பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்படும் நிலையில் புதிய உத்தரவுகள், பின்பற்ற வேண்டிய குறிப்புகள் குறித்து தலைமை தேர்தல் அதிகாரி கடிதம் எழுதியுள்ளார்.
பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்படும் நிலையில் புதிய உத்தரவுகள் வெளியிட, பின்பற்ற வேண்டிய நடைமுறைகல் குறித்து அனைத்து தலைமை செயலாளர்களும் பின்பற்ற வேண்டிய கடிதம் வெளியிடப்பட்டுள்ளது. அதில் தேர்தல் குறித்து அறிவிப்பு வெளியான உடன் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துவிடும். அன்றிலிருந்து புதிய திட்டங்கள் அல்லது புதிய உத்தரவுகளை வெளியிடக் கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தேர்தல் தேதி தொடர்பான அறிவிப்பு வெளியானவுடன் அரசு உத்தரவுகளின் விவரங்களை பதிவிடும் பதிவேட்டில் கடைசியாக வெளியிடப்பட்ட உத்தரவின் விவரத்தை குறிப்பிட்டு அதற்கு கீழே ஒரு கோடு வரைய வேண்டும். இதனை நகல் எடுத்து இந்திய தேர்தல் ஆணையத்தில் இரண்டு மணி நேரத்திற்குள் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் தெரிவிக்க அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.