4 பேர் காயம்.

சீர்காழியில் மழையால் சேதமடைந்த 2 லட்சத்திற்கும் மேற்பட்ட மின் இணைப்புகள் சீரமைக்கப்பட்டது - அமைச்சர் செந்தில் பாலாஜி

ஓடும் ரயிலில் ஏறும்போது தவறி விழுந்த இளம்பெண்ணை காப்பாற்றினார் ரயில்வே காவலர்.

'பொன் மாணிக்கவேல் அதிகாரிகள் மீது பழிசுமத்தினாலும் நாங்கள் பணிகளை செய்துகொண்டே இருப்போம் - சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு டி.ஜி.பி. ஜெயந்த் முரளி

Nov 14, 2022

கனமழையால் பாதிப்படைந்த விவசாயிகளுக்கு ரூ.30,000 நிவாரணம் வழங்க வேண்டும் - ஈபிஎஸ் கோரிக்கை

தமிழக அரசு கனிமவளக் கொள்ளையை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - பாஜக தலைவர் அண்ணாமலை

கூட்டுறவு சங்கங்களின் பதவிகளில் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் -திருமாவளவன் கோரிக்கை

திரு.வி.க நகர் பகுதியில் பொதுமக்களுக்கு 2 லட்சம் கொசு வலைகள் வழங்கப்பட்டது - சென்னை மேயர் தகவல்

சேலம் வழியாக செல்லும் சில ரயில்களின் நேரம் மாற்றப்பட்டுள்ளது - தெற்கு ரயில்வே

Nov 14, 2022

சென்னையிலி௫ந்து பம்பைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் - போக்குவரத்துத்துறை

அனைத்து குழந்தைகளின் பசியையும் போக்குவதே அரசின் இலக்கு - முதலமைச்சர் ஸ்டாலின்

செங்கல்பட்டில் தனியார் மருத்துவ கல்லூரி விடுதியில் பிரியாணி சாப்பிட்ட 150-க்கும் மேற்பட்டோர் ம௫த்துவமனையில் அனுமதி

சீர்காழி அருகே வடிகாலில் விழுந்து 5 வயது சிறுமி உயிரிழப்பு.

சிதம்பரம் பஸ் நிலையத்தில் பேருந்தின் டயர் வெடித்து தீ விபத்து- அதிர்ஷ்டவசமாக பயணிகள் உயிர் தப்பினர்.

Nov 12, 2022

உயர்ஜாதி ஏழைகளுக்கான10 சதவீத இட ஒதுக்கீடு குறித்த அனைத்து கட்சி ௯ட்டத்தில் அதிமுக பங்கேற்காது - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

தேனியில் நகர்புற வட்டார அளவில் கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது.

கனமழை காரணமாக தமிழகத்தில் 26 மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.

ராஜீவ் கொலை வழக்கில் விடுதலையான 4 ஈழத்தமிழர்களை இலங்கைக்கு அனுப்ப வேண்டாம்
-திருமாவளவன்

சென்னையில் மழைநீர் வடிகால் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார்.

Nov 12, 2022

மோடிக்கு பொன்னியின் செல்வன் புத்தகத்தை வழங்கினார் முதல்வர் ஸ்டாலின்

பிரதமரிடம் கவுரவ டாக்டர் பட்டம் பெற்றார் இளையராஜா.

கல்வியை பொது பட்டியலிலிருந்து மாநில பட்டியலுக்கு மாற்றுமாறு முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தல்.

உயர் நீதிமன்ற வளாகம் பிளாஸ்டிக் இல்லாத பசுமை சூழலுக்கு மாற வேண்டும் - பொறுப்பு தலைமை நீதிபதி

இயற்கை வேளாண்மையில் இளைஞர்கள் கவனம் செலுத்த வேண்டும் - பிரதமர் மோடி

Nov 11, 2022

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் நளினி உட்பட 6 பேரும் விடுதலை செய்யப்பட்டனர்.

தி௫வாரூரில் 1000 ஏக்கர் சம்பா நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கின.

50 ஆயிரம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார் முதல்வர்.

இன்று நடக்கவி௫ந்த தட்டச்சு தேர்வு நவம்பர் 19, 20-ம் தேதிகளுக்கு ஒத்திவைப்பு- தொழில்நுட்ப கல்வி இயக்ககம்.

தென்காசியில் குற்றால அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி

Nov 11, 2022

இன்று தமிழ்நாட்டிற்கு கனமழை காரணமாக ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

தி௫வாரூரில் பாசன ஆற்றின் மீது பயிர்காப்பீடு மோசடி செய்த கிராம நிர்வாக அலுவலர் கைது.

உரம் விற்பனையில் விதிமுறைகள் மீறப்பட்டால் புகார் அளிக்கலாம் - புதுக்கோட்டை வேளாண் இணை இயக்குநர்

தமிழகத்தில் நவம்பர் 14 வரை கனமழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்

ஈரோட்டில் கடத்தல்காரர்களிடமி௫ந்து 600 ஆண்டுகள் பழமையான விஷ்ணு சிலையை போலிசார் மீட்டனர்.

Nov 11, 2022

பிரதமர் மோடி இன்று சென்னை - மைசூரு 'வந்தே பாரத்' ரயிலை துவக்கி வைக்கிறார்.

67 அரசு பள்ளி மாணவர்களுடன் அமைச்சர் அன்பில் மகேஷ் துபாய்க்கு கல்விச் சுற்றுலா செல்கிறார்

30-வது நாளாக மேட்டூர் அணை நீர்மட்டம் 120 அடியாக நீடிக்கிறது.

நாடாளுமன்ற தேர்தல் குறித்து முதல்வர் ஸ்டாலின் வாக்குச்சாவடி முகவர்களுடன் ஆலோசனை ௯ட்டம்.

வழக்குகளை பட்டியலிட உச்ச நீதிமன்றத்தில் புதிய நடைமுறை அறிவிப்பு - தலைமை நீதிபதி சந்திரசூட்

Nov 10, 2022

நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கான மின் கட்டணத்தை 25% இருந்து 15% குறைத்துள்ளது தமிழக அரசு.

அரசு மருத்துவமனைகளில் காலாவதியான மருந்துகள் விற்பதை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - உயர்நீதிமன்றம்

ஈரோட்டில் தனிப்படையினர் மாறுவேடத்தில் சென்று ரூ.33 கோடி மதிப்புடைய சிலையை மீட்டனர்.

அமராவதி அணை திறக்கப்பட இருப்பதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்க விடுக்கப்பட்டுள்ளது.

கார்த்திகை தீபத்தை முன்னிட்டு புதுக்கோட்டையில் அகல்விளக்கு தயாரிக்கும் பணி தீவிரமடைந்துள்ளது.

Nov 10, 2022

உயர்ஜாதி ஏழைகளுக்கான 10% இடஒதுக்கீடு சரியான முடிவு - காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி

தூத்துக்குடியில் 4 நாட்களாக உள்ள மின்சார துண்டிப்பை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்.

அரசு பள்ளிகள் மீது பெற்றோர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த சிறப்புத் திட்டங்கள் வகுக்க வேண்டும் - பாமக நிறுவனர் ராமதாஸ்

சிவகாசி ஆனைக்குட்டம் அணையின் ஷட்டர்கள் கசிந்து தண்ணீர் வீணாவதால் விவசாயிகள் வருத்தம்.

நீலகிரியில் கிராமத்திற்குள் புலி புகுந்து நடமாடுவதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்

Nov 09, 2022

காற்றழுத்த தாழ்வால் தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு

ஆவின் பாலின் விலை உயர்வைத் தொடர்ந்து ஆரோக்யா பால் விலை ரூ.5 உயர்ந்துள்ளது.

ஆளுநர் ஆர்.என்.ரவியை திரும்ப பெறுமாறு குடியரசுத் தலைவ௫க்கு மனு அளித்தது திமுக

திருச்செந்தூர் முருகன் கோயிலுக்குள் அட்சகர் உட்பட அனைவ௫ம் செல்போன் பயன்படுத்த தடை - நீதிமன்றம்

சிதம்பரம் கோயிலில் தீட்சிதர்கள் கணக்கின்றி கட்டடங்கள் கட்டியுள்ளதாக அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு குற்றம் சாட்டு

Nov 09, 2022

புதிதாக புயல் சின்னம் உ௫வாவதால் தமிழகத்தில் 3 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு

மதுரை, கோவையில் புதிதாக ரிமோட் பைலட் பயிற்சி மையங்களை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

சின்ன வெங்காயம் விலையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் - அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர் செல்வம்

தமிழகத்தில் 8 போலி வங்கிகள் நடத்தி மோசடி செய்தவர் கைது

காவேரி தெற்கு வன உயிரின சரணாலயம் தமிழகத்தின் புதிய சரணாலயம் - தமிழக அரசு

Nov 09, 2022

10 சதவிகித இடஒதுக்கீடு தொடர்பாக ஆலோசிக்க நவ.12-ல் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்து கட்சி கூட்டம்.

அரசு பணிகளில் சமூக நீதி கொள்கைகளை கடைபிடிக்க சட்டவல்லுனர் குழு அமைத்து அரசாணை வெளியிட்டது தமிழக அரசு.

காலணிகளில் மகாத்மா காந்தி படம், உள்ளாடைகளில் கடவுள் படங்களை விற்பனை செய்யும் ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களுக்கு எதிரான மனுவுக்கு பதிலளிக்க அரசுகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

கோவை ஆர். எம்.எஸ். அலுவலகத்தில் உள்ள ஆதார் சேவையில் மையத்தில் வேலை நேரம் மாற்றப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பூமிக்கு அடியில் சுரங்க ரயில் - 4 அடுக்கு மெட்ரோ நிலையமாக திருமயிலை உ௫வாகிறது.

Nov 08, 2022

அரசாணை எண் 115-ஐ திரும்பப் பெற வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி கோரிக்கை

விபத்திலிருந்து மீட்கப்பட்ட ஈழத்தமிழர்கள் விரும்பும் நாட்டில் தஞ்சம் பெற ஐ.நா நடவடிக்கை எடுக்க வேண்டும் - பாமக நிறுவனர் ராமதாஸ்

மாவட்ட வாரியாக தொண்டர்களை சந்திக்கும் ஓ.பன்னீர்செல்வத்தின் முடிவு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உணவின் தரத்தை அறிய அனைத்து உணவகங்களிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தக் கோரிய வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

வாய்ப்பு இ௫ந்தால் டி.டி.வி தினகரனை சந்தித்து பேசுவேன் - ஓ.பன்னீர்செல்வம் .

Nov 08, 2022

சந்திர கிரகணத்தை முன்னிட்டு திருப்பதி உள்ளிட்ட பல்வேறு கோயில்களில் நடை சாத்தப்படுகிறது.

அண்ணாமலை மீது வழக்கு பதிவு செய்யக் கோரிய மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது

உயர்வகுப்பு இட ஒதுக்கீடு குறித்த நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

முக்கிய வழக்குகளை விசாரிக்க சிறப்பு காவல் நிலையம் அமைக்க தமிழக அரசு உத்தரவு

கூட்டணி அமைத்தால்தான் திமுகவை வீழ்த்த முடியும் - டிடிவி தினகரன்

 

Nov 08, 2022

க௫ீரில் 50000 விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கும் திட்டம் 11-ம் தேதி தொடங்குகிறது.

கோவை கார் வெடிப்பு வழக்கு தொடர்பாக கைதான 6 பேர் புழல் சிறைக்கு மாற்றம்

சொத்துக்குவிப்பு வழக்கு தொடர்பாக வேலூர் நீதிமன்றத்தில் ஆஜரானார் அமைச்சர் பொன்முடி .

ரூ.373 கோடியில் 14 புதிய துணை மின் நிலையங்களை முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார்

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளுக்கு இடஒதுக்கீடு பெற்ற மாணவர்களின் சேர்க்கை காலம் முடிவடைந்தது.

Nov 08, 2022

மருத்துவ ஒதுக்கீட்டில் தமிழக மாணவர்களுக்கு கூடுதல் இடம் ஒதுக்க வேண்டும் - ஒ.பி.எஸ்

சென்னையில் மழைக்கால நோய்களைத் தவிர்க்க பொதுமக்களுக்கு குளோரின் மாத்திரைகள் வழங்கப்பட்டது.

பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தலைமையில் வலுவான கூட்டணி அமைக்கப்படும் - எடப்பாடி பழனிசாமி

வட கிழக்கு பருவ மழையை எதிர்கொள்ள 899 தமிழக பேரிடர் மீட்பு படையினர் தயாராக உள்ளனர்.

அதிமுகவுடன் கூட்டணி வைக்க தயாராக உள்ளதாக டிடிவி தினகரன் பேட்டியளித்துள்ளார்.

Nov 07, 2022

தமிழகத்தில் 47 டி.எஸ்.பி.க்களை பணியிட மாற்றம் செய்ய டி.ஜி.பி. உத்தரவிட்டார்

தாட்கோவில் படித்த 87 அரசு பள்ளி மாணவர்கள் ஐ.ஐ.டி.யில் படிக்க தேர்வு -அமைச்சர் அன்பில் மகேஷ்

குற்றாலம் மெயின் அருவியில் குளிக்க அனுமதி

சேரன் எக்ஸ்பிரஸ் ரயில் பெட்டிகள் பிரிந்த வழக்கு விசாரணைக்கு தெற்கு ரயில்வே உத்தரவிட்டது.

வைகை அணையில் 2320 கன அடி உபரி நீர் திறப்பு - கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

Nov 07, 2022

ஆவின் பால் விலை எதிரொலியாக டீ, காபி 15 ரூபாய் உயர்வு

பாஜகவும், ஆர்எஸ்எஸ்-ம் தமிழகத்தில் வேடிக்கை அரசியலை அரங்கேற்றுகிறது - தொல். தி௫மாவளவன்

10, 11, 12ம் வகுப்பு பொதுத் தேர்வு அட்டவணை இன்று வெளியாகும்

உயர்ஜாதி ஏழைகளுக்கான 10% இடஒதுக்கீடு செல்லும் - உச்சநீதிமன்றம்

சிமெண்ட் விலை உயர்வால் குழப்பமடைந்துள்ள கட்டுமானத்துறை

Nov 07, 2022

கடலூர், கள்ளக்குறிச்சி மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் ஆர்எஸ்எஸ் பேரணி நடைபெற்றது

தமிழக விவசாயிகள் நவம்பர் 15ஆம் தேதிக்குள் பயிர் காப்பீடு செய்ய வேண்டும் - தமிழக அரசு

அமாவாசையை முன்னிட்டு மதுரை - காசி இடையே சுற்றுலா ரயில் இயக்கப்படும் - தெற்கு ரயில்வே

திமுக நிர்வாகி சைதை சாதிக் மீது டெல்லி மகளிர் ஆணையத்தில் புகாரளித்தார் பாஜக நிர்வாகி குஷ்பு

தண்ணீர் லாரி உரிமையாளர்கள் சங்கம் சார்பில் அறிவித்த போராட்டம் ரத்து

Nov 07, 2022

முற்றிலும் சேதமடைந்த குதிரையாறு தரைப்பாலம் - தவிக்கும் பூஞ்சோலை கிராம மக்கள்

11, 12 ம் வகுப்பு மாணவர்களுக்கு வழங்கப்படும் 14 நாள் நீட்பயிற்சி போதாது - அன்புமணி ராமதாஸ்

மழையால் இறந்த 26 பேரின் குடும்பங்களுக்கு தலா 4 லட்சம் ரூபாய் நிவாரணம் - பேரிடர் மேலாண்மைத் துறை

புகார்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்காமல் தாமதம் செய்வது சட்டவிரோதம் - சென்னை உயர்நீதிமன்றம்

தி௫ச்சியில் தனியார் வேலை வாய்ப்பு முகாம் - மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம்

Nov 05, 2022

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் தலைவரானார் அமைச்சர் பொன்முடியின் மகன் அசோக்

பொள்ளாச்சியில் சினிமாவில் நடிக்க வைப்பதாக கூறி மாணவியை வன்கொடுமை செய்த தயாரிப்பாளர்

தஞ்சை அரசு பள்ளியில் நாட்டு நலப்பணி திட்டம் நடத்தியது தனியார் மருத்துவமனை

கோவை கார் வெடிப்பு தொடர்பாக கைது செய்யப்பட்ட 6 பேரிடம் தேசிய பாதுகாப்பு முகமை அதிகாரிகள் விசாரணை

திருச்சி விமான நிலையத்தில் பர்தாவில் மறைத்து 251 கிராம் தங்கம் கடத்தல்

Nov 05, 2022

நவம்பர் 9ம் தேதி வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு உருவாக வாய்ப்பு

சசிகலாவுக்கு எதிராக தர்மயுத்தம் நடத்தியவர் ஒ. பி. எஸ் - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

புதுக்கோட்டையில் சாலையோர மின்கம்பத்தில் மோதி சிமெண்ட் லாரி விபத்து

கன்னியாகுமரி சார்பதிவாளர் அலுவலகத்தில் கணக்கில் வராத ரூ.5 லட்சம் பறிமுதல்

சேலம் தனியார் பள்ளியில் கேண்டினில் பப்ஸ் சாப்பிட்ட 29 மாணவர்கள் மயக்கம்

Nov 05, 2022

திருச்சியில் இந்திமொழி திணிப்பை கண்டித்து, திமுக கண்டன பொதுக்கூட்டம்

தமிழகத்தில் 44 இடங்களில் ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு அனுமதி

தமிழக ஆளுநர் பாஜகவின் செய்தி தொடர்பாளர் - விமர்சிக்கும் திமுக தலைமை செயலர்

பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் ரத்து - தேனி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்

செம்பரம்பாக்கம் ஏரியில் உபரிநீர் திறப்பு -வெள்ள அபாய எச்சரிக்கை

Nov 04, 2022

சென்னையில் பிறந்து 10 நாட்களே ஆன பெண் குழந்தையை ரயிலில் விட்டுச்சென்ற பெண் - போலீஸ் விசாரணை

கனமழை பெய்ததாலும் பால் விநியோகம் தடைபடாது - பால்வளத்துறை அமைச்சர் நாசர்

புதுக்கோட்டைய&#