பாகிஸ்தானில் ஓடும் ரெயிலில் தீ - 7 பயணிகள் கருகி உயிரிழப்பு

April 29, 2023

பாகிஸ்தானில் ஓடும் ரெயிலில் ஏற்பட்ட தீ விபத்தில் 3 குழந்தைகள் உள்பட 7 பேர் உயிரிழந்தனர். பாகிஸ்தானின் கராச்சியில் இருந்து லாகூர் நோக்கி சென்ற கராச்சி எக்ஸ்பிரஸ் ரெயிலின் முதல் வகுப்பு பெட்டியில் திடீரென தீப்பிடித்தது. இதனால் அந்த பெட்டியில் இருந்த பயணிகள் கூச்சலிட்டனர். எனவே அந்த ரெயில் தண்டோ மஸ்தி கான் என்ற ரெயில் நிலையம் அருகே நிறுத்தப்பட்டது. பின்னர் அங்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதற்கிடையில் ரெயிலில் […]

பாகிஸ்தானில் ஓடும் ரெயிலில் ஏற்பட்ட தீ விபத்தில் 3 குழந்தைகள் உள்பட 7 பேர் உயிரிழந்தனர்.

பாகிஸ்தானின் கராச்சியில் இருந்து லாகூர் நோக்கி சென்ற கராச்சி எக்ஸ்பிரஸ் ரெயிலின் முதல் வகுப்பு பெட்டியில் திடீரென தீப்பிடித்தது. இதனால் அந்த பெட்டியில் இருந்த பயணிகள் கூச்சலிட்டனர். எனவே அந்த ரெயில் தண்டோ மஸ்தி கான் என்ற ரெயில் நிலையம் அருகே நிறுத்தப்பட்டது. பின்னர் அங்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதற்கிடையில் ரெயிலில் இருந்த 3 குழந்தைகள் உள்பட 7 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். மேலும் காயம் அடைந்தவர்களை மீட்பு சிகிச்சைக்காக ம௫த்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu