பாகிஸ்தானில் உள்ள பெஷாவர் பகுதியில், நேற்று மதியம் மசூதி ஒன்றில் தற்கொலை படை தாக்குதல் நடந்தது. மதிய நேர தொழுகையின் போது நடத்தப்பட்ட இந்த தாக்குதலில், இதுவரை 93 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 200க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளதாகவும் தகவல் வெளிவந்துள்ளது.
தற்கொலை படையை சேர்ந்த ஒருவர் தொழுகை வேலையில் முதல் வரிசையில் இடம் பிடித்துள்ளார். அங்கிருந்து அவர் வெடிகுண்டை வெடிக்கச் செய்ததில், மேற்கூரை இடிந்து மக்களின் மேல் விழுந்துள்ளது. அதன் அடியில் பலர் சிக்கி உள்ளனர். இதனிடையே குண்டுவெடிப்பு நேர்ந்ததால், உயிரிழப்புகள் அதிகரித்துள்ளது. இது குறித்து விசாரித்து வரும் காவல்துறை அதிகாரிகள், தற்கொலை தாக்குதல் நடத்தியவனை கண்டறிந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். மேலும், குண்டுவெடிப்பிற்கு சில மணி நேரத்திற்கு முன்பே அவன் அங்கு வந்ததாகவும் தெரியவந்துள்ளது.
இந்த தற்கொலை படை தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ள பாகிஸ்தானி தாலிபான் அமைப்பு, கடந்த வருடம், ஆப்கானிஸ்தானில் கொல்லப்பட்ட காலித் கொரசானி இறப்பிற்கு பழிவாங்கும் நோக்கில், இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக குறிப்பிட்டுள்ளது. இந்த தீவிரவாத அமைப்பு அல்கொய்தா உடன் நெருங்கிய தொடர்பில் உள்ளதாக கருதப்படுகிறது.