ஆண்டுக்கு ஒரு முறை தென்படும் எரிநட்சத்திர நிகழ்வு - ஆகஸ்ட் 11 முதல் 13 வரை காணலாம்

பூமியில், அரிதான வானியல் நிகழ்வுகள் அவ்வப்போது ஏற்படும். அந்த வகையில், ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே எரி நட்சத்திர நிகழ்வு தென்படும். பெர்சீட்ஸ் மீட்டார் ஷவர் என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் இந்த நிகழ்வு, தற்போது உச்சநிலையை அடைந்துள்ளது. அதன்படி, இந்த நிகழ்வின் தெளிவான காட்சிகளை ஆகஸ்ட் 11 முதல் 13ம் தேதி வரையில் காணலாம் என கூறப்பட்டுள்ளது. இரவு நேர வானில், அதிக எண்ணிக்கையிலான எரி நட்சத்திரங்கள் பூமியில் விழுவது இந்த நிகழ்வில் காணப்படுகிறது. கடந்த ஜூலை […]

பூமியில், அரிதான வானியல் நிகழ்வுகள் அவ்வப்போது ஏற்படும். அந்த வகையில், ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே எரி நட்சத்திர நிகழ்வு தென்படும். பெர்சீட்ஸ் மீட்டார் ஷவர் என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் இந்த நிகழ்வு, தற்போது உச்சநிலையை அடைந்துள்ளது. அதன்படி, இந்த நிகழ்வின் தெளிவான காட்சிகளை ஆகஸ்ட் 11 முதல் 13ம் தேதி வரையில் காணலாம் என கூறப்பட்டுள்ளது.

இரவு நேர வானில், அதிக எண்ணிக்கையிலான எரி நட்சத்திரங்கள் பூமியில் விழுவது இந்த நிகழ்வில் காணப்படுகிறது. கடந்த ஜூலை 17ஆம் தேதி தொடங்கிய இந்த நிகழ்வு, ஆகஸ்ட் 24 ஆம் வரையில் காணப்படும். எனினும், இதனை ஆகஸ்ட் 11 முதல் 13 ஆம் தேதி வரையில், மிகத் தெளிவாக காணலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த 3 தினங்களில், ஒரு மணி நேரத்திற்கு 100 எரி நட்சத்திரங்கள் வரையில் பூமியில் விழும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இந்திய நேரப்படி மதியம் 1:28 மணி அளவில் எரி நட்சத்திர நிகழ்வை காண முடியும் என தெரிவித்துள்ளனர். குறிப்பாக, பூமியின் வடக்கு பக்கத்தில் இந்த நிகழ்வை காணலாம்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu