ஓஎன்ஜிசி நிறுவனத்தின் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலாண்டு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, நிறுவனத்தின் லாபத்தில் 34% இழப்பு பதிவு செய்யப்பட்டுள்ளது. எண்ணெய் விலை குறைவு மற்றும் எண்ணெய் உற்பத்தியில் ஏற்பட்ட சரிவு ஆகியவை காரணமாக இந்த இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஓஎன்ஜிசி நிறுவனத்தின் மொத்த வருவாய் 20% இழப்பை பதிவு செய்துள்ளது.
ஓஎன்ஜிசி நிறுவனத்தின் நிகர லாபம் 10015 கோடி ஆகவும், வருவாய் 33814 கோடியாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், ஓஎன்ஜிசியின் கச்சா எண்ணெய் தயாரிப்பு 3.2% சரிவடைந்து, 4.6 மில்லியன் டன் அளவில் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், எரிவாயு வெளியேற்றம் 3.3% சரிந்து, 5.04 பில்லியன் கியூபிக் மீட்டர் அளவில் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால், நிறுவனத்தின் இந்த சரிவு தற்காலிகமானது எனவும், விரைவில் நிறுவனத்தின் இதர கிணறுகளில் உற்பத்தி தொடங்கப்பட்டால் லாபம் உயரும் எனவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.