ஒரே நேரத்தில் பாராளுமன்ற மற்றும் மாநில சட்டசபைகளுக்கு தேர்தல்.

September 1, 2023

இந்திய அரசியலமைப்புச் சட்டப்படி பாராளுமன்றத்திற்கும், மாநில சட்டசபைகளுக்கும் ஐந்து ஆண்டுகளுக்கு தேர்தல் நடைபெற்ற வருகிறது. இந்தியாவில் 1967 ஆம் ஆண்டு வரை பாராளுமன்றத்திற்கு மாநில சட்டசபைகளுக்கும் ஒரே காலகட்டத்தில் தேர்தல் நடத்தப்பட்டு வந்தன. இதனால் தனித்தனி தேர்தலாக நடத்தப்படும் ஏற்படும் செலவுகளை விட நிர்வாக ரீதியாக பாதிப்பை ஏற்படுவது தடுக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் சில மாநிலங்களில் ஆட்சிக் கலைப்பு, பெரும்பான்மை இல்லாமை ஆகியவற்றின் காரணங்களாக சட்டசபை தேர்தல் நடத்த வேண்டிய தேவை ஏற்பட்டது. இதனால் பாராளுமன்றத்திற்கு ஒரு […]

இந்திய அரசியலமைப்புச் சட்டப்படி பாராளுமன்றத்திற்கும், மாநில சட்டசபைகளுக்கும் ஐந்து ஆண்டுகளுக்கு தேர்தல் நடைபெற்ற வருகிறது.

இந்தியாவில் 1967 ஆம் ஆண்டு வரை பாராளுமன்றத்திற்கு மாநில சட்டசபைகளுக்கும் ஒரே காலகட்டத்தில் தேர்தல் நடத்தப்பட்டு வந்தன. இதனால் தனித்தனி தேர்தலாக நடத்தப்படும் ஏற்படும் செலவுகளை விட நிர்வாக ரீதியாக பாதிப்பை ஏற்படுவது தடுக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் சில மாநிலங்களில் ஆட்சிக் கலைப்பு, பெரும்பான்மை இல்லாமை ஆகியவற்றின் காரணங்களாக சட்டசபை தேர்தல் நடத்த வேண்டிய தேவை ஏற்பட்டது. இதனால் பாராளுமன்றத்திற்கு ஒரு முறையும், மாநில சட்டசபைகளுக்கு மாநிலங்களில் சட்டசபை காலம் முடியும் போதிலும் தேர்தல் நடத்தப்பட்டு வருகின்றன.

தற்போது நாடு முழுவதும் ஒரே தேர்தல் முறை அமல்படுத்த வேண்டும் என்று ஆணையம் கேட்டுக்கொண்டுள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலுக்கு தேர்தல் ஆணையம் மற்றும் அரசியல் கட்சிகளும் சுமார் 60,000 கோடி ரூபாய் செலவு செய்துள்ளனர். இதே போல மாநில சட்டசபை தேர்தலுக்கும் பல ஆயிரம் கோடி ரூபாய் செலவாகி வருகின்றன. இதனால் இரண்டு தேர்தலையும் ஒரே நேரத்தில் நடத்தினால் செலவுகளை கணிசமாக குறைக்க முடியும் என்பதை கருத்தில் கொண்டு அவை நடத்துவது பற்றி மத்திய அரசு ஆலோசித்து வருகிறது.
இதனை அடுத்து 2024 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலும், மாநில சட்டசபைக்கான தேர்தலும் ஒரே நேரத்தில் நடத்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டு அது வெளியிடப்பட்டுள்ளது. இந்த குழுவுக்கு முன்னால் ஜனாதிபதி ராம் நாத் கோவிந்த் தலைவராக இருப்பார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வுகளின் கருத்துகள் மத்திய அரசிடம் அறிக்கையாக தாக்கல் செய்யப்பட்ட பின்பு ஒரே நாடு ஒரே தேர்தல் விவகாரத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு ஒரே நேரத்தில் ஒரே நேரத்தில் இரண்டு தேர்வுகளையும் நடத்தினால் அரசியலமைப்பு சட்டங்கள் பல மாற்றங்களை கொண்டுவர வேண்டியிருக்கும் நிலை உருவாகும். இதனை எதிர்கட்சிகள் எதிர்த்து வருகின்றன.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu