இஸ்ரேல் சிறையில் பாலஸ்தீன முக்கிய உறுப்பினர் பலி - பதற்றம் அதிகரிப்பு

May 3, 2023

பாலஸ்தீன ஆயுதக் குழுவின் முக்கிய உறுப்பினரான காதர் அட்னான், இஸ்ரேல் சிறையில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வந்தார். இந்நிலையில், சிறையில் அவர் உயிரிழந்துள்ளதால், இஸ்ரேல் - பாலஸ்தீன பகுதியில் பதற்றம் அதிகரித்துள்ளது. நெதன்யாகு தலைமையிலான இஸ்ரேல் அரசு, பாலஸ்தீனியர்கள் மீது வன்முறை தாக்குதலை அதிகரித்துள்ளது. மேலும், எந்தவித காரணங்களும் இன்றி, பாலஸ்தீனியர்கள் பலர், ‘அரசியல் கைதி’களாக இஸ்ரேல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு சிறையில் அடைக்கப்பட்டவர்கள், உண்ணாவிரதம் மூலம் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர். அந்த வகையில், […]

பாலஸ்தீன ஆயுதக் குழுவின் முக்கிய உறுப்பினரான காதர் அட்னான், இஸ்ரேல் சிறையில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வந்தார். இந்நிலையில், சிறையில் அவர் உயிரிழந்துள்ளதால், இஸ்ரேல் - பாலஸ்தீன பகுதியில் பதற்றம் அதிகரித்துள்ளது.

நெதன்யாகு தலைமையிலான இஸ்ரேல் அரசு, பாலஸ்தீனியர்கள் மீது வன்முறை தாக்குதலை அதிகரித்துள்ளது. மேலும், எந்தவித காரணங்களும் இன்றி, பாலஸ்தீனியர்கள் பலர், ‘அரசியல் கைதி’களாக இஸ்ரேல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு சிறையில் அடைக்கப்பட்டவர்கள், உண்ணாவிரதம் மூலம் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர். அந்த வகையில், கடந்த 3 மாதங்களாக உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டு வந்த காதர், நேற்று உயிரிழந்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. இது பாலஸ்தீனியர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. அதைத்தொடர்ந்து, பாலஸ்தீன ஆயுதக் குழுவினர், இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். காதர் உயிரிழந்த செய்தி வெளியானதில் இருந்து இதுவரை 22 ஏவுகணைகள் வீசப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த தாக்குதலுக்கு, இஸ்ரேல் விரைவில் பதிலடி கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், இஸ்ரேல் பாலஸ்தீன பகுதிகளில் பதற்றம் அதிகரித்துள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu