திருப்பதி லட்டில் விலங்கு கொழுப்பு பற்றிய விவாகரத்துக்கு பிறகு, கர்நாடக அரசு அனைத்து கோயில்களிலும் நந்தினி நெய்யை மட்டுமே பயன்படுத்துமாறு உத்தரவு பிறப்பித்துள்ளது.
கர்நாடக அரசு, கோயில்களில் நந்தினி நெய்யை மட்டுமே பயன்படுத்துமாறு உத்தரவு வழங்கியுள்ளது. திருப்பதி லட்டில் விலங்கு கொழுப்பு கலந்ததாக எழுந்த புகார்களை தொடர்ந்து, இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி அரசின் சுற்றறிக்கையில், நந்தினி பால் மற்றும் நெய் உள்ளிட்ட பொருட்களை மட்டுமே கோயில்களில் பிரசாதம் மற்றும் விளக்குகளுக்கு பயன்படுத்த வேண்டும் என கூறப்பட்டுள்ளது. முன்னதாக, நந்தினி நெய் திருப்பதி தேவஸ்தானத்திற்கு வழங்கப்பட்டு வந்தது, ஆனால் தற்போது 8 மாதங்களுக்கு முன்பு இதனை நிறுத்தியுள்ளனர் என்பதும் தெரிவிக்கப்பட்டுள்ளது.