பாகிஸ்தான் அரசின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கு, இந்தியாவில் முடக்கப்பட்டுள்ளது. கடந்த 6 மாதங்களில், 2வது முறையாக பாகிஸ்தான் அரசின் கணக்கு இந்தியாவில் முடக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்திய அரசு சட்டபூர்வமாக முன்வைத்த கோரிக்கையை ஏற்று, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ட்விட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக ட்விட்டர் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நிறுவனத்தின் கோட்பாடுகளுக்கு உட்பட்டு, தகுதியான சட்டபூர்வ கோரிக்கைகளை ஏற்று, எந்த ஒரு கணக்கின் மீதும் நடவடிக்கை எடுக்க முடியும். அந்த அதிகாரத்தை பயன்படுத்தி, இந்தியாவில், பாகிஸ்தான் அரசின் ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்டுள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.