இந்துக்களின் கோவில்களில் இந்துக்களுக்கு மட்டுமே பதவிகள் அளிக்கப்பட வேண்டுமென முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு கூறியுள்ளார்.
முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு ஆந்திர மாநிலம் அமராவதியில் பேட்டியளித்தார். அதில் மத மரபுகளை அனைவரும் மதிக்க வேண்டும் என்றார். மேலும் கோவில்களின் பழக்கவழக்கங்களை காப்பாற்ற வேண்டும் என்றும் கூறினார். அதேபோல் இந்துக்களின் கோவில்களில் இந்துக்களுக்கு மட்டுமே பதவிகள் அளிக்கப்பட வேண்டுமெனவும் கூறினார். இந்த புதிய சட்டம் மூலம், எந்த வழிபாட்டு தலங்களில் இருந்தாலும், அந்த மதத்திற்கேற்ப உள்ளவர்கள் மட்டுமே பதவியில் இருக்க வேண்டும் எனத் திட்டமிடப்பட்டுள்ளது.