ஈரான் மீது பாகிஸ்தான் ஏவுகணை தாக்குதல் - 9 போ் பலி

January 19, 2024

ஈரானின் பயங்கரவாத அமைப்புகளின் நிலைகள் மீது பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் ஒன்பது பேர் பலியாகினர். ஈரான் மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளும் ஒருவரை ஒருவர் தாக்கி வருகின்றனர். ஈரான் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தானும் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில் ஈரானின் சிஸ்தான் மாகாணத்தில் இரு பயங்கரவாத அமைப்புகளின் மறைவிடங்கள் மீது பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியது. இதில் ஈரான் நாட்டை சேராத 9 பேர் உயிரிழந்ததாக அந்த மாகாண துணை ஆளுநர் அலிரெசா மர்கதி கூறியுள்ளார். […]

ஈரானின் பயங்கரவாத அமைப்புகளின் நிலைகள் மீது பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் ஒன்பது பேர் பலியாகினர்.

ஈரான் மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளும் ஒருவரை ஒருவர் தாக்கி வருகின்றனர். ஈரான் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தானும் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில் ஈரானின் சிஸ்தான் மாகாணத்தில் இரு பயங்கரவாத அமைப்புகளின் மறைவிடங்கள் மீது பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியது. இதில் ஈரான் நாட்டை சேராத 9 பேர் உயிரிழந்ததாக அந்த மாகாண துணை ஆளுநர் அலிரெசா மர்கதி கூறியுள்ளார். இந்த சம்பவத்துக்கு ஈரான் வெளியுறவு அமைச்சகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. முன்னதாக பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்பின் நிலைகள் மீது ஈரான் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் கொண்டு தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடியாக பாகிஸ்தான் தாக்குதல் நடத்தி வருகிறது.

இஸ்ரேல் ஹமாஸ் போர் மேலும் நாடுகளுக்கு இடையே விரிவடைவதாக பார்வையாளர்கள் கருதுகின்றனர். இதனால் மேற்கு ஆசிய பிராந்தியத்தில் அசாதாரண சூழல் நிலவி வருகிறது. சமீபத்தில் ஈராக், ஈரான், சிரியா இடையே தாக்குதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu