பொருளாதாரத்தை மேம்படுத்த கஞ்சாவை சட்டபூர்வமாக்கும் பாகிஸ்தான்

May 10, 2024

பொருளாதாரத்தை மேம்படுத்த கஞ்சா சாகுபடியை சட்டபூர்வமாக்க பாகிஸ்தான் அரசு முடிவு செய்துள்ளது. பாகிஸ்தானில் தற்போது பொருளாதார நெருக்கடி நிலவி வருகிறது. இதனை சமாளிக்கும் விதமாக மருத்துவ பயன்பாட்டுக்கு கஞ்சா சாகுபடி ஊக்குவிக்க சட்டபூர்வமாக அந்நாட்டு அரசு முடிவு எடுத்துள்ளது என்று கூறப்படுகிறது. கடந்த பிப்ரவரி மாதம் கஞ்சா சாகுபடி மற்றும் வர்த்தகத்தை கண்காணிக்க அரசு தனி சட்டத்தை இயற்றியது. மேலும் இதற்காக கஞ்சா கட்டுப்பாடு மற்றும் ஒழுங்குமுறை ஆணையத்தை அமைத்தது. இந்த ஆணையத்தில் 13 உறுப்பினர்கள் உள்ளனர். […]

பொருளாதாரத்தை மேம்படுத்த கஞ்சா சாகுபடியை சட்டபூர்வமாக்க பாகிஸ்தான் அரசு முடிவு செய்துள்ளது.

பாகிஸ்தானில் தற்போது பொருளாதார நெருக்கடி நிலவி வருகிறது. இதனை சமாளிக்கும் விதமாக மருத்துவ பயன்பாட்டுக்கு கஞ்சா சாகுபடி ஊக்குவிக்க சட்டபூர்வமாக அந்நாட்டு அரசு முடிவு எடுத்துள்ளது என்று கூறப்படுகிறது. கடந்த பிப்ரவரி மாதம் கஞ்சா சாகுபடி மற்றும் வர்த்தகத்தை கண்காணிக்க அரசு தனி சட்டத்தை இயற்றியது. மேலும் இதற்காக கஞ்சா கட்டுப்பாடு மற்றும் ஒழுங்குமுறை ஆணையத்தை அமைத்தது. இந்த ஆணையத்தில் 13 உறுப்பினர்கள் உள்ளனர். அவர்கள் பல்வேறு அரசு துறைகள், தனியார் துறைகள், புலனாய்வு துறைகள் போன்றவற்றில் உள்ள அதிகாரிகள் ஆவர், கடந்த 2020ல் இருந்து இந்த ஆணையத்தை அமைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு வந்தது என்று கூறப்படுகிறது.

தற்போது ஆசிய வளர்ச்சி வங்கியின் கணிப்புப்படி, பாகிஸ்தானின் பொருளாதார வளர்ச்சி மிகவும் குறைவாக உள்ளது. எனவே இந்த நடவடிக்கை மூலம் பாகிஸ்தான் தனது பொருளாதாரத்தை உயர்த்த முயற்சி செய்கிறது. ஐநா சட்டத்தின்படி கஞ்சா உற்பத்தி செய்யும் நாடு அதற்கான விநியோக சங்கலியை கண்காணிக்க ஒரு கூட்டமைப்பை உருவாக்க வேண்டும். எனவே கஞ்சாவை தவறான நோக்கத்திற்காக பயன்படுத்தினால் கடுமையான அபராதம் விதிக்கப்படும் என்று பாகிஸ்தான் அரசு அறிவித்துள்ளது. தனி நபர்களுக்கு 10 லட்சம் முதல் ஒரு கோடி என்றும், நிறுவனங்களுக்கு ஒரு கோடி முதல் இருபது கோடி என்றும் அபராதம் விதிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த விதிமுறைகளுக்கு உட்பட்டுதான் கஞ்சா வளர்ப்பதற்கான உரிமம் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu