அங்கீகரிக்கப்படாத அரசியல் விளம்பரங்களை அகற்ற உத்தரவு

March 21, 2024

அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சி விளம்பரங்களை 24 மணி நேரத்திற்குள் அகற்ற வேண்டும் என தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது. பாராளுமன்ற தேர்தல் நடத்துவது தொடர்பான அறிவிப்பு கடந்த 15ஆம் தேதி வெளியிடப்பட்டது. இதனை அடுத்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது. இருப்பினும் சில இடங்களில் விதிகள் தொடர்ந்து மீறப்படுவதாக புகார்கள் வந்துள்ளன. இது தொடர்பாக தலைமை தேர்தல் கமிஷன் மத்திய அமைச்சக செயலாளர் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் தலைமைச் செயலர்களுக்கு கடிதம் அனுப்பி உள்ளது. […]

அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சி விளம்பரங்களை 24 மணி நேரத்திற்குள் அகற்ற வேண்டும் என தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.

பாராளுமன்ற தேர்தல் நடத்துவது தொடர்பான அறிவிப்பு கடந்த 15ஆம் தேதி வெளியிடப்பட்டது. இதனை அடுத்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது. இருப்பினும் சில இடங்களில் விதிகள் தொடர்ந்து மீறப்படுவதாக புகார்கள் வந்துள்ளன. இது தொடர்பாக தலைமை தேர்தல் கமிஷன் மத்திய அமைச்சக செயலாளர் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் தலைமைச் செயலர்களுக்கு கடிதம் அனுப்பி உள்ளது. அதில் அரசு மற்றும் தனியார் கட்டடங்கள், பொது இடங்களில் இடம்பெற்றுள்ள அங்கீகரிக்கப்படாத அரசியல் விளம்பரங்கள் அகற்றப்பட வேண்டும். சுவரெழுத்துக்கள், போஸ்டர்கள், காகிதங்கள் உள்ளிட்ட எந்த வடிவிலான அரசியல் விளம்பரங்களும் எதிலும் இடம் பெறக் கூடாது. இதனை தீவிரமாக கருதி அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் அங்கீகரிக்கப்படாத அரசியல் விளம்பரங்களை உடனடியாக அகற்றி இன்று மாலை 5 மணிக்குள் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu