பாகிஸ்தான் தேர்தல் ஆணையத்திற்கு எதிரான போராட்ட வழக்கில் இம்ரான்கான் விடுதலை

July 4, 2024

பாகிஸ்தான் தேர்தல் ஆணையத்திற்கு எதிரான போராட்ட வழக்கில் இம்ரான்கான் விடுதலை செய்யப்பட்டார். பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் பதவியில் இருக்கும் போது சட்டவிரோதமாக பரிசு பொருட்களை விற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக பொய்யான தகவல்கள் அளித்ததற்காக தேர்தல் ஆணையம் அவரை தேர்தலில் போட்டியிட அனுமதி மறுத்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இம்ரான் கான் மற்றும் அவருடைய கட்சியினர் போராட்டம் நடத்தினர். இதனால் இம்ரான் கான் மீது பாகிஸ்தான் அரசு வழக்கு பதிவு செய்தது. இந்த […]

பாகிஸ்தான் தேர்தல் ஆணையத்திற்கு எதிரான போராட்ட வழக்கில் இம்ரான்கான் விடுதலை செய்யப்பட்டார்.

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் பதவியில் இருக்கும் போது சட்டவிரோதமாக பரிசு பொருட்களை விற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக பொய்யான தகவல்கள் அளித்ததற்காக தேர்தல் ஆணையம் அவரை தேர்தலில் போட்டியிட அனுமதி மறுத்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இம்ரான் கான் மற்றும் அவருடைய கட்சியினர் போராட்டம் நடத்தினர். இதனால் இம்ரான் கான் மீது பாகிஸ்தான் அரசு வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கில் அவருக்கு தண்டனை வழங்கப்பட்டது.

இந்நிலையில் போராட்டம் செய்த வழக்கில் அவர் பெற்ற தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்று இம்ரான் கான் மேல்முறையீடு செய்திருந்தார். இந்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை கடந்த வாரம் நடைபெற்றது. இந்த விசாரணை முடிவில் இம்ரான் கான் இந்த வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu