ஜம்மு-காஷ்மீரில் சட்டசபை தேர்தல் 3 கட்டங்களில் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
2019ல் மத்திய அரசு ஜம்மு-காஷ்மீருக்கு வழங்கிய சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தது, இதன் மூலம் அந்த மாநிலம் இரு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து இப்போது, சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. அதன்படி 90 தொகுதிகளுக்கு செப்டம்பர் 18, 25 மற்றும் அக்டோபர் 1-ஆம் தேதிகளில் 3 கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. முதல் கட்டத்திற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 20-ந்தேதி தொடங்கப்பட்டது, 279 பேர் மனுதாக்கல் செய்தனர். 35 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டு, மீதமுள்ள 244 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. 2-ம் கட்டத்திற்கான வேட்புமனு தாக்கல் தொடங்கியுள்ளது.