பாரிஸ் ஒலிம்பிக் 2024 தொடரில் டேபிள் டென்னிஸ் பிரிவில் இந்தியாவின் மணிகா பத்ரா தோல்வி அடைந்துள்ளார்.
பாரிஸ் ஒலிம்பிக்ஸ் 2024-ல், மணிகா பத்திரா டேபிள் டென்னிஸ் பிரிவின் பெண்கள் ஒற்றையர் பிரிவில் ஜப்பான் வீராங்கனை மியு ஹிரானோவிடம் 1-4 என தோல்வி அடைந்து போட்டியில் இருந்து வெளியேறி உள்ளார்.
மேலும் பேட்மிட்டன் பெண்கள் ஒற்றையர் பிரிவில் பி.வி.சிந்து 2 ஆவது சுற்றில் வெற்றி அடைந்துள்ளார். அதே போன்று குத்து சண்டை போட்டியில் இந்தியாவின் லவ்லினா காலிறுதிக்கு முன்னேறி உள்ளார்.