ஒப்போ எப் 25 ப்ரோ கைபேசி இந்திய சந்தையில் அறிமுகம்

March 1, 2024

ஒப்போ நிறுவனத்தின் எப் 25 ப்ரோ கைப்பேசி இந்திய சந்தையில் அறிமுகமாகியுள்ளது. வரும் செவ்வாய்க்கிழமை முதல் இதன் விற்பனை தொடங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஒப்போ எப் 25 ப்ரோ கைபேசி 2 வேரியண்டுகளில் அறிமுகமாகியுள்ளது. 128 ஜிபி சேமிப்பு கொண்ட கைபேசி 23999 ரூபாய்க்கும் 256 ஜிபி சேமிப்பு கொண்ட கைபேசி 25999 ரூபாய்க்கும் விற்கப்பட உள்ளது. இந்த கைபேசி 8 ஜிபி ரேம் கொண்டுள்ளது. இதில் 64 மெகாபிக்சல் பின்பக்க கேமரா மற்றும் 32 மெகாபிக்சல் முன்பக்க […]

ஒப்போ நிறுவனத்தின் எப் 25 ப்ரோ கைப்பேசி இந்திய சந்தையில் அறிமுகமாகியுள்ளது. வரும் செவ்வாய்க்கிழமை முதல் இதன் விற்பனை தொடங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒப்போ எப் 25 ப்ரோ கைபேசி 2 வேரியண்டுகளில் அறிமுகமாகியுள்ளது. 128 ஜிபி சேமிப்பு கொண்ட கைபேசி 23999 ரூபாய்க்கும் 256 ஜிபி சேமிப்பு கொண்ட கைபேசி 25999 ரூபாய்க்கும் விற்கப்பட உள்ளது. இந்த கைபேசி 8 ஜிபி ரேம் கொண்டுள்ளது. இதில் 64 மெகாபிக்சல் பின்பக்க கேமரா மற்றும் 32 மெகாபிக்சல் முன்பக்க கேமரா இடம்பெற்றுள்ளது. ஆண்ட்ராய்டு 14 இயங்கு தளத்தில் உருவாக்கப்பட்டுள்ள இந்த கைபேசியில் 67 வாட்ஸ் அதிவேக சார்ஜிங் வசதி உள்ளது. பொதுவாகவே, ஒப்போ கைபேசிகளுக்கு இந்தியர்கள் இடையே அதிக வரவேற்பு கிடைத்து வரும் சூழலில், இந்த மாடல் கைபேசிக்கும் வரவேற்பு அதிகரிக்கும் என கருதப்படுகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu