2024 ஆஸ்கர் விருதுகளை குவித்த ஓப்பன்ஹெய்மர் மற்றும் புவர் திங்ஸ்

March 11, 2024

நிகழாண்டிற்கான ஆஸ்கர் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் ஓப்பன்ஹெய்மர் மற்றும் புவர் திங்ஸ் ஆகிய திரைப்படங்கள் அதிக ஆஸ்கர் விருதுகளை வென்று வரலாறு படைத்துள்ளன. அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 96 வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா நேற்று நடைபெற்றது. இதில், ஓப்பன்ஹெய்மர் திரைப்படம் 13 பிரிவுகளிலும், புவர் திங்ஸ் 11 பிரிவுகளிலும், கில்லர்ஸ் ஆஃப் தி ஃப்ளவர் மூன் 10 பிரிவுகளிலும், பார்பி 8 பிரிவுகளிலும் பரிந்துரைக்கப்பட்டிருந்தது. இறுதியில், ஓப்பன்ஹெய்மர் 7 விருதுகளும், புவர் […]

நிகழாண்டிற்கான ஆஸ்கர் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் ஓப்பன்ஹெய்மர் மற்றும் புவர் திங்ஸ் ஆகிய திரைப்படங்கள் அதிக ஆஸ்கர் விருதுகளை வென்று வரலாறு படைத்துள்ளன.

அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 96 வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா நேற்று நடைபெற்றது. இதில், ஓப்பன்ஹெய்மர் திரைப்படம் 13 பிரிவுகளிலும், புவர் திங்ஸ் 11 பிரிவுகளிலும், கில்லர்ஸ் ஆஃப் தி ஃப்ளவர் மூன் 10 பிரிவுகளிலும், பார்பி 8 பிரிவுகளிலும் பரிந்துரைக்கப்பட்டிருந்தது. இறுதியில், ஓப்பன்ஹெய்மர் 7 விருதுகளும், புவர் திங்ஸ் 4 விருதுகளும் வென்றுள்ளன. குறிப்பாக, சிறந்த திரைப்படம், சிறந்த இயக்குனர், சிறந்த நடிகர், சிறந்த துணை நடிகர், சிறந்த இசை, சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த படத்தொகுப்பு ஆகிய முக்கிய பிரிவுகளில் ஓப்பன்ஹெய்மர் விருது வென்றுள்ளது. அதே சமயத்தில், சிறந்த நடிகை, சிறந்த ஆடை வடிவமைப்பு, சிறந்த ஒப்பனை, சிறந்த தயாரிப்பு ஆகியவற்றிற்காக புவர் திங்ஸ் திரைப்படம் விருது பெற்றுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu