சூரிய ஒளி புகாத ஆழ்கடலில் “இருண்ட ஆக்ஸிஜன்” உற்பத்தி செய்யப்படுகிறது என்பதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
கடலின் மேற்பரப்பில் இருந்து 5 கிலோமீட்டர் ஆழத்தில், சூரிய ஒளி இல்லாத பகுதிகளில், உலோக முடிச்சுகள் கடல் நீரை ஹைட்ரஜன் மற்றும் ஆக்ஸிஜனாகப் பிரிக்கின்றன. இதனால், சூரிய ஒளி இல்லாத இடங்களில் கூட ஆக்ஸிஜன் உருவாகுவதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். போதுமான மின்சாரத்துடன், பல்வேறு உலோகங்கள் அடங்கிய இந்த உலோக முடிச்சுகள், ஆழ்கடல் வாழ்வில் முக்கிய பங்காற்றுகின்றன. ஆனால், சுரங்க நிறுவனங்கள் இந்த முடிச்சுகளை சேகரிக்கத் தொடங்கினால், கடல் வாழ் உயிர்களுக்கு மிகப்பெரிய பாதிப்பு ஏற்படக்கூடும் என்று விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர். அத்துடன் அளப்பரிய அளவில் சுற்றுச்சூழல் பாதிப்புகளை ஏற்படுத்தும் என்று அச்சம் தெரிவித்துள்ளனர்.