இந்தியாவுடன் மீண்டும் வர்த்தக உறவை ஏற்படுத்த பாகிஸ்தான் விருப்பம்

March 25, 2024

கடந்த 2019 ஆம் ஆண்டு, இந்தியா பாகிஸ்தான் இடையே வர்த்தக உறவு துண்டிக்கப்பட்டது. புல்வாமா தாக்குதல், காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து ஆகியவற்றின் எதிரொலியாக இது நேர்ந்தது. இந்த நிலையில், இந்தியாவுடன் மீண்டும் வர்த்தக உறவை ஏற்படுத்த பாகிஸ்தான் விருப்பம் தெரிவித்துள்ளது. பாகிஸ்தான் நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் முகமது ஐசக் தார், லண்டனில் நடைபெற்ற அணுசக்தி மாநாட்டின் போது இந்த தகவலை தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் நாடு கடும் பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகிறது. இந்த நிலையில், இந்தியாவுடன் […]

கடந்த 2019 ஆம் ஆண்டு, இந்தியா பாகிஸ்தான் இடையே வர்த்தக உறவு துண்டிக்கப்பட்டது. புல்வாமா தாக்குதல், காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து ஆகியவற்றின் எதிரொலியாக இது நேர்ந்தது. இந்த நிலையில், இந்தியாவுடன் மீண்டும் வர்த்தக உறவை ஏற்படுத்த பாகிஸ்தான் விருப்பம் தெரிவித்துள்ளது. பாகிஸ்தான் நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் முகமது ஐசக் தார், லண்டனில் நடைபெற்ற அணுசக்தி மாநாட்டின் போது இந்த தகவலை தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் நாடு கடும் பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகிறது. இந்த நிலையில், இந்தியாவுடன் ஏற்படும் வர்த்தக உறவு அந்நாட்டுக்கு நன்மை அளிக்கும் என கருதப்படுகிறது. அந்நாட்டைச் சேர்ந்த தொழிலதிபர்கள் இந்தியாவுடன் வர்த்தக உறவை விரும்புவதாக முகமது ஐசக் தார் கூறியுள்ளார். பாகிஸ்தானில் அண்மையில் பதவியேற்றுள்ள புதிய அரசு, இந்தியாவுடனான உறவை புதுப்பிக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu