இன்று மதியம் மூன்று மணி அளவில் தலைமை தேர்தல் ஆணையர் ராஜேஷ் குமார்,ஞானேஷ் குமார், சுக்பிர் சிங் சந்து ஆகியோர் தலைமையில் பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது.
பாராளுமன்ற தேர்தல் இன்று மதியம் மூன்று மணிக்கு அறிவிக்கப்படும் என கூறி இருந்த நிலையில் இன்று தலைமை தேர்தல் ஆணையர் ராஜேஷ் குமார், ஞானேஷ் குமார், சுக்பிர் சிங் சந்து ஆகியோர் தலைமையில் செய்தியாளர்கள் சந்திப்பு தொடங்கியது. அதில் மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்கள் ஆக நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி முதற்கட்டத்தில் ஒரே கட்டமாக தமிழ்நாடு உட்பட ராஜஸ்தான், சட்டீஸ்கர், மத்திய பிரதேசம், உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் வாக்கு பதிவு நடைபெற உள்ளது. அதன்படி மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் வரும் ஏப்ரல் மாதம் 19ஆம் தேதி நடைபெறுகிறது. இரண்டாம் கட்ட தேர்தல் ஏப்ரல் 26 ஆம் தேதியும், மூன்றாம் கட்டமாக மே 7ஆம் தேதியும், நான்காம் கட்டமாக மே 13ம் தேதியும், ஐந்தாம் கட்டமாக மே 20ஆம் தேதியும், ஆறாம் கட்டமாக மே 25ஆம் தேதியும் தேர்தல் நடைபெற உள்ளது. மேலும் மக்களவை தேர்தல் முடிவுகள் ஜூன் நான்காம் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் வரும் இது மார்ச் 20ஆம் தேதி உடன் முடிவடைகிறது.