பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாண சட்டப்பேரவையில் பஞ்சாபி மொழியை பயன்படுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்படுவதாவது, வியாழன் அன்று சபாநாயகர் மாலிக் முகமது அகமது கான் தலைமையில் சிறப்பு சட்டப்பேரவை கூட்டம் நடைபெற்றது. அதில் ஆங்கிலம் மற்றும் உருது தவிர பஞ்சாபி, போடோஹரி, சராய்கி மற்றும் மேவதி உள்ளிட்ட மொழிகளில் சட்டப்பேரவையில் உரையாற்ற அனுமதிக்கும் சட்ட திருத்தத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது என குறிப்பிடப்பட்டிருந்தது. இதற்கு முன் ஆங்கிலம் மற்றும் உருது தவிர பிற மொழிகளை சட்டப்பேரவையில் பயன்படுத்த சபாநாயகர் அனுமதி பெற வேண்டும். பஞ்சாப் மொழியின் பாரம்பரியத்திற்கு அங்கீகாரம் அளிப்பது போன்று சட்ட திருத்தம் வலுப்படுத்தப்பட்டுள்ளது என்ற சபாநாயகர் தெரிவித்தார்.