ஓபன் ஏஐ நிறுவனம் உருவாக்கியுள்ள சாட் ஜி பி டி செயற்கை நுண்ணறிவு சாதனத்தில் பல்வேறு புதிய அம்சங்கள் புகுத்தப்பட்டு வருகின்றன. பயனர் வசதிகளை மேம்படுத்தும் நோக்கில் இந்த அம்சங்கள் கொண்டுவரப்பட்டு வருகின்றன. அந்த வகையில், புதிதாக, பதில்களை உரக்கச் சொல்லும் அம்சம் கொண்டுவரப்பட்டுள்ளது.
சாட் ஜி பி டி யில், 5 வெவ்வேறு குரல்களில் பதில்களை உரக்கச் சொல்லும் அம்சம் கொண்டுவரப்பட்டுள்ளது. புதிதாக வெளியாகி உள்ள இந்த அம்சம், கணினி, ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் தளங்களில் உள்ள சாட் ஜி பி டி வெர்ஷன்களில் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 37 மொழிகளில் இந்த சேவை வழங்கப்படுகிறது. இது பயனர்களுக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும் என கருதப்படுகிறது.