தவறான விளம்பரங்களை விளம்பரப்படுத்த கூடாது என பதஞ்சலி நிர்வாகத்திற்கு உத்தரவிடப்பட்டது.
பதஞ்சலி நிறுவனம் தவறான விளம்பரங்களை விளம்பரப்படுத்தக் கூடாது என உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்திருந்தது. இதனை மீறி பதஞ்சலி நிர்வாகம் மீண்டும் விளம்பர படுத்தியது. இதனால் பதஞ்சலி நிர்வாகம் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் பதஞ்சலி நிர்வாக இயக்குநர் ஆச்சார்யா பால்கிருஷ்னா மற்றும் யோகா குரு ராம்தேவ் ஆகியோர் பதில் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தது. ஆனால் இவர்கள் இருவரும் பதில் அளிக்கவில்லை.
இதனால் பதஞ்சலி நிர்வாக இயக்குநர் நேரில் ஆஜராக வேண்டும் என நிர்வாகியான நிறுவனரான ராம்தேவ் ஏப்ரல் இரண்டாம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. அதனை தொடர்ந்து நேற்று உச்ச நீதிமன்றத்தில் ஆஜரான ஆச்சாரியா பாலகிருஷ்ணா உச்சநீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளார். அதில் சட்டத்தின் மீது மிகுந்த மரியாதை உள்ளதாகவும், மன்னிப்பு கேட்டுக் கொள்வதாகவும், இது போன்ற விளம்பரங்கள் இனி வெளியிடப்பட மாட்டாது எனவும் தெரிவித்துள்ளார்.