கூகுளுக்கு போட்டியாக பெர்ப்லக்சிட்டி ஏஐ தேடுபொறி - ஜெஃப் பெசோஸ், நிவிடியா முதலீடு

January 11, 2024

கூகுள் தேடுபொறிக்கு போட்டியாக, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில், பெர்ப்லக்சிட்டி ஏஐ என்ற தேடுபொறி உருவாக்கப்பட்டு வருகிறது. இதற்கு, பல்வேறு தரப்பில் இருந்து முதலீடுகள் குவிந்து வருகின்றன. குறிப்பாக, அமேசான் தோற்றுனர் பெசோஸ் மற்றும் உலகின் முன்னணி சிப் தயாரிப்பு நிறுவனம் நிவிடியா ஆகியோரிடம் இருந்து முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளது. செயற்கை நுண்ணறிவு துறையில், பெர்ப்லக்சிட்டி ஏஐ தளம் வேகமாக வளர்ச்சி கண்டு வருகிறது. இது சாட் ஜிபிடியை விட திறன் வாய்ந்ததாக சொல்லப்படுகிறது. இதுவரையில் இதற்கு 530 மில்லியன் […]

கூகுள் தேடுபொறிக்கு போட்டியாக, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில், பெர்ப்லக்சிட்டி ஏஐ என்ற தேடுபொறி உருவாக்கப்பட்டு வருகிறது. இதற்கு, பல்வேறு தரப்பில் இருந்து முதலீடுகள் குவிந்து வருகின்றன. குறிப்பாக, அமேசான் தோற்றுனர் பெசோஸ் மற்றும் உலகின் முன்னணி சிப் தயாரிப்பு நிறுவனம் நிவிடியா ஆகியோரிடம் இருந்து முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளது.

செயற்கை நுண்ணறிவு துறையில், பெர்ப்லக்சிட்டி ஏஐ தளம் வேகமாக வளர்ச்சி கண்டு வருகிறது. இது சாட் ஜிபிடியை விட திறன் வாய்ந்ததாக சொல்லப்படுகிறது. இதுவரையில் இதற்கு 530 மில்லியன் டாலர்கள் மதிப்பில் முதலீடுகள் கிடைத்துள்ளது. அரவிந்த் ஸ்ரீனிவாஸ், பெர்ப்லக்சிட்டி நிறுவனத்தின் தோற்றுநர் ஆவார். கூகுளை புறந்தள்ளும் சிறந்த தேடுபொறியை உருவாக்கி வருவதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும், கூகுள் மற்றும் மைக்ரோசாப்ட் தளங்களுடன் ஒப்பிடுகையில், பயனர்களுக்கு மாறுபட்ட அனுபவத்தை பெர்ப்லக்சிட்டி ஏஐ தரும் என கூறுகிறார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu