ஆசிஃப் அலி சர்தாரியின் மகள் ஆசீபா தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல்

March 20, 2024

பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி சர்தாரின் இளைய மகள் ஆசிபா பாராளுமன்ற இடைத்தேர்தலில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். இதன் மூலம் அவர் அரசியல் பிரவேசம் செய்துள்ளார். கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற பொது தேர்தலின் போது ஆசிப் அலி என் ஏ 2007 தொகுதியில் போட்டியிட்டார். அதில் வெற்றியும் பெற்றார். தற்போது அவர் அதிபராக பதவி ஏற்றதால் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார். இதனால் அந்த தொகுதி காலியாக உள்ளது. இந்நிலையில், அவர் […]

பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி சர்தாரின் இளைய மகள் ஆசிபா பாராளுமன்ற இடைத்தேர்தலில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார்.

இதன் மூலம் அவர் அரசியல் பிரவேசம் செய்துள்ளார். கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற பொது தேர்தலின் போது ஆசிப் அலி என் ஏ 2007 தொகுதியில் போட்டியிட்டார். அதில் வெற்றியும் பெற்றார். தற்போது அவர் அதிபராக பதவி ஏற்றதால் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார். இதனால் அந்த தொகுதி காலியாக உள்ளது. இந்நிலையில், அவர் தனது இளைய மகள் ஆசிபாவை அத்தொகுதியில் நிறுத்தியுள்ளார். நேற்று சிந்து மாகாணத்தில் உள்ள நவாப்ஷாப் பகுதியில் உள்ள அலுவலகத்திற்கு சென்று வேட்பு மனுவை தாக்கல் செய்தார். சர்தாரி தன் மகள் ஆசிபாவை பாகிஸ்தான் நாட்டின் முதல் பெண்மணியாக அறிவிக்க உள்ளார் என்று கூறப்பட்டிருக்கிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu