சர்வதேச நாணய நிதியத்தின் கடன் ஒப்பந்தத்தின் கீழ், கடன் சுமையை குறைக்கும் நோக்கில், பாகிஸ்தான் அரசு கடும் சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளது. இதன் மூலம், 150,000 அரசுப் பணியிடங்கள் குறைக்கப்பட உள்ளன. மேலும், செயல்படாத 6 அமைச்சகங்கள் மூடப்பட்டு, 2 அமைச்சகங்கள் ஒன்றிணைக்கப்பட உள்ளன.
விவசாயம் மற்றும் ரியல் எஸ்டேட் போன்ற துறைகளில் வரிகளை அதிகரித்து, அரசின் செலவினங்களை குறைப்பதற்கு பாகிஸ்தான் அரசு ஒப்புக் கொண்டதையடுத்து, சர்வதேச நாணய நிதியம் 1 பில்லியன் அமெரிக்க டாலர்கள் கடன் வழங்கியுள்ளது. நிதி அமைச்சர் முஹம்மது ஔரங்கசீப் கூறுகையில், புதிய சீர்திருத்தங்கள் பாகிஸ்தானை IMF-ன் கடன் சுழற்சியிலிருந்து மீட்கும் என்றும், நாட்டின் பொருளாதாரம் வலுவடையும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.