இந்தியாவில் இருந்து மருந்துகள் இறக்குமதி - பாகிஸ்தான் அனுமதி

August 14, 2023

பாகிஸ்தானில் இருந்து உயிர்காக்கும் மருந்து பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் இந்தியாவில் இருந்து மருந்துகள் இறக்குமதி செய்ய பாகிஸ்தான் அரசு அனுமதித்துள்ளது. பாகிஸ்தானில் கடுமையான பொருளாதார நிதி நெருக்கடி காரணமாக அங்கு அத்தியாவசிய தேவைகளான மருந்து, உணவு, எரிபொருள் போன்றவற்றின் விலை மிகவும் உயர்ந்து உள்ளது. இந்நிலையில் சர்வதேச நாணய நிதியம் பாகிஸ்தானுக்கு மூணு மில்லியன் டாலர் கடன் உதவி வழங்க சம்மதம் தெரிவித்துள்ளது. இதனை தொடர்ந்து அங்கு உயிர் காக்கும் வகையில் உள்ள அத்தியாவசிய மருந்து […]

பாகிஸ்தானில் இருந்து உயிர்காக்கும் மருந்து பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் இந்தியாவில் இருந்து மருந்துகள் இறக்குமதி செய்ய பாகிஸ்தான் அரசு அனுமதித்துள்ளது.

பாகிஸ்தானில் கடுமையான பொருளாதார நிதி நெருக்கடி காரணமாக அங்கு அத்தியாவசிய தேவைகளான மருந்து, உணவு, எரிபொருள் போன்றவற்றின் விலை மிகவும் உயர்ந்து உள்ளது. இந்நிலையில் சர்வதேச நாணய நிதியம் பாகிஸ்தானுக்கு மூணு மில்லியன் டாலர் கடன் உதவி வழங்க சம்மதம் தெரிவித்துள்ளது.

இதனை தொடர்ந்து அங்கு உயிர் காக்கும் வகையில் உள்ள அத்தியாவசிய மருந்து பொருள்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து இந்தியாவில் இருந்து மருந்து பொருட்கள் இறக்குமதி செய்ய பாகிஸ்தான் அரசு அனுமதி வழங்கி உள்ளது. இது தொடர்பாக டி. ஆர். ஏ. பி. எனப்படும் பாகிஸ்தான் மருந்து ஒழுங்குமுறை ஆணையம், இறக்குமதி கொள்கை ஆணை 2022- யின் கீழ் இந்தியாவில் இருந்து உயிர் காக்கும் முக்கிய மருந்துகள் இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்படுகிறது. அனைத்து அத்தியாவசிய மருந்துகளும் மருத்துவமனைகள் அல்லது பொதுமக்கள் கொள்முதல் செய்வதற்கு இனி எங்கும் எந்த தடையும் இல்லை. மேலும் இறக்குமதி செய்வதற்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu