பாகிஸ்தானில் கடும் மழை - 39 பேர் பலி

April 17, 2024

பாகிஸ்தானில் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் 39 பேர் பலியாகி உள்ளனர். பாகிஸ்தானில் கடந்த மூன்று நாட்களாக கனமழை பெய்து வருகிறது. அதிலும் பலூசிஸ்தான், பஞ்சாப் மற்றும் கைபர் பக்துவா போன்ற பிராந்தியங்களில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக சில மாகாணங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. சாலை போக்குவரத்து துண்டிக்கப்பட்டு கடுமையாக மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் வெள்ளம், கனமழை, […]

பாகிஸ்தானில் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் 39 பேர் பலியாகி உள்ளனர்.

பாகிஸ்தானில் கடந்த மூன்று நாட்களாக கனமழை பெய்து வருகிறது. அதிலும் பலூசிஸ்தான், பஞ்சாப் மற்றும் கைபர் பக்துவா போன்ற பிராந்தியங்களில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக சில மாகாணங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. சாலை போக்குவரத்து துண்டிக்கப்பட்டு கடுமையாக மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் வெள்ளம், கனமழை, மின்னல் போன்ற பேரிடர்களால் இதுவரை 39 பேர் பலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கனமழை மேலும் சில நாட்கள் நீடிக்கலாம் என்று அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu