பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் 10214 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு கூடுதலாக 10214 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறுகிறது. இதற்காக சொந்த ஊர் மற்றும் வெளியூரில் தங்கி வேலை பார்க்கும் பலரும் வாக்களிக்கவும் வாக்களித்த பின்னர் மீண்டும் பயணம் செய்யவும் கூடுதல் பேருந்துகள் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி சென்னையில் 17 மற்றும் 18ஆம் தேதிகளில் 2970 சிறப்பு பேருந்துகள் என 7154 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. அதேபோன்று பிற […]

தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு கூடுதலாக 10214 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறுகிறது. இதற்காக சொந்த ஊர் மற்றும் வெளியூரில் தங்கி வேலை பார்க்கும் பலரும் வாக்களிக்கவும் வாக்களித்த பின்னர் மீண்டும் பயணம் செய்யவும் கூடுதல் பேருந்துகள் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி சென்னையில் 17 மற்றும் 18ஆம் தேதிகளில் 2970 சிறப்பு பேருந்துகள் என 7154 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. அதேபோன்று பிற இடங்களில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு இரண்டு நாட்களுக்கு 3060 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. மேலும் ஏப்ரல் 20 மற்றும் 21 ஆம் தேதிகளில் இருந்து பிற ஊர்களில் இருந்து சென்னை திரும்பும் வகையில் 1825 பேருந்துகள் என மொத்தம் 6009 பேருந்துகள் இரண்டு நாட்களுக்கு இயக்கப்பட உள்ளன. அவ்வகையில் கூடுதலாக தமிழகத்தில் 10,214 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu