டாலரில் வர்த்தகம் செய்வதை குறைக்க பாகிஸ்தான் நடவடிக்கை

June 23, 2023

டாலரில் வர்த்தகம் செய்வதை குறைக்க பாகிஸ்தான் நடவடிக்கை எடுத்துள்ளது. பாகிஸ்தான், மற்ற நாடுகளுடன் அமெரிக்க டாலரை அடிப்படையாக கொண்டு வர்த்தகத்தில் ஈடுபட்டு வருகிறது. ஆனால் ரஷியாவுடன் பாகிஸ்தானின் எண்ணெய் தொடர்பான வர்த்தகம் சீன நாட்டின் நாணயமான யுவானில் உள்ளது. அதன்மூலம் ரஷியா கடந்த வாரம் பாகிஸ்தானுக்கு கச்சா எண்ணெய் வழங்கியது. அப்போது நட்பு நாணயங்களில் செலுத்திய பணம் மூலம் பாகிஸ்தானுக்கு எண்ணெய் வழங்க தொடங்கியதாக ரஷிய எரிசக்தி துறை மந்திரி நிகோலாய் ஷுல்கினோவ் கூறினார். இந்தநிலையில் ரஷியாவுடனான […]

டாலரில் வர்த்தகம் செய்வதை குறைக்க பாகிஸ்தான் நடவடிக்கை எடுத்துள்ளது.

பாகிஸ்தான், மற்ற நாடுகளுடன் அமெரிக்க டாலரை அடிப்படையாக கொண்டு வர்த்தகத்தில் ஈடுபட்டு வருகிறது. ஆனால் ரஷியாவுடன் பாகிஸ்தானின் எண்ணெய் தொடர்பான வர்த்தகம் சீன நாட்டின் நாணயமான யுவானில் உள்ளது. அதன்மூலம் ரஷியா கடந்த வாரம் பாகிஸ்தானுக்கு கச்சா எண்ணெய் வழங்கியது. அப்போது நட்பு நாணயங்களில் செலுத்திய பணம் மூலம் பாகிஸ்தானுக்கு எண்ணெய் வழங்க தொடங்கியதாக ரஷிய எரிசக்தி துறை மந்திரி நிகோலாய் ஷுல்கினோவ் கூறினார்.

இந்தநிலையில் ரஷியாவுடனான பரிவர்த்தனைகளில் பல்வேறு நாணயங்களை பயன்படுத்தவும், இரு தரப்பு வர்த்தகத்தில் டாலரின் பங்கை குறைக்கவும் பாகிஸ்தான் தயாராக உள்ளது என அந்த நாட்டின் வர்த்தக மந்திரி சையது நவீத் கமர் தெரிவித்துள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu