ஓபன் ஏஐ உடன் ஆப்பிள் கூட்டணி - தனது நிறுவனத்தில் ஐபோன்களை தடை செய்வதாக எலான் மஸ்க் அறிவிப்பு

June 11, 2024

ஓபன் ஏஐ நிறுவனத்துடன் கூட்டணியில் இணைவதாக ஆப்பிள் நிறுவனம் அறிவித்துள்ளது. ஆப்பிள் நிறுவனத்தின் டெவலப்பர் மாநாட்டில், அந்த நிறுவனம் ஓபன் ஏஐ நிறுவனத்துடன் கூட்டணியில் இணைவதை அறிவித்துள்ளது. அதன்படி, சாட் ஜிபிடி தொழில்நுட்பம் ஐபோன்களில் கிடைக்கப்பெறும். ஆனால், இந்த அறிவிப்புக்கு எதிர்வினையாக, டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க், புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதன்படி, இனிமேல் தனது நிறுவனத்துக்குள் ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் உள்ளிட்ட சாதனங்களுக்கு தடை விதிப்பதாக கூறியுள்ளார். ஆப்பிள் தலைமை செயல் அதிகாரி டிம் குக், […]

ஓபன் ஏஐ நிறுவனத்துடன் கூட்டணியில் இணைவதாக ஆப்பிள் நிறுவனம் அறிவித்துள்ளது.

ஆப்பிள் நிறுவனத்தின் டெவலப்பர் மாநாட்டில், அந்த நிறுவனம் ஓபன் ஏஐ நிறுவனத்துடன் கூட்டணியில் இணைவதை அறிவித்துள்ளது. அதன்படி, சாட் ஜிபிடி தொழில்நுட்பம் ஐபோன்களில் கிடைக்கப்பெறும். ஆனால், இந்த அறிவிப்புக்கு எதிர்வினையாக, டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க், புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதன்படி, இனிமேல் தனது நிறுவனத்துக்குள் ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் உள்ளிட்ட சாதனங்களுக்கு தடை விதிப்பதாக கூறியுள்ளார். ஆப்பிள் தலைமை செயல் அதிகாரி டிம் குக், தனது எக்ஸ் பதிவில் ஓப்பன் ஏஐ உடனான கூட்டணி பற்றி அறிவித்தார். அதற்கான பதில் பதிவில், எலான் மஸ்க் இந்த செய்தியை பதிவிட்டுள்ளார். மேலும், ஆப்பிள் பயனர்களின் தரவுகள் ஓபன் ஏஐ நிறுவனத்துக்கு விற்கப்படுவதாக விமர்சித்துள்ளார். மேலும், இது பயனர்களின் தனி உரிமை கொள்கையை மீறுவது போன்ற செயல் என கூறியுள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu