பறக்கும் தட்டுகள் பற்றிய பிரத்தியேக வலைத்தளம் - பென்டகன் அறிமுகம்

September 4, 2023

உலக அளவில், பறக்கும் தட்டுகள் குறித்து பல்வேறு சர்ச்சைக்குரிய தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த நிலையில், சர்ச்சைகளுக்கு விளக்கம் அளிக்கும் வகையில், அமெரிக்காவின் பென்டகன், பறக்கும் தட்டுகள் பற்றிய பிரத்தியேக வலைதளத்தை தொடங்கியுள்ளது. இந்த வலைதளத்தை காண பொதுமக்களுக்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.   உலகின் பல பகுதிகளில், பறக்கும் தட்டுகளை பார்த்ததாக பல்வேறு தகவல்கள் உலா வருகின்றன. இது தொடர்பான பல தகவல்கள் ரகசியமாக வைக்கப்பட்டிருந்தன. தற்போது, பறக்கும் தட்டுகள் குறித்த விவரங்களை பொதுமக்கள் அறியும் வகையில், […]

உலக அளவில், பறக்கும் தட்டுகள் குறித்து பல்வேறு சர்ச்சைக்குரிய தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த நிலையில், சர்ச்சைகளுக்கு விளக்கம் அளிக்கும் வகையில், அமெரிக்காவின் பென்டகன், பறக்கும் தட்டுகள் பற்றிய பிரத்தியேக வலைதளத்தை தொடங்கியுள்ளது. இந்த வலைதளத்தை காண பொதுமக்களுக்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.

 

உலகின் பல பகுதிகளில், பறக்கும் தட்டுகளை பார்த்ததாக பல்வேறு தகவல்கள் உலா வருகின்றன. இது தொடர்பான பல தகவல்கள் ரகசியமாக வைக்கப்பட்டிருந்தன. தற்போது, பறக்கும் தட்டுகள் குறித்த விவரங்களை பொதுமக்கள் அறியும் வகையில், புதிய வலைதளத்தை பென்டகன் வெளியிட்டுள்ளது. பறக்கும் தட்டுகள் குறித்த விவரங்கள் ரகசியமாக வைக்கப்படுவதால், பல்வேறு சர்ச்சைகள் ஏற்படுவதாக பென்டகன் கூறியுள்ளது. எனவே, அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், வெளிப்படைத் தன்மையுடன் புதிய வலைத்தளம் வெளியிடப்படுவதாக கூறியுள்ளது. இது பறக்கும் தட்டுகள் குறித்த தகவல் களஞ்சியமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu