அரசியல் நெருக்கடிக்கு மத்தியில், பெரு நாட்டு அமைச்சரவையில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது

November 26, 2022

அரசியல் நெருக்கடிகளுக்கு மத்தியில், பெரு நாட்டு அதிபர் பெட்ரோ காஸ்டிலோ, அமைச்சரவையில் முக்கிய மாற்றங்களை அறிவித்துள்ளார். குறிப்பாக, 6 அமைச்சகங்களின் தலைமை அமைச்சர்கள் மாற்றப்பட்டுள்ளனர். எரிசக்தி மற்றும் சுரங்கத் துறை அமைச்சராக ஆலிவரியோ முன்னோஸ் நியமிக்கப்பட்டுள்ளார். நிதி அமைச்சர் குர்ட் பர்னியோவின் பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், எதிர்க்கட்சிகள் பெரு நாட்டின் பிரதமர் நியமிக்கப்பட்டதில் முறைகேடுகள் நடந்துள்ளதாக குற்றம் சாட்டி வருகின்றன. காங்கிரஸ் கட்சியினர் நம்பிக்கை இல்லா தீர்மானத்திற்கு ஆதரவு தர மறுத்ததால், அமைச்சரவை கலைக்கப்பட்டு புதியவர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக […]

அரசியல் நெருக்கடிகளுக்கு மத்தியில், பெரு நாட்டு அதிபர் பெட்ரோ காஸ்டிலோ, அமைச்சரவையில் முக்கிய மாற்றங்களை அறிவித்துள்ளார். குறிப்பாக, 6 அமைச்சகங்களின் தலைமை அமைச்சர்கள் மாற்றப்பட்டுள்ளனர்.

எரிசக்தி மற்றும் சுரங்கத் துறை அமைச்சராக ஆலிவரியோ முன்னோஸ் நியமிக்கப்பட்டுள்ளார். நிதி அமைச்சர் குர்ட் பர்னியோவின் பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், எதிர்க்கட்சிகள் பெரு நாட்டின் பிரதமர் நியமிக்கப்பட்டதில் முறைகேடுகள் நடந்துள்ளதாக குற்றம் சாட்டி வருகின்றன. காங்கிரஸ் கட்சியினர் நம்பிக்கை இல்லா தீர்மானத்திற்கு ஆதரவு தர மறுத்ததால், அமைச்சரவை கலைக்கப்பட்டு புதியவர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. காஸ்டிலோ பதவிக்கு வந்ததிலிருந்து அமைச்சரவையில் பல்வேறு மாற்றங்கள் கொண்டு வரப்படுவது தொடர்கதையாகி வருகிறது. அந்நாட்டில் தொடர்ந்து அரசியல் நெருக்கடி நீடித்து வருகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu