பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் பணியை தனியாருக்கு கொடுப்பதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சி மன்ற கூட்டம் மேயர் பிரியா, துணை மேயர்,ஆணையர் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. இதில் மாநகராட்சி உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவு தயாரித்து வழங்கும் பணியை தனியாருக்கு கொடுக்கவும் 358 பள்ளிகளில் படிக்கும் 65 ஆயிரம் மாணவர்களுக்கு முறையாக உணவு வழங்கவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் அதில் உணவு அளவு குறைதல், தரம் குறைந்த மூலப்பொருட்கள் மற்றும் காய்கறியை பயன்படுத்துதல் மற்றும் சமையல் கூடத்தை சுத்தமாக பராமரிக்க தவறினால் அபராதம் எனவும் இதே தவறு தொடர்ந்தால் ஒப்பந்தத்தை ரத்து செய்யவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து கிறிஸ்தவர்களின் உடலை அடக்கம் செய்ய நிர்ணயிக்கப்பட்ட 14 வருடங்கள் கால இடைவெளி திருத்தம் செய்ய அனுமதிக்கப்பட்டு தீர்மானம் உள்ளிட்ட 44 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.