சீனாவிடம் 1.4 பில்லியன் டாலர் கடனைப் பெற பாகிஸ்தான் கோரிக்கை விடுத்துள்ளது
பாகிஸ்தானின் பொருளாதாரம் கடுமையான நெருக்கடியில் உள்ள நிலையில், அரசாங்கம் சீனா, உலக வங்கி, ஐஎம்எஃப் போன்ற நாடுகளிடமும் தொடர்ந்து கடன் பெற முயற்சிக்கின்றது. இந்நிலையில் பாகிஸ்தான், சீனாவிடம் கூடுதல் 1.4 பில்லியன் (சுமார் ரூ.12,000 கோடி) டாலர் கடனளிக்க கோரிக்கை விடுத்துள்ளது. இதற்கு முன்பு, பாகிஸ்தான் சீனாவிடம் சுமார் ரூ.37,000 கோடி கடன் பெற்றுள்ளது.வாஷிங்டனில் நடைபெற்ற ஐஎம்எஃப், உலக வங்கி மாநாட்டில், பாகிஸ்தானின் நிதியமைச்சர் முகமது அசரங்ஷா, சீனாவின் நிதித் துறை இணையமைச்சர் லியோ மின்னை சந்தித்து, கூடுதல் கடன் கோரிக்கையை முன்வைத்துள்ளார்.