பாகிஸ்தானில் அடுத்த மாதம் நடைபெற இருந்த தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானில் பிப்ரவரி மாதம் எட்டாம் தேதி பொது தேர்தல் நடத்த அந்நாட்டு தேர்தல் ஆணையம் முடிவு செய்து இருந்தது. அதே சமயத்தில் அறிவிக்கப்பட்ட தேதியில் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கூறியிருந்தது. இந்நிலையில் பாகிஸ்தானில் அடுத்த மாதம் நடைபெற இருந்த பாராளுமன்ற தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதற்கான தீர்மானம் அந்த நாட்டின் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த தீர்மானத்திற்கு பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிப், பாகிஸ்தான் தகவல் தொடர்புத்துறை மந்திரி ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்த தீர்மானத்தின்படி பாகிஸ்தானில் கடுமையான குளிர்காலம் நிலவுவதால் மக்கள் வாக்களிக்க வர முடியாத சூழல் ஏற்படலாம் என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது. முன்னதாக திட்டமிட்டபடி பாராளுமன்ற தேர்தலில் நடத்தும் முடிக்க அந்நாட்டு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில், தற்போது தேர்தலை ஒத்திவைக்க கூறும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இருப்பது அந்நாட்டு அரசியலில் குழப்ப சூழலை ஏற்படுத்தி உள்ளது.